எங்கே என்ன நடந்தாலும் அதில் தங்களுக்கென துண்டைப் போட்டு சீட்டைப் ப்டிப்பதில் மூட நம்பிக்கை வியாபாரிகளுக்கு நிகர் யாரும் கிடையாது. உலகக்கோப்பை கிரிக்கெட் ஆனாலும் சரி, உலகே வியந்து பார்க்கும் கிரகணம் ஆனாலும் சரி... தங்களது கடையை விரித்து மக்களின் பயத்தை மூலதனமாக்கி, தங்களின் மூடநம்பிக்கைச் சரக்கை விற்று கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர். உடனடி லாபம் என்றெல்லாம் கூட இல்லை... இதன் மூலம் விதைத்துவிட்டால் வேறெங்காவது கூட அறுவடை செய்து கொள்ளலாம். இது தான் சாக்கென்று கிரகணத்தையொட்டி சுனாமி வரும். பினாமி வரும் என்று பீதியை வேறு கிளப்பி விடுகிறார்கள். சுனாமி வருவதற்கு என்ன காரணம் என்று கூட இந்தப் பன்னாடைகளுக்குத் தெரிவதில்லை. சரியாக இந்த நேரத்தில் டெக்டானிக் பிளேட் நகருமாம். அடங்கொய்யால...! சரி, அத்தோடு விட்டார்களா... ஒரே நேரத்தில் ஆற்றில் இறங்கி புண்ணியம் தேடப்போய் இரண்டு பேரைப் பிணமாக்கியதுதான் மிச்சம். கிரகண நேரத்தில் சாப்பிடக் கூடாது என்றொரு மூடநம்பிக்கை வேறு! அடக் கொடுமையே.... சாப்பிடறதுக்கும் கிரகணத்துக்கும் என்னப்பா தொடர்பு! ராகு சூரியனைச் சாப்பிடுதுன்னு கதை கட்டியிருக்கான்னா... நான் ரவா கேச...
சிரமப்படாதீங்க... பதம் பிரிச்சு சொல்றேன். "பிரின்சு என் ஆர் சமா". இப்படித்தான் படிக்கணும்.