புரட்டுகளின் மீது தான் முரட்டுத் தன வெற்றி என்பதால், இன்னமும் அந்த பொய்களை மெயிண்டெய்ன் செய்து கொண்டே இருக்கிறார்கள். ”மோடியின் 10” என்று 18-ஆம் தேதி தினமலர் பட்டியல் போட்டிருக்கிறது. இரண்டாவது இரும்பு மனிதர் என்று கட்டுரை வெளியிட்டிருக்கிறது. திரும்பத் திரும்ப குஜராத்-தை முதன்மை மாநிலமாக்கினார் என்று வாய் கூசாமல் பொய் சொல்லவும், கை கூசாமல் எழுதவுமாக இருக்கிறார்கள். கையில் விளக்குமாறுடன் ஏதோ ஒரு உழைப்பாளியின் படத்தில் தலையை வெட்டி மோடியின் படத்தை ஒட்டி வெளியிடப்பட்ட படத்தைப் பற்றி பலறை எழுதப்பட்டும் கூட இன்னமும் உண்மையான படம் போல அதைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். பொறியாளர் பெண்ணிடம் கடலை போடுவதற்காக தனியாக உளவுத் துறையில் ஒரு பிரிவே வைத்திருந்த மோடிதான் சுத்தமான அரசு வாழ்க்கை வாழ்ந்தவர் என்று அடித்துச் சத்தியம் செய்கிறது தினமலம். அரசுப் பணியில் அய்.ஏ.எஸ்-ஆக இருப்பவர்கள் அரசு சம்பளத்தில், அதிகாரத்தில் இருந்துகொண்டே மோடியின் அரசியல் பணிக்கு எப்படி பயன்பட்டார்கள் என்பதையும் கூச்சநாச்சமின்றி படம்போட்டு பெருமை கொள்கிறார்கள். குஜராத் வளர்ந்த மாநிலம் என்று பீலா விட்டு ஏமாற்றி...
சிரமப்படாதீங்க... பதம் பிரிச்சு சொல்றேன். "பிரின்சு என் ஆர் சமா". இப்படித்தான் படிக்கணும்.