முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இடஒதுக்கீட்டால் உயர்ந்த ஒருவர் சுயஜாதித் திருமணம் மூலம் இன்னொரு ஒடுக்கப்பட்டவரை முன்னேற்ற முடியுமா?

அண்ணன் டி.வி.எஸ்.சோமு அவர்களின் வாட்ஸ் அப் பதிவுக்கு (பேஸ்புக்கிலும் போட்டுள்ளார் - https://www.facebook.com/reportersomu/posts/1945338828943651) நான் இட்ட பதில் இங்கே தொகுத்துத் தரப்படுகிறது. //என் நண்பன் சொன்னது: "ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த நான், என் சாதிக்கான இட ஒதுக்கீட்டில் படித்தேன்; உதவித்தொகை வாங்கினேன்; அரசு வேலையில் சேர்ந்தேன்: பதவி உயர்வு பெற்றேன். ஆனால் என் சாதி இழிவானது என எண்ணினேன்; ' உயர் சாதி' என நம்பப்படும் ஒரு பெண்ணை திருமணம் செய்தால் இந்த 'இழிவு' நீங்கும் என 'காதலித்து ' மணம் புரிந்தேன். இப்போதுதான் உணர்கிறேன்... எனக்கு கல்வி வேலை, பதவி உயர்வு, வாழ்க்கை அளித்த என் சாதியிலேயே திருமணம் செய்திருந்தால், அதே ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த இன்னொரு குடும்பமும் முன்னேறி இருக்கும் அல்லவா?!" என்றார். அவரது கேள்விக்கு எனக்கு பதில் சொல்லத் தெரியவில்லை! - டி.வி.எஸ். சோமு// என் பதில்: சரி, தவறு என்பதை படிப்போர் முடிவு செய்து கொள்ளுங்கள். அண்ணன் சோமு அவர்களின் நண்பர் அறிந்துகொள்ள வேண்டிய செய்திகளைக் குறிப்பிடுகிறேன். 1. “என் சாத

திருக்குறளை மலத்தோடு ஒப்பிட்டாரா பெரியார்? உண்மை என்ன?

இதைத் தான் அயோக்கியத்தனம் என்கிறோம். எதை? குறளை பெரியார் மலத்துடன் ஒப்பிட்டார்... இதோ ஆதாரம் என்றார்கள்.  எது? இது தான் அது!  "வள்ளுவர் குறளையும் அந்தப்படியே அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன். எல்லாவற்றையும் குறை சொல்லும்போது பலர் என்னிடம், எல்லாம் போய்விட்டால் நமக்கு எதுதான் நூல் என்று கேட்பார்கள். நான் இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது; அதை எடுத்து விடு என்று கூறினால் அந்த இடத்தில் என்ன வைப்பது? என்று கேட்பதா என்று பதில் கூறுவேன்."  பார்த்தியா... பார்த்தியா... இதைத்தான் சொன்னோம்னு குதிச்ச கூமுட்டைகள், கூமுட்டைகள் சொல்லுக்குக் குட்டிக்கரணம் போட்ட கூறுகெட்டதுகள் எல்லோரையும் நாம் கேட்டுக் கொள்வது, அந்தக் கட்டுரையை முழுமையாகப் படியுங்கள் என்பது தான். அவ்வளவு வேண்டாம்... அதற்கு முன்னேபின்னே என்ன சொல்லியிருக்கிறார்.. அதைப் படித்தாலே புரியும் அவரது நேர்மைத் திறம்கொண்ட பார்வை!  பெரியாருக்குப் பொழிப்புரை, தெளிவுரையெல்லாம் தேவையில்லை. இதோ பெரியார் பேசுகிறார்... கேளுங்கள்! "மக்களுக்கும் நான் குறள் பற்றி பேசுவது மிகுந்த ஆச்சரியமாய் இருக்கிறது

வி.பி.பி-யில் வாங்கிய முதல் புத்தகம்

Dear Sir, Kindly send me a copy of xxxx xxxxx xxxxxxx by V.P.P. at an early date and oblige. Yours Sincerely, xxx xxx xxx x இந்தக் கடிதம் பலருக்கு இன்னும் பசுமையாக நினைவிருக்கும். பள்ளியில் VPP Letter writing என்பது ஏறத்தாழ 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை வெவ்வேறு வடிவங்களில் தொடரக் கூடிய ஒன்று. இருப்பதிலேயே எளிமையானவை என்றால் அதில் முதலிடம் இந்த VPP Letter க்கு உண்டு. சொளையாக 10 மதிப்பெண்... கொஞ்சம் பிசகினாலும் 5 அல்லது 6 நிச்சயம். அதனால் அதற்கு மவுசு உண்டு. மதிப்பும் உண்டு. Value Payable by Post என்று முழுமையாக எழுத வேண்டிய அவசியம் கூட இல்லை என்பது அதன் சிறப்பம்சங்களில் ஒன்று ;) ஆனால், அந்தக் காலகட்டத்திலும் சரி, அதற்குப் பிறகும் சரி. விபிபி-யில் என்னால் புத்தகம் வாங்க முடிந்ததே இல்லை. வி.பி.பி.-யில் அனுப்ப இயலாது என்றே பதிப்பகங்களில் விளம்பரங்களில் குறிப்பிட்டுக் கொண்டிருந்தன. பின்னாளில் அமேசான், பிளிப்கார்ட் வகையறாக்களில் வாங்கத் தொடங்கியபோது, அவர்கள் வழங்கிய Cash on Delivery வாய்ப்பு ஏறத்தாழ விபிபி மாதிரி தான். கடந்த வாரம் Cellars of the Inferno புத்தகத்தை வா

சிறைக்குச் செல்வது அவமானம் - தினமலர்

“எந்தக் காரணமாக இருந்தாலும் சிறைக்குச் செல்வதுஅவமானம். அதனால் தான் எங்கள் மன்னிப்புக் கடித மாவீரர்கள் பாரதியார் தொடங்கி சவர்க்கர், வாஜ்பேயி வரை எல்லோரும் அந்த அவமானத்திற்குப் பயந்து சிறைக்கே போகவில்லை. திருட்டு சிடி வழக்கில் உள்ளே போவதும் கூட அவமானம் தான் என்றாலும், அதற்கெல்லாம் மன்னிப்புக் கடிதத்தை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்கிறார்கள் இப்போது. இந்த அவமானம் கூடாது என்பதால் தான் முந்தைய காலத்தில் மனுதர்மத்தை வைத்துக் கொண்டு வர்ணத்திற்கேற்ப Classified criminal code வைத்து தண்டனையைப் பிரித்துத் தந்தோம். இந்த வெள்ளக் காரக் கடன்காரன் மெக்காலே தான் எல்லாரையும் ஒரே தட்டில் வச்சு தண்டனை தரணுமிண்டான். கடன்காரன்... கடன்காரன்...” தினமலர் சப் எடிட்டர் அம்பி எழுதி, பின்னர் தினமலர் எடிட்டோரியலில் கொட்டைபோட்ட மாமா, பூணூலைச் சொறிந்தபடி, “இப்படி பட்டாங்கமாவாடா எழுதுவே... அசடு... அசடு” என்று அவனைத் திட்டிண்டே கசக்கித் தூக்கிப் போட்ட பகுதி. (சிறைக்குச் சென்ற வ.உ.சியையும், ஓடிப் போன பாரதியையும் பற்றி அண்ணன் இசை இன்பன் எழுதிய பேஸ்புக் பதிவிலிருந்து எடுத்து படம்)

பொள்ளாச்சி அவலம்: ஆசிரியரின் பேச்சும், பார்ப்பனர்களின் ஏச்சும்!

பொள்ளாச்சி அவலம் தொடர்பாக நாடே கொந்தளிப்பில் இருக்கிறது. பெண்களைப் பெற்றோர், மனிதநேயம் கொண்டோர், சமூக அக்கறை கொண்டோர் பதறுகிறார்கள். ஆனால், பெரியாரின் பெண்ணுரிமைக் கொள்கைகளும், அதை அடுத்து வழிநடத்திச் செல்லும் ஆசிரியர் வீரமணியும் தான் பொள்ளாச்சி அவலங்களுக்குக் காரணம் - பொம்மனாட்டிகள் கெட்டுப் போறதுக்கு இவா தான் காரணம் என்று ஒரு வன்மமான கட்டுரை வெளியிடுகிறது குறுமதியாளர் குருமூர்த்தியின் துக்ளக் ஏடு! பெண்ணுரிமை பேசியதும், பெண்கள் மீது திணிக்கப்பட்ட அடிமைத் தளைகளைக் களைந்தெறியப் போராடியதும் தான் பொள்ளாச்சி அவலங்களுக்கு காரணம் என்று பெரியார் மீது அவதூறு பரப்புபவர்களுக்கு எச்சரிக்கை செய்யவும், உண்மையில் ஆசிபா, நந்தினி, பொள்ளாச்சி கொடுமைகள், கோவை சிறுமி என ஆணாதிக்க வக்கிர வெறி கொண்ட இந்தக் கும்பலின் முகமூடியை கிழித்து எறிந்தும் பெரியார் திடலில் நடக்கிறது அவசர சிறப்புக் கூட்டம். இவையெல்லாம் விளைவுகள் என்றால், இதற்கான நியாயங்களை உறுதி செய்து இந்த மனவோட்டத்தை மக்கள் மத்தியில் காலம் காலமாக தக்க வைத்துக் கொண்டுள்ளவற்றை எடுத்துப் போட்டுத் தோலுரிக்க வேண்டாமா? “பெண்களைப் பாவ யோனியில் பிறந்தவர்