முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ரசித்தேன்-படியுங்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நான் உன் விலா எலும்பில் இருந்து வரவில்லை...

நான் உன் விலா எலும்பில் இருந்து வரவில்லை... நீ(யே/யோ) என் பெண்ணுறுப்பிலிருந்து வந்தாய்! I didn't come from your Rib! You came from my vagina! இளங்கோவன் பாலகிருஷ்ணன் அவர்கள் பகிர்ந்திருந்த இந்தப் படமும் வாசகமும் வெகுவாகக் கவர்ந்தது.  பைபிளின் புரட்டுக்கு மறுப்பு சொல்லும் பகுத்தறிவு வாதமாகவும், பெண்ணின் முதன்மையைக் காட்டுவதாகவும் இருந்த இந்த ஆங்கில வாசகத்தை தமிழில் எழுதலாமே என்று தொடங்கினேன். Vagina என்ற சொல்லுக்கு சரியான வார்த்தையைத் தேட விக்சனரி சென்றேன். வசைச் சொற்களாக பயன்படுத்தப்படும் சொற்களும் பட்டியலில் இடப்பட்டிருந்தது. அதற்கு என்ன விளக்கம் சொல்லியிருக்கிறார்கள் என்று படிக்க அதையும் சொடுக்கினேன். ஒலிப்பு பகுதியும் இருந்தது. இயக்கினேன்.  ஹுப்ப்ப்.. பலமுறை வசையாகக் கேட்ட வார்த்தை தான். ஆறாம் வகுப்பில் முதன்முதலாகக் கேட்டது தொடங்கி பலமுறை செவியில் விழுந்த கெட்ட வார்த்தை தான். எப்போதும் யாரையும் திட்டுவதென்றால் முதலில் பெண்ணை இழிவுபடுத்தும் சொற்கள் தானே சமூகத்தில் புழங்குகிறது; பால்வேற்பாடற்ற ஒரு திட்டுச் சொல் வேண்டும் என்று கூட முன்பு நிலைத் தக...

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்...

புகை ‍= பகை: பிடிக்கிறவங்களுக்கு மட்டுமில்லை

தண்ணியடிக்கிறவனைக் கூட மன்னிச்சிடலாம். தக்காளி... புகைப்பிடிக்கிறவனை மன்னிக்கவே முடியாது. தண்ணியடிக்கிறதனால் ஒண்ணு அவன் சாவான், இன்னொன்னு அவன் குடும்பம் அழியும். தறுதலையை அப்படியே விட்டுக்கிட்டிருக்கிறதுக்கு அல்லது பொறுத்துக்கிட்டிருக்கிறதுக்கு அது தண்டனைன்னு கூட சொல்லிறலாம். (குடிச்சுப்புட்டி வண்டி ஓட்டி சாகிறதை விட, சாகடிக்கிறது தான் என்னைப் பொறுத்தவரை மோசம்.) ஆனால் இந்த புகைக் கூட்டம் இருக்கு பாருங்க.... தானும் கெட்டு அடுத்தவனையும் கெடுத்து... இவன் பாதி உறிஞ்சி, மிச்சத்தை சுத்தியிருக்கிறவனுக்கெல்லாம் ஊதிவிட்டு... என்னமோ பெரிய சாதிச்சவன் மாதிரி ஒரு லுக்கு வேற கொடுப்பானுங்க... ங்கொய்யால... அப்படியே சிகரெட்டை திருப்பி வச்சு வாய்க்குள்ள அமுக்கிவிட்றலாம்னு தோணும்... அதிலேயும் டாய்லெட்டுக்குள்ள பீடி, சிகரெட், சுருட்டு குடிக்கிறங்களையெல்லாம்..... நற... நற... அப்படியே அங்கேயே அமுக்கிடலாம். காத்தே வெளியில போகாத இடத்தில ஊதி, உள்ள போறவனையெல்லாம் சாவடிப்பானுங்க... பேருந்து நிறுத்தத்தில, பேருந்துக்குள்ள, தொடர்வண்டியில, சாப்பிடுற, டீ குடிக்கிற இடத்துக்கு பக்கத்தில, பொது இடங்களில ஊதி ஊதி...

அசிஸ்டெண்ட் டைரக்டருகளா... நோட் பண்ணுங்கடா... நோட் பண்ணுங்கடா...

திரைப்படம் என்பது காட்சிக்குக் காட்சி தொடர்பிருப்பதைப் போன்ற தோற்றத்தை உருவாக்கும் ஏமாற்று வித்தையின் தொகுப்பு தான். ஒரே காட்சிக்கான அடுத்தடுத்த காட்சித் துணுக்குகள் (Shots) சில நாட்கள்... ஏன் பல மாதங்கள் கழித்துக் கூட எடுக்கப்படும். ஏ.வி.எம் செட்டுக்குள்ளிருந்து கதவைத் திறந்தால் அமெரிக்காவோ, அண்டார்டிகாவோ கூட தெரியும். இது தான் சினிமா. நம்பமுடியாத பல விசயங்களைக் கோர்த்துத் தான் உருவாக்குவார்கள். அவை பற்றி யோசிக்க நேரம் தராமல் அடுத்தடுத்த காட்சிகளுக்குள் பார்வையாளனை இழுத்துக் கொண்டு போய்க் கொண்டே இருக்க வேண்டும். ஆனால், இது எதுவும் பார்வையாளர்களை உறுத்தாதபடி உருவாக்குவதில் தான் திரைப்படத் துறையினரின் உழைப்பு இருக்கிறது. இவை அதிகம் உறுத்தத் தொடங்கினால் படத்தின் ஒவ்வொரு நொடியிலும் திரைக்குப் பின்னாலான குறைகள் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். ஒரு காட்சி எடுக்கும்போது இருந்த துணை நடிகர்கள் இல்லாமல் இருக்கலாம்; கால நிலை மாறிப்போகலாம்; திரையில் தொடர்ச்சியாகப் பார்க்கும்போது பெரும்பாலானவை கண்ணுக்குத் தெரிவதில்லை. ஆனால், மீண்டும் மீண்டும் பார்த்தாலோ, கணினி உதவி கொண்டு முன்னுக்குப் பின் ஓட்...

’பார்ப்பனர்’ என்பது இழிவுச் சொல்லா?

அடிக்கடி எங்களிடம் கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று - “ஏன் பிராமணரை பார்ப்பான் / பார்ப்பனர் என்று அழைத்து இழிவு படுத்துகிறீர்கள்?” என்பது. அதற்கான வரலாற்றுக் காரணங்களையும், அது இழிவுச் சொல் அல்ல என்பதையும் தெளிவாக விளக்குகிறார் கட்டுரையாளர். முகநூலில் படித்தது... எப்போதும் பயன்படும் என்பதால் கட்டுரையாளரின் அனுமதியுடன் இங்கே பதிவு செய்யப்படுகிறது. ---------------------------------------------------------------------------------------------- பார்ப்பனரும் தொன்மங்களும் - மதிமன்னன் அ ருப்புக்கோட்டையில் ஓர் அரசுப்பணியாளர் மார்க்சிய அறிவுடன் சீரிய பகுத்தறிவாளர். தீவிர பெரியாரிஸ்ட். தமிழ்நாடு மின்வாரியத்தில் பணிபுரிகிறார். ஏதோ ஓர் அமைப்பின் சார்ப்பில் ஒரு கருத்தரங்கம் நடத்தப் போவதாகவும் அதில் நான் ” இந்தியா இவன் மதமா ? அவன் மதமா ? இந்தியா எவன் மதம் ?” என்ற தலைப்பில் பேச வேண்டும் என்றார்.அவர் எனக்கு அறிமுகமானவர் அல்லர். என்னைத் தெரிந்து வைத்திருக்கிறார். எங்காவதுபோய்ப் பேசிச் சிக்கலாகி விடக்கூடாது என்கிற , வழக்கமான பழக்கத்தில் அருப்புக்கோட்டை கழகத் தோழர் விடுதலை ஆதவனிடம் கேட்டேன்...