ஒருவழிச்சாலையில் கூட்டமே இல்லை என்று தப்பித்தவறி எதிர்த் திசையில் சென்று விட்டாலும் போக்குவரத்து காவலரிடம் மாட்டிக் கொண்டால் போச்சு... அதிலும் அண்ணா சாலை பகுதியில் என்றால் கேட்கவே வேண்டியதில்லை. திட்டுவார்கள் அல்லது தீட்டிவிடுவார்கள். ராயப்பேட்டையிலிருந்து காங்கிரஸ் குத்துச்சண்டை மைதானம் வழியாக அண்ணா சாலைக்குள் நுழையும் சாலை அப்படிப்பட்ட சாலைகளில் ஒன்று! ஆனால், அதே போக்குவரத்துக் காவல்துறையினர் இந்தப் பக்கமா போங்க... இந்தப் பக்கமா போங்க... என்று சந்துக்கிருவராய் நின்று வழி திருப்பிவிட்டால் எவ்வளவு மகிழ்ச்சியாயிருக்கும். அந்த அனுபவம் தான் இன்று! ஆம். மெட்ரோ பணிகள் நடப்பதால், அண்ணாசாலை தர்காவைத் தாண்டி அதே சாலையில் சைதை நோக்கிச் செல்வதைத் தடுத்து, ராயப்பேட்டை திரு.வி.க சாலை வழியாகச்சுற்றி, மணிக்கூண்டு தாண்டி ஒயிட்ஸ் சாலை வழியாக அண்ணா சாலையில் மீண்டும் நுழையுமாறு வழி அமைத்திருக்கிறார்கள். அதே போல் திரும்பி வரும் வழியில், அண்ணா சாலையில் இருபக்கச் சாலைகளிலும் சென்ட்ரல் நோக்கிச் செல்லலாம். இரவில் கூட இவ்வழி தைரியமாகப் பயணம் செய்யமுடியாது. ஆனால் இன்று தெனாவட்டா...
சிரமப்படாதீங்க... பதம் பிரிச்சு சொல்றேன். "பிரின்சு என் ஆர் சமா". இப்படித்தான் படிக்கணும்.