முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திருக்குறளை மலத்தோடு ஒப்பிட்டாரா பெரியார்? உண்மை என்ன?

இதைத் தான் அயோக்கியத்தனம் என்கிறோம். எதை?

குறளை பெரியார் மலத்துடன் ஒப்பிட்டார்... இதோ ஆதாரம் என்றார்கள். 

எது?

இது தான் அது! 

"வள்ளுவர் குறளையும் அந்தப்படியே அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன். எல்லாவற்றையும் குறை சொல்லும்போது பலர் என்னிடம், எல்லாம் போய்விட்டால் நமக்கு எதுதான் நூல் என்று கேட்பார்கள். நான் இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது; அதை எடுத்து விடு என்று கூறினால் அந்த இடத்தில் என்ன வைப்பது? என்று கேட்பதா என்று பதில் கூறுவேன்." 

பார்த்தியா... பார்த்தியா... இதைத்தான் சொன்னோம்னு குதிச்ச கூமுட்டைகள், கூமுட்டைகள் சொல்லுக்குக் குட்டிக்கரணம் போட்ட கூறுகெட்டதுகள் எல்லோரையும் நாம் கேட்டுக் கொள்வது, அந்தக் கட்டுரையை முழுமையாகப் படியுங்கள் என்பது தான். அவ்வளவு வேண்டாம்... அதற்கு முன்னேபின்னே என்ன சொல்லியிருக்கிறார்.. அதைப் படித்தாலே புரியும் அவரது நேர்மைத் திறம்கொண்ட பார்வை!  பெரியாருக்குப் பொழிப்புரை, தெளிவுரையெல்லாம் தேவையில்லை. இதோ பெரியார் பேசுகிறார்... கேளுங்கள்!

"மக்களுக்கும் நான் குறள் பற்றி பேசுவது மிகுந்த ஆச்சரியமாய் இருக்கிறது. நானும் எந்தப் புராணங்களைக் கொண்டு வந்தாலும், மதக் கருத்துக்களைச் சொன்னாலும் அவைகளையெல்லாம் தயவு தாட்சண்யம் இல்லாமல் இதுவரை கண்டித்தே வந்திருக்கிறேன். அது எனக்குப் பழக்கம். 10, 20 வருடங்களாகத்தான் இவைகள் நமக்கு, திராவிடர்களுக்கு விரோதமான நூல்கள், திராவிட மக்களை இழிவுபடுத்தும், அவர்களை நாலாஞ்ஜாதி மக்களாய், சூத்திரர்களாய் என்றென்றும் வைத்திருப்பதற்கு ஆக ஏற்படுத்தப்பட்டிருக்கும் நூல்கள் என்று கூறி எல்லா நூல்களையும், கண்டித்து வருகிறேன். அதற்கு முன்னும் நான் இந்த புண்ணிய நூல்கள் என்று நம் மக்கள் கருதும் நூல்களையெல்லாம் கண்டித்து குறை கூறிவந்தேன். அப்போதெல்லாம் திராவிட மக்களை இழிவுபடுத்தும் நூல்கள் என்று கருதி கூறாவிட்டாலும், அறிவுக்கு ஒவ்வாத சங்கதிகளை உடையதாக இருக்கிறது என்று கண்டித்து வந்தேன்.


