முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நினைவூட்டல் குறிப்புகள்

பணியில் இருக்கும்போது
படித்துக் கொண்டிருக்கும்போது
போனில் யாருடனும் பேசிக் கொண்டிருக்கும்போது
பயணத்தில் இருக்கும்போது
அடுத்தடுத்து செய்ய வேண்டியவற்றை
நினைவில் வைக்கக் குறித்துக் கொள்வதுண்டு.
துண்டுச் சீட்டோ
டிக்கெட் பின்புறமோ
சரியான குறிப்பேடோ
சட்டை உள்மடிப்போ
செல்பேசியோ
உள்ளங்கையோ
பத்துரூபாய் நோட்டோ
குறிப்பெடுக்கப் பயன்படும்.
தேர்வு நேரங்களில்
அமைதியான சூழலில்
கேள்விக்கான பதிலை விட
அடுத்தடுத்து செய்ய வேண்டிய பணிகளோ,
நெடுங்காலத் திட்டங்களுக்கான
நினைவூட்டல்களோ
கேள்வித் தாளில் பிட் என்று கருத முடியாத அளவிற்கு
குறித்துவைத்துக் கொள்வதுண்டு.
எதுவும் இல்லையென்றால்
பக்கத்தில் இருப்பவர் தான்
என் குறிப்பேடு.
எனக்கு மறந்துவிட்டாலும்
ஏன் நினைவூட்டவில்லையென்று
அவர் மேல் பொறுப்பைப் போடலாம்.
யாருடைய வேண்டுகோளானாலும்
’நீங்களே மீண்டும் மீண்டும்
நினைவூட்டி
என்னிடமிருந்து வேலையை முடித்துக் கொள்ளுங்கள்.
நான் தவறாக நினைக்க மாட்டேன்’
என்று சரண்டர் ஆகிவிடுவதுண்டு.
நினைவூட்டுவதற்கு
இவை, இவர்கள்
இல்லாமல் என்ன செய்வது
என்று யோசித்ததுமுண்டு.
கையில் தாளோ, எழுதுