இந்நேரம் செத்துச் சுண்ணாம்பு ஆகியிருக்க வேண்டிய நான் இன்று எல்லா சுகங்களுடன் சென்னையில் கணினியின் முன் உட்கார்ந்து உங்களோடு மருத்துவத்தை விமர்சிக்கக் கூட காரணமான அந்த மருத்துவரின் பிறந்தநாளில் அவரை நன்றி விசுவாசத்துடன் நினைவு கூர்ந்து தான் கூறுகிறேன், நாம் மருத்துவத்தால் அழிந்தோம். உயிரைக் கொல்வோரை காவு கொடுப்போரை மண்ணோடு பெயர்த்த கடப்பாரை! வானம் உள்ளவரை வையம் உள்ளவரை யார் இங்கு மறப்பார் மருத்துவரை! ---------------------------------------------------------------- இப்படி திடீரென்று சம்மந்தமே இல்லாமல் எனது Status Message-அய் பார்த்த நண்பர்கள் கொஞ்சம் பதறித்தான் போனார்கள்.. என்னாச்சு என்று! காரணம் முதல் வரியைப் படித்ததோடு பேசியவர்கள், Chat-இல் கேட்டவர்கள் அனைவரும் என் உடல் நிலையைப் பற்றியும், முழுவதும் பொறுமையாக படித்தவர்கள் என் குழப்பம் குறித்தும் கேட்டார்கள். அனைவரின் அக்கறைக்கும் நன்றியுடையேன். இப்படி திடீரென்று சம்மந்தமே இல்லாமல் நான் Status Message போடக் காரணமும் இல்லாமல் இல்லை. எனது நண்பர் சேனா.பானா- வின் Status Message-க்க...
சிரமப்படாதீங்க... பதம் பிரிச்சு சொல்றேன். "பிரின்சு என் ஆர் சமா". இப்படித்தான் படிக்கணும்.