முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சாரட்டின் சக்கரத்தைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு....

நிற்க, தொடக்கத்திலேயே ஒன்றைச் சொல்லிவிடுகிறேன். இந்தக் கட்டுரை “அப்படித் தான் செய்வோம்! இப்போ என்னான்றீங்க?” என்று தான் முடியப் போகிறது. எனவே, அதை மனதில் கொண்டு கட்டுரையை வாசிக்கக் கோருகிறேன். ஆனால், நிச்சயம் பலரின் கேள்விகளுக்கான விளக்கமும், விவாதங்களுக்கான பதிலும் இருக்கும்... குறிப்பாகப் புதிய தோழர்களுக்கு! இனி மேற்கொண்டு செல்க! ***************************************************************** கடந்த 20 நாட்களில் மட்டும் இது மூன்றாவது முறை! எங்கள் மீதான அவதூறுகளும், பொய்ப் பிரச்சாரங்களும், அவற்றுக்கு நாங்கள் பதில் சொல்வதும் எங்களுக்குப் பழகிப் போனவை! கடந்த மாதத்தின் மத்தியில், ஆசிரியர் பேரன் தம்பி கபிலன் திருமணம் ஜாதி பார்த்து, தாலி கட்டி நடந்த திருமணம் என்றொரு அவதூறு; 5 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தோழர் ஹரிஷின் திருமண காணொளியை எடுத்துப் போட்டு, இது ஆசிரியர் பேரனின் திருமணம் என்றார்கள். விஜயபாரதம் வரை அந்தப் பொய் வெவ்வேறு வடிவங்களில் எடுத்தாளப்பட்டுள்ளது. உரிய பதில்கள் வழங்கப்பட்டுள்ளன. பொய் என்பதற்கு சான்றுகளுடன் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் மற்றொன்று. ”பெரியார் தி

இனமான நடிகருக்கு வீரவணக்கம்!!

”எருமைக்குப் பிறந்திருக்கும் கன்றும் கூட இனத்திற்கோர் இடர் வந்தால் எம்பிப் பாயும் எறும்பொன்றை அறியாமல் நாம் மிதித்தால் இறப்புக்கும் அஞ்சாமல் அது கடிக்கும் - அந்த எருமைக்கும் எறும்புக்கும் கூட உள்ள இனமானம் தன்மானம் உனக்கேன் இல்லை... தமிழா! இன உணர்வு கொள்!” என்ற நிறைவு வரிகளோடு தன் இரண்டு மணிநேரப் பேச்சை அவர் முடிக்கும் போது, ஒட்டுமொத்தக் கூட்டமும் பெறும் உணர்வு எழுச்சியானது. கரகரப்பான அந்தக் குரல் ‘இனமான நடிகர்’ அய்யா எம்.ஏ.கிரிதரன் அவர்களுடையது! மேடைப் பேச்சாளராகவும், குடுகுடுப்பைக்காரராகவும், மந்திரமா?தந்திரமா? நிகழ்த்துநராகவும், நாடகக் கலைஞராகவும் இயக்கத்தின் முனைப்பான பரப்புரையாளராக ஆர்வமுடன் பணியாற்றியவர். மேடை நாடகங்களைத் தயாரித்தும், நாடகங்களுக்கான போட்டியை நடத்தியும், திராவிடர் கழகக் கலைத்துறையின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர். தன் சொந்தக் காசைப் போட்டு கூட்டம் நடத்துபவர்களைப் பார்த்திருப்போம். ஒரு பிரச்சாகராகவும் வந்து, கூட்டம் நடத்துவதற்கான உதவியையும் செய்து, தற்புகழ்ச்சி இல்லாமல் பிரச்சாரம் செய்தவர் அய்யா கிரிதரன். தமிழர் தலைவர் ஆசிரியர் மீது மாறா பற்றுக் க