முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Copy cat-ஆ பெரியார்?

”பெட்ரண்ட் ரசலின் Marriages and Morals நூலைத் தான், தமிழில் ”பெண் ஏன் அடிமையானாள்?” என்று காப்பியடித்தாரா பெரியார்? ”பெட்ரண்ட் ரசலின் Marriages and Morals நூலைத் தான், தமிழில் ”பெண் ஏன் அடிமையானாள்?” என்ற பெயரில் காப்பியடித்தார் பெரியார் என்று ஓர் அரைவேக்காடு எழுதியிருக்கிறது. அதை எப்படியும் நாளை காலைக்குள் ஆயிரக்கணக்கான முட்டாள்கள் பகிரப் போகிறார்கள். சங் பரிவாரின் காலைநக்கும் கும்பல் அதை மீம்சாக்கி பரப்பப் போகிறார்கள். போர்டு தாஸ் மாதிரியான கூலிகள் வீடியோவும் போடுவார்கள். நாம் சொல்ல வேண்டிய உண்மையைச் சொல்லி வைப்போம். “பெண் ஏன் அடிமையானாள்?” என்ற நூலில் உள்ள கருத்துகள் பெரியாருக்குத் திடீரென்று ஒரே நாளில் தோன்றி எழுதப்பட்ட சிந்தனைகள் அல்ல. தந்தை பெரியார் தன் குடும்பத்தில் அதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே மறுமணம் செய்துகாட்டியதில் தொடங்கி, பெண்ணுரிமை பற்றிய சிந்தனைகள் ஒவ்வொரு கட்டத்திலும் அவருக்கு எப்படி பரிணமித்து வந்திருக்கின்றன என்பதைப் பெரியாரைப் படிப்பவர்கள், படித்தவர்கள் உணர முடியும். அதெல்லாம் தெரியாமல், வன்மத்தை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு திரியும் இந்த ஸோம்பிகள், 'தான் த...

நினைவூட்டல் குறிப்புகள்

பணியில் இருக்கும்போது படித்துக் கொண்டிருக்கும்போது போனில் யாருடனும் பேசிக் கொண்டிருக்கும்போது பயணத்தில் இருக்கும்போது அடுத்தடுத்து செய்ய வேண்டியவற்றை நினைவில் வைக்கக் குறித்துக் கொள்வதுண்டு. துண்டுச் சீட்டோ டிக்கெட் பின்புறமோ சரியான குறிப்பேடோ சட்டை உள்மடிப்போ செல்பேசியோ உள்ளங்கையோ பத்துரூபாய் நோட்டோ குறிப்பெடுக்கப் பயன்படும். தேர்வு நேரங்களில் அமைதியான சூழலில் கேள்விக்கான பதிலை விட அடுத்தடுத்து செய்ய வேண்டிய பணிகளோ, நெடுங்காலத் திட்டங்களுக்கான நினைவூட்டல்களோ கேள்வித் தாளில் பிட் என்று கருத முடியாத அளவிற்கு குறித்துவைத்துக் கொள்வதுண்டு. எதுவும் இல்லையென்றால் பக்கத்தில் இருப்பவர் தான் என் குறிப்பேடு. எனக்கு மறந்துவிட்டாலும் ஏன் நினைவூட்டவில்லையென்று அவர் மேல் பொறுப்பைப் போடலாம். யாருடைய வேண்டுகோளானாலும் ’நீங்களே மீண்டும் மீண்டும் நினைவூட்டி என்னிடமிருந்து வேலையை முடித்துக் கொள்ளுங்கள். நான் தவறாக நினைக்க மாட்டேன்’ என்று சரண்டர் ஆகிவிடுவதுண்டு. நினைவூட்டுவதற்கு இவை, இவர்கள் இல்லாமல் என்ன செய்வது என்று யோசித்ததுமுண்டு. கையில் தாளோ, எழுதுகோலோ பக்கத்தில் ஆளோ செல்பேசியோ கணினியோ இருக்க முடியா...

டே... உங்களுக்கெல்லாம் வெட்கமே கிடையாதா? - இந்து முன்னணி புரட்டுகளுக்கு பதில் -

ரம்ஜான் நோன்புக் கஞ்சிக்கு ஏழை எளிய இஸ்லாமியருக்கு அரசு அரிசி வழங்கக்கூடாது என்ற இந்துமுன்னணியின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது பற்றி அனைவரும் செய்திகளில் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், இந்த வெட்கங்கெட்ட இந்து முன்னணி கும்பல், உயர்நீதிமன்றத் தீர்ப்பு நகலை இணைத்து, வாட்ஸ் அப்பில் என்ன பரப்பி வருகிறது பாருங்கள். //ரம்ஜான் அரிசி இந்துமுன்னணி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாக சில ஊடகங்கள் தவறான தகவல் இந்துமுன்னணி அமைப்பு வழக்காக ஏற்காமல் அதன் மாநில செயலாளர் குற்றாலநாதன் தொடுத்த தனிநபர் பொது நல வழக்காக ஏற்று தமிழக அரசு விளக்கமளிக்க உத்திரவிட்டு மே 7 ம் தேதி மீண்டும் விசாரணை இதோ உயர்நீதிமன்றம் உத்திரவு நகல். நீங்களே படித்து கொள்ளுங்கள். உத்திரவை நீதித்துறை மீது திணிக்கிறதா சில ஊடகங்கள் ? தமிழகத்தில் சில ஊடகங்களே நீதிபதியாவது வேடிக்கை// நமது பதில்: ஆம், இந்து முன்னணியின் கெட்ட நோக்கம் கொண்ட கோரிக்கையை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. கேடுகெட்ட மனப்பான்மையுடனும், கொடுங் குணத்துடனும் இந்து முன்னணி மதவெறி கும்பல் தொடுத்த வழக்கில் மாண்புமிகு உயர்நீதிமன்றம் மிகச் சிறப்பாகத் தீ...

#restartகதைகள்

எப்போது என் கணினியை மறு தொடக்கம் (Restart) செய்வது என்பதை நான் முடிவு செய்வதில்லை. Shut down / Turn off எல்லாம் ஆண்டுக்கு ஓரிரு முறை நிகழ்ந்தாலே ஆச்சரியம் தான். பயணங்களுக்குத் தயாராகும்போதும், ‍ Hybernate / Sleep mode / Stand by இல் தான் மடிக்கணினிப் பைக்குள் புதையும். நான் உறங்கும்போது அதுவும் சற்று அயருமே தவிர, எந்நேரமும் அரைத் தூக்கத்தில் விழிப்போடு இருக்கும் வீட்டுக் காவலரைப் போல் தான் கடமையாற்றும். மறு தொடக்கம் செய்வதற்கு எனக்கொரு அளவுகோல் உண்டு. 'கண்ணைக் கட்டுது...கொஞ்சம் கேப் கொடுடா..!' என்று என் கணினி என்னிடம் சொல்வதற்கு மைக்ரோசாப்டுக்குத் தெரியாத மொழி ஒன்று உண்டு. மைக்ரோசாப்டுக்குத் தெரிந்த மொழி என்பது, 'கடுப்பாகி', அதுவே தானே மறுதொடக்கம் செய்வது! நான் சொல்வது அதற்கும் முந்தைய நிலை. நான் பயன்படுத்தும் தமிழ் எழுதி ‍ யை இயக்குவதற்கு F3 பொத்தானை அமுக்கினால், எப்போது தமிழ் எழுத்து வராமல், டொய்ங் என்ற ஒலியோடு Find பட்டி திறக்கிறதோ, அது தான் என் மடிக்கணினி எனக்குத் தன் அயர்வைத் தெரிவிக்கும் முதல் தருணம். அப்போது நான் கவனித்துவிட வேண்டும். எனினும் இரக்கமற்றவனாய், உடனே...

கொரோனா கற்றுக் கொடுக்கும் பாடங்கள்!

கொரோனா காலம் நமக்கு முக்கியமான பாடம் ஒன்றை எடுத்துக் கொண்டிருக்கிறது. குறுகிய காலம் - நெடுங்காலம் என்று இரண்டு போக்குகளில் அந்தப் பாடம் நமக்குப் பயன்படும். எது அடிப்படைத் தேவை? எது அன்றாடத் தேவை? எது எதெல்லாம் வாய்ப்பிருந்தால் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது? எவைவெல்லாம் அவசியமில்லாத செலவுகள்? எவை ஆடம்பரச் செலவுகள்? என்று நம் மனதிற்குள் இந்நேரம் ஒரு பெரிய பட்டியல் உருவாகியிருக்க வேண்டும். #குறுகிய_காலப்_பாடம் : வெள்ளம் சூழும் நேரத்தில் அவசரத்திற்கு, அவசியமான பொருட்களை எடுத்துக் கொண்டு பாதுகாப்பாக எப்படி வெளியேறுவோமோ, அப்படியான சூழல் தான் இப்போது! செம்பரம்பாக்கத்தம்மன் புண்ணியத்தில் அரிதாக, ஒன்றிரண்டு புயல், வெள்ளக் காலங்களைத் தவிர பேரிடர் கால அனுபவம் நமக்கு மிகவும் குறைவு. எப்போதும், இதமான, மிதமான கால நிலைகளையும் அனுபவித்து சொகுசு வாழ்க்கைக்குப் பழகியவர்கள் நாம். அதையெல்லாம் கொஞ்சம் ஒதுக்கிவைத்துவிட்டு, காய் இல்லை, கறி இல்லை, ஃபிரஷ்ஷா கிடைக்கவில்லை என்றெல்லாம் ரொம்ப அலட்டிக் கொள்ளாமல், கஞ்சியோ, கூழோ குடித்துக் கொண்டிருந்தாலும், அந்த அளவு தான் அரசு ஊற்றும் என்ற சூழல் வந்தாலும், அதில் தாக்...

நெட்டிலிங்க மரமும் பாவாடை அணிந்த சிறுமியும்

கணிதத்தின் அடிப்படையைப் புரிய வைக்க முயலாமல் கணக்கு போடுவதற்கு எளிய முறை என்று பல வழிமுறைகளை பயிற்றுவிப்பதைக் கவனித்திருக்கிறீர்களா? எங்கள் சிறு வயதில்... பள்ளிக்கு பல்வேறு துறைகளைச் சார்ந்தோர் வருவார்கள். அவரவர் முயற்சியில் பல புதிய விசயங்களை அறிமுகப்படுத்துவார்கள். உண்மையில் அப்படிப்பட்ட அறிமுகங்கள் ஆர்வத்தை விதைத்தன என்பதை மறுப்பதற்கில்லை. மேஜிக் செய்பவர், அறிவியல் விளக்கங்கள் சொல்பவர், எளியமுறை கணிதம் என்று கணித விளக்கம் சொல்பவர், தாளை நறுக்கி அதில் பல்வேறு வேலைப்பாடுகள் செய்பவர், ஓவியத்தில் பூ வேலைப்பாடுகள் கற்றுத் தருபவர், குட்டிக் குட்டித் தையல்கள், பந்து-கூடைகள் நெய்யக் கற்றுத் தருபவர், விதவிதமான பேனா பென்சிகள் விற்பவர், பெட்ரோலைச் சேமிக்கும் புதிய வகை கார்ப்பரேட்டர் விற்பவர் என்று ஏராளமாக வருவார்கள். அவர்களில் சிலர் தங்கள் திறமைக்கு டிக்கெட் பணம் போல இரண்டு ரூபாய், அய்ந்து ரூபாய் வாங்கிக் கொள்வார்கள். சிலர் 8 பக்கத்திலோ, 16 பக்கத்திலோ ஏறத்தாழ சாம்பலைத் தாண்டி கருப்புக்கு நெருக்கமான நிறத்திலான சாணித் தாளிலும், அதே தரத்தில் மிக மெல்லிய காகிதக் கொடி தடிமனிலான வண்ண மேல்தாளிலு...

புதிய திரட்டி “தமிழ்ச்சரத்”திற்கு வாழ்த்துகள்!

புதிய திரட்டி தமிழ்ச் சரத்திற்கு வாழ்த்துகள்! நான் வலைப்பூவுலகத்திற்குள் எண்ணற்ற திரட்டிகள் இருந்தாலும், என் மனம் கவர்ந்தது தமிழ்மணம். இன்று எப்படி பித்துப் பிடித்ததுபோல முகநூலின் காலக்கோட்டை அடிக்கடி புதுப்பித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறேனோ, அப்படி ஒரு காலத்தில் தமிழ்மணம் திரட்டியை மீண்டும் மீண்டும் புதுப்பித்துப் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறேன். மைக்ரோ பிளாக்கிங்கும், சமூக ஊடகங்களும் பெருகிய பின், அருகிப்போன வலைப்பூ பரப்பில், அவ்வப்போது முக்கிய பதிவுகளை மட்டும் பதிவேற்றிவிட்டு, ஒரு காலத்தில் ஓடிவிளையாடிய பூங்காவில் காய்ந்த சருகுகளுக்கு மத்தியில் கால்பதித்துத் திரும்புதல் போலச் சென்று வருவேன். நீச்சல்காரனின் பதிவொன்று, எதிர்நீச்சல் பதிவாக முகநூலில் கண்ணில் பட்டது. பூங்காவைப் புதுப்பித்து, பூச்சரம் தொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளமை கண்டு மகிழ்ந்தே, நானும் ‘தமிழ்ச்சரம்’ வலைப்பூ திரட்டியில் பதிவு செய்துள்ளேன். நல்முயற்சி வெல்ல வாழ்த்துகள்! 

இடஒதுக்கீட்டால் உயர்ந்த ஒருவர் சுயஜாதித் திருமணம் மூலம் இன்னொரு ஒடுக்கப்பட்டவரை முன்னேற்ற முடியுமா?

அண்ணன் டி.வி.எஸ்.சோமு அவர்களின் வாட்ஸ் அப் பதிவுக்கு (பேஸ்புக்கிலும் போட்டுள்ளார் - https://www.facebook.com/reportersomu/posts/1945338828943651) நான் இட்ட பதில் இங்கே தொகுத்துத் தரப்படுகிறது. //என் நண்பன் சொன்னது: "ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த நான், என் சாதிக்கான இட ஒதுக்கீட்டில் படித்தேன்; உதவித்தொகை வாங்கினேன்; அரசு வேலையில் சேர்ந்தேன்: பதவி உயர்வு பெற்றேன். ஆனால் என் சாதி இழிவானது என எண்ணினேன்; ' உயர் சாதி' என நம்பப்படும் ஒரு பெண்ணை திருமணம் செய்தால் இந்த 'இழிவு' நீங்கும் என 'காதலித்து ' மணம் புரிந்தேன். இப்போதுதான் உணர்கிறேன்... எனக்கு கல்வி வேலை, பதவி உயர்வு, வாழ்க்கை அளித்த என் சாதியிலேயே திருமணம் செய்திருந்தால், அதே ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த இன்னொரு குடும்பமும் முன்னேறி இருக்கும் அல்லவா?!" என்றார். அவரது கேள்விக்கு எனக்கு பதில் சொல்லத் தெரியவில்லை! - டி.வி.எஸ். சோமு// என் பதில்: சரி, தவறு என்பதை படிப்போர் முடிவு செய்து கொள்ளுங்கள். அண்ணன் சோமு அவர்களின் நண்பர் அறிந்துகொள்ள வேண்டிய செய்திகளைக் குறிப்பிடுகிறேன். 1. “என் சாத...

திருக்குறளை மலத்தோடு ஒப்பிட்டாரா பெரியார்? உண்மை என்ன?

இதைத் தான் அயோக்கியத்தனம் என்கிறோம். எதை? குறளை பெரியார் மலத்துடன் ஒப்பிட்டார்... இதோ ஆதாரம் என்றார்கள்.  எது? இது தான் அது!  "வள்ளுவர் குறளையும் அந்தப்படியே அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன். எல்லாவற்றையும் குறை சொல்லும்போது பலர் என்னிடம், எல்லாம் போய்விட்டால் நமக்கு எதுதான் நூல் என்று கேட்பார்கள். நான் இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது; அதை எடுத்து விடு என்று கூறினால் அந்த இடத்தில் என்ன வைப்பது? என்று கேட்பதா என்று பதில் கூறுவேன்."  பார்த்தியா... பார்த்தியா... இதைத்தான் சொன்னோம்னு குதிச்ச கூமுட்டைகள், கூமுட்டைகள் சொல்லுக்குக் குட்டிக்கரணம் போட்ட கூறுகெட்டதுகள் எல்லோரையும் நாம் கேட்டுக் கொள்வது, அந்தக் கட்டுரையை முழுமையாகப் படியுங்கள் என்பது தான். அவ்வளவு வேண்டாம்... அதற்கு முன்னேபின்னே என்ன சொல்லியிருக்கிறார்.. அதைப் படித்தாலே புரியும் அவரது நேர்மைத் திறம்கொண்ட பார்வை!  பெரியாருக்குப் பொழிப்புரை, தெளிவுரையெல்லாம் தேவையில்லை. இதோ பெரியார் பேசுகிறார்... கேளுங்கள்! "மக்களுக்கும் நான் குறள் பற்றி பேசுவது மிகுந்த ஆச்சரியமாய் இருக்க...

வி.பி.பி-யில் வாங்கிய முதல் புத்தகம்

Dear Sir, Kindly send me a copy of xxxx xxxxx xxxxxxx by V.P.P. at an early date and oblige. Yours Sincerely, xxx xxx xxx x இந்தக் கடிதம் பலருக்கு இன்னும் பசுமையாக நினைவிருக்கும். பள்ளியில் VPP Letter writing என்பது ஏறத்தாழ 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை வெவ்வேறு வடிவங்களில் தொடரக் கூடிய ஒன்று. இருப்பதிலேயே எளிமையானவை என்றால் அதில் முதலிடம் இந்த VPP Letter க்கு உண்டு. சொளையாக 10 மதிப்பெண்... கொஞ்சம் பிசகினாலும் 5 அல்லது 6 நிச்சயம். அதனால் அதற்கு மவுசு உண்டு. மதிப்பும் உண்டு. Value Payable by Post என்று முழுமையாக எழுத வேண்டிய அவசியம் கூட இல்லை என்பது அதன் சிறப்பம்சங்களில் ஒன்று ;) ஆனால், அந்தக் காலகட்டத்திலும் சரி, அதற்குப் பிறகும் சரி. விபிபி-யில் என்னால் புத்தகம் வாங்க முடிந்ததே இல்லை. வி.பி.பி.-யில் அனுப்ப இயலாது என்றே பதிப்பகங்களில் விளம்பரங்களில் குறிப்பிட்டுக் கொண்டிருந்தன. பின்னாளில் அமேசான், பிளிப்கார்ட் வகையறாக்களில் வாங்கத் தொடங்கியபோது, அவர்கள் வழங்கிய Cash on Delivery வாய்ப்பு ஏறத்தாழ விபிபி மாதிரி தான். கடந்த வாரம் Cellars of the Inferno புத்தகத்தை வா...

சிறைக்குச் செல்வது அவமானம் - தினமலர்

“எந்தக் காரணமாக இருந்தாலும் சிறைக்குச் செல்வதுஅவமானம். அதனால் தான் எங்கள் மன்னிப்புக் கடித மாவீரர்கள் பாரதியார் தொடங்கி சவர்க்கர், வாஜ்பேயி வரை எல்லோரும் அந்த அவமானத்திற்குப் பயந்து சிறைக்கே போகவில்லை. திருட்டு சிடி வழக்கில் உள்ளே போவதும் கூட அவமானம் தான் என்றாலும், அதற்கெல்லாம் மன்னிப்புக் கடிதத்தை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்கிறார்கள் இப்போது. இந்த அவமானம் கூடாது என்பதால் தான் முந்தைய காலத்தில் மனுதர்மத்தை வைத்துக் கொண்டு வர்ணத்திற்கேற்ப Classified criminal code வைத்து தண்டனையைப் பிரித்துத் தந்தோம். இந்த வெள்ளக் காரக் கடன்காரன் மெக்காலே தான் எல்லாரையும் ஒரே தட்டில் வச்சு தண்டனை தரணுமிண்டான். கடன்காரன்... கடன்காரன்...” தினமலர் சப் எடிட்டர் அம்பி எழுதி, பின்னர் தினமலர் எடிட்டோரியலில் கொட்டைபோட்ட மாமா, பூணூலைச் சொறிந்தபடி, “இப்படி பட்டாங்கமாவாடா எழுதுவே... அசடு... அசடு” என்று அவனைத் திட்டிண்டே கசக்கித் தூக்கிப் போட்ட பகுதி. (சிறைக்குச் சென்ற வ.உ.சியையும், ஓடிப் போன பாரதியையும் பற்றி அண்ணன் இசை இன்பன் எழுதிய பேஸ்புக் பதிவிலிருந்து எடுத்து படம்)

பொள்ளாச்சி அவலம்: ஆசிரியரின் பேச்சும், பார்ப்பனர்களின் ஏச்சும்!

பொள்ளாச்சி அவலம் தொடர்பாக நாடே கொந்தளிப்பில் இருக்கிறது. பெண்களைப் பெற்றோர், மனிதநேயம் கொண்டோர், சமூக அக்கறை கொண்டோர் பதறுகிறார்கள். ஆனால், பெரியாரின் பெண்ணுரிமைக் கொள்கைகளும், அதை அடுத்து வழிநடத்திச் செல்லும் ஆசிரியர் வீரமணியும் தான் பொள்ளாச்சி அவலங்களுக்குக் காரணம் - பொம்மனாட்டிகள் கெட்டுப் போறதுக்கு இவா தான் காரணம் என்று ஒரு வன்மமான கட்டுரை வெளியிடுகிறது குறுமதியாளர் குருமூர்த்தியின் துக்ளக் ஏடு! பெண்ணுரிமை பேசியதும், பெண்கள் மீது திணிக்கப்பட்ட அடிமைத் தளைகளைக் களைந்தெறியப் போராடியதும் தான் பொள்ளாச்சி அவலங்களுக்கு காரணம் என்று பெரியார் மீது அவதூறு பரப்புபவர்களுக்கு எச்சரிக்கை செய்யவும், உண்மையில் ஆசிபா, நந்தினி, பொள்ளாச்சி கொடுமைகள், கோவை சிறுமி என ஆணாதிக்க வக்கிர வெறி கொண்ட இந்தக் கும்பலின் முகமூடியை கிழித்து எறிந்தும் பெரியார் திடலில் நடக்கிறது அவசர சிறப்புக் கூட்டம். இவையெல்லாம் விளைவுகள் என்றால், இதற்கான நியாயங்களை உறுதி செய்து இந்த மனவோட்டத்தை மக்கள் மத்தியில் காலம் காலமாக தக்க வைத்துக் கொண்டுள்ளவற்றை எடுத்துப் போட்டுத் தோலுரிக்க வேண்டாமா? “பெண்களைப் பாவ யோனியில் பிறந்தவர்...

சாரட்டின் சக்கரத்தைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு....

நிற்க, தொடக்கத்திலேயே ஒன்றைச் சொல்லிவிடுகிறேன். இந்தக் கட்டுரை “அப்படித் தான் செய்வோம்! இப்போ என்னான்றீங்க?” என்று தான் முடியப் போகிறது. எனவே, அதை மனதில் கொண்டு கட்டுரையை வாசிக்கக் கோருகிறேன். ஆனால், நிச்சயம் பலரின் கேள்விகளுக்கான விளக்கமும், விவாதங்களுக்கான பதிலும் இருக்கும்... குறிப்பாகப் புதிய தோழர்களுக்கு! இனி மேற்கொண்டு செல்க! ***************************************************************** கடந்த 20 நாட்களில் மட்டும் இது மூன்றாவது முறை! எங்கள் மீதான அவதூறுகளும், பொய்ப் பிரச்சாரங்களும், அவற்றுக்கு நாங்கள் பதில் சொல்வதும் எங்களுக்குப் பழகிப் போனவை! கடந்த மாதத்தின் மத்தியில், ஆசிரியர் பேரன் தம்பி கபிலன் திருமணம் ஜாதி பார்த்து, தாலி கட்டி நடந்த திருமணம் என்றொரு அவதூறு; 5 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தோழர் ஹரிஷின் திருமண காணொளியை எடுத்துப் போட்டு, இது ஆசிரியர் பேரனின் திருமணம் என்றார்கள். விஜயபாரதம் வரை அந்தப் பொய் வெவ்வேறு வடிவங்களில் எடுத்தாளப்பட்டுள்ளது. உரிய பதில்கள் வழங்கப்பட்டுள்ளன. பொய் என்பதற்கு சான்றுகளுடன் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் மற்றொன்று. ”பெரியார் தி...