முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

டே... உங்களுக்கெல்லாம் வெட்கமே கிடையாதா? - இந்து முன்னணி புரட்டுகளுக்கு பதில் -

ரம்ஜான் நோன்புக் கஞ்சிக்கு ஏழை எளிய இஸ்லாமியருக்கு அரசு அரிசி வழங்கக்கூடாது என்ற இந்துமுன்னணியின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது பற்றி அனைவரும் செய்திகளில் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், இந்த வெட்கங்கெட்ட இந்து முன்னணி கும்பல், உயர்நீதிமன்றத் தீர்ப்பு நகலை இணைத்து, வாட்ஸ் அப்பில் என்ன பரப்பி வருகிறது பாருங்கள். //ரம்ஜான் அரிசி இந்துமுன்னணி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாக சில ஊடகங்கள் தவறான தகவல் இந்துமுன்னணி அமைப்பு வழக்காக ஏற்காமல் அதன் மாநில செயலாளர் குற்றாலநாதன் தொடுத்த தனிநபர் பொது நல வழக்காக ஏற்று தமிழக அரசு விளக்கமளிக்க உத்திரவிட்டு மே 7 ம் தேதி மீண்டும் விசாரணை இதோ உயர்நீதிமன்றம் உத்திரவு நகல். நீங்களே படித்து கொள்ளுங்கள். உத்திரவை நீதித்துறை மீது திணிக்கிறதா சில ஊடகங்கள் ? தமிழகத்தில் சில ஊடகங்களே நீதிபதியாவது வேடிக்கை// நமது பதில்: ஆம், இந்து முன்னணியின் கெட்ட நோக்கம் கொண்ட கோரிக்கையை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. கேடுகெட்ட மனப்பான்மையுடனும், கொடுங் குணத்துடனும் இந்து முன்னணி மதவெறி கும்பல் தொடுத்த வழக்கில் மாண்புமிகு உயர்நீதிமன்றம் மிகச் சிறப்பாகத் தீ

#restartகதைகள்

எப்போது என் கணினியை மறு தொடக்கம் (Restart) செய்வது என்பதை நான் முடிவு செய்வதில்லை. Shut down / Turn off எல்லாம் ஆண்டுக்கு ஓரிரு முறை நிகழ்ந்தாலே ஆச்சரியம் தான். பயணங்களுக்குத் தயாராகும்போதும், ‍ Hybernate / Sleep mode / Stand by இல் தான் மடிக்கணினிப் பைக்குள் புதையும். நான் உறங்கும்போது அதுவும் சற்று அயருமே தவிர, எந்நேரமும் அரைத் தூக்கத்தில் விழிப்போடு இருக்கும் வீட்டுக் காவலரைப் போல் தான் கடமையாற்றும். மறு தொடக்கம் செய்வதற்கு எனக்கொரு அளவுகோல் உண்டு. 'கண்ணைக் கட்டுது...கொஞ்சம் கேப் கொடுடா..!' என்று என் கணினி என்னிடம் சொல்வதற்கு மைக்ரோசாப்டுக்குத் தெரியாத மொழி ஒன்று உண்டு. மைக்ரோசாப்டுக்குத் தெரிந்த மொழி என்பது, 'கடுப்பாகி', அதுவே தானே மறுதொடக்கம் செய்வது! நான் சொல்வது அதற்கும் முந்தைய நிலை. நான் பயன்படுத்தும் தமிழ் எழுதி ‍ யை இயக்குவதற்கு F3 பொத்தானை அமுக்கினால், எப்போது தமிழ் எழுத்து வராமல், டொய்ங் என்ற ஒலியோடு Find பட்டி திறக்கிறதோ, அது தான் என் மடிக்கணினி எனக்குத் தன் அயர்வைத் தெரிவிக்கும் முதல் தருணம். அப்போது நான் கவனித்துவிட வேண்டும். எனினும் இரக்கமற்றவனாய், உடனே

கொரோனா கற்றுக் கொடுக்கும் பாடங்கள்!

கொரோனா காலம் நமக்கு முக்கியமான பாடம் ஒன்றை எடுத்துக் கொண்டிருக்கிறது. குறுகிய காலம் - நெடுங்காலம் என்று இரண்டு போக்குகளில் அந்தப் பாடம் நமக்குப் பயன்படும். எது அடிப்படைத் தேவை? எது அன்றாடத் தேவை? எது எதெல்லாம் வாய்ப்பிருந்தால் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது? எவைவெல்லாம் அவசியமில்லாத செலவுகள்? எவை ஆடம்பரச் செலவுகள்? என்று நம் மனதிற்குள் இந்நேரம் ஒரு பெரிய பட்டியல் உருவாகியிருக்க வேண்டும். #குறுகிய_காலப்_பாடம் : வெள்ளம் சூழும் நேரத்தில் அவசரத்திற்கு, அவசியமான பொருட்களை எடுத்துக் கொண்டு பாதுகாப்பாக எப்படி வெளியேறுவோமோ, அப்படியான சூழல் தான் இப்போது! செம்பரம்பாக்கத்தம்மன் புண்ணியத்தில் அரிதாக, ஒன்றிரண்டு புயல், வெள்ளக் காலங்களைத் தவிர பேரிடர் கால அனுபவம் நமக்கு மிகவும் குறைவு. எப்போதும், இதமான, மிதமான கால நிலைகளையும் அனுபவித்து சொகுசு வாழ்க்கைக்குப் பழகியவர்கள் நாம். அதையெல்லாம் கொஞ்சம் ஒதுக்கிவைத்துவிட்டு, காய் இல்லை, கறி இல்லை, ஃபிரஷ்ஷா கிடைக்கவில்லை என்றெல்லாம் ரொம்ப அலட்டிக் கொள்ளாமல், கஞ்சியோ, கூழோ குடித்துக் கொண்டிருந்தாலும், அந்த அளவு தான் அரசு ஊற்றும் என்ற சூழல் வந்தாலும், அதில் தாக்