வள்ளுவர் குறளையும் அந்தப்படியே அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன். எல்லாவற்றையும் குறை சொல்லும்போது பலர் என்னிடம், எல்லாம் போய்விட்டால் நமக்கு எதுதான் நூல் என்று கேட்பார்கள். நான் இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது; அதை எடுத்து விடு என்று கூறினால் அந்த இடத்தில் என்ன வைப்பது? என்று கேட்பதா என்று பதில் கூறுவேன்.
ஏறக்குறைய மத சம்பந்தமான காரியங்களில் மக்களுக்கு நம்பிக்கையே இருக்கக் கூடாது என்று கருதி அந்தப்படியாகவே பிரச்சாரம் புரிந்து வந்தேன். பிறகு நாளாக ஆக நல்ல அறிவாளிகளோடு அறிவாளிகள் என்றால் பண்டிதர்களோடு அல்ல பொது அறிவு மக்களோடு திராவிட உணர்ச்சி மிக்கவர்களோடு நம் உணர்ச்சியுள்ள அறிவாளிகளோடு பழகியபோது குறளின் மேன்மைபற்றி அவர்கள் எடுத்துக் கூறினார்கள். நான் இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறதே இந்த இடத்தில் இப்படியிருக்கிறதே என்று கேட்டேன். அது பரிமேலழகரின் உரை, அது குறளாசிரியர் கருத்தல்ல என்று எடுத்துக்கூறி உண்மை உரையினைச் சொன்னார்கள். அந்தக் காலத்தில் பரிமேலழகர் உரைதான் சிறந்த உரை என்று கொண்டாடப்பட்டது. அவர் மனுதர்ம சாஸ்திரப்படி குறளுக்கு உரை எழுதிவிட்டார். பின்னர் வந்த அறிவாளிகள் அதைக் கண்டித்து குறளின் உண்மைக் கருத்தை எடுத்துக்காட்டினார்கள்.
அதிலிருந்துதான் நான் குறளைப் பற்றி பேசுகிறேன். 

அதுவும் அதையே ஆதாரமாக, அத்தாரிடேவ் எடுத்துக் கொண்டு அல்ல; நான் சொல்லுகிற கருத்து அதிலும் இருக்கிறது பார் என்று கூறிவந்தேன். சிறிது குறை இருந்தாலும் இப்போதைக்கு இது இருக்கட்டும் என்று கருதினேன்.
புராணக் கருத்துக்களிலும், மூடநம்பிக்கைகளிலும் மூழ்கிக் கிடக்கும் நம் மக்களுக்குப் பகுத்தறிவு வளர்ந்தபின், மூடக்கருத்துகள் ஆட்டங்கண்ட பின்தான் குறளின் பொருளை உணரும் அறிவு மக்களுக்கு உண்டாகும் என்று கருதி முதலில் மூடக் கருத்துகளை அகற்றும் பணியில் பிரச்சாரம் புரிந்து வந்தேன். இன்று மக்களுக்கு கொஞ்சம் அறிவுத் தெளிவு, பகுத்தறிவுத் தன்மை வளர்ந்து இருக்கிறதால் இன்று குறளைப்பற்றி பேசுகிறேன்.


குறளில் இப்படியிருக்கிறதே! நீ ஏன் இப்படி நடக்கிறாய் என்று கேட்காதீர்கள்; நான் சொல்லுவது அதில் இருக்கிறது என்ற அளவில் தான் நான் குறளை ஆதரிக்கிறேன் அதை அப்படியே முழுவதையும் ஒத்துக்கொள்ள மாட்டேன்.
உதாரணமாக, மாமிச உணவு உண்பதை வள்ளுவர் மிக வன்மையாகக் கண்டிக்கிறார். கொல்லாமையின் உயர்வு குறித்து வெகுவாக எழுதியிருக்கிறார். குறளிலேயே அப்படி சொல்லப் பட்டிருக்கிறதே என்பதற்கு ஆக நான் மாமிச உணவு கொள்ளாமல் இருக்க முடியுமா? மக்களுக்கும் எல்லா நடவடிக்கைகளுக்கும் குறள்தான் ஆதாரம் என்று சொல்லவில்லை.
குறளிலிருந்து உங்களுக்கு வேண்டியதை ஏற்றுக் கொள்ளுங்கள். வேண்டாததைத் தள்ளிவிடுங்கள் என்றுதான் கூறுகிறேன்."

23.5.1950-இல் பெங்களூர் திருவள்ளுவர் கழக ஆண்டு விழாவில் தந்தை பெரியார் பேசியது இது!

சங்கிகள், இந்துத்துவவாதிகள், வலதுசாரிகள், பாஜகவினர், ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் என்றாலே அயோக்கியர்கள், புரட்டர்கள், பொய்யர்கள், அவதூறுப் பேர்வழிகள், அழிச்சாட்டியக்காரர்கள், அறிவு நாணயமற்றவர்கள், எச்சச்ச எச்சச்ச, கச்சச்ச கச்சச்ச என்பதைப் புரிந்துகொள்ள இன்னுமொரு வாய்ப்புதான் இந்த அவதூறும்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinam