ஒரு மாதத்திற்கான வேலைத்திட்டங்களோடு வரும் அப்பாவின் கடிதத்திற்காக அய்ந்தாம் தேதிகள் எப்போதும் பிடிக்கும் எனக்கு! 'வாரம் ஒரு முறையாவது பேசுடா' என்று அம்மா சொன்னது தொலைபேசி வந்த புதிதில். அரைநொடிக் கொருமுறை பதில் பெறுகிறோம்- என் அருமைத் தங்கையே! அலுவலக இணையத்துக்கு நன்றி சொல்வோம்! (ஆளுக்கொரு மூலையில் இருந்தபடி தொலைத்தொடர்பு இணைப்பால் வாழ்ந்துவரும் எம்மை ஒத்த சொந்தங்களுக்கு...) ----------------------------------------- நட்சத்திர வாரத்திலேயே நூறாவது பதிவும் இடுவதற்கான வாய்ப்பு... இத்தனை பதிவுகளுக்கும், என் வலை உலாவலுக்கும் உதவிய வாழ்த்திய ஊக்குவித்த அத்தனை உள்ளங்களுக்கும், நட்சத்திர வாரத்தில் இடம்பெற வாய்ப்பளித்த தமிழ்மண நிர்வாகத்திற்கும் விரிவான நன்றிகள் அடுத்த பதிவில்.... அதுவரை இத்தனைக்கும் வாய்ப்பளித்த எங்கள் அலுவலக இணையத்துக்கு இந்த நன்றி! என் தங்கையிடம் உடனுக்குடன் வலையில் உரையாடிய மகிழ்ச்சியில் எழுதியது இக்கவிதை... கவிதை தாம்ப்பா... நீங்க ஒத்துக்கிட்டுதான் ஆகணும். நட்சத்திர வாரத்தில இருந்ததுக்கு இதையாவது ஒத்துக்கக் கூடாதா?
சிரமப்படாதீங்க... பதம் பிரிச்சு சொல்றேன். "பிரின்சு என் ஆர் சமா". இப்படித்தான் படிக்கணும்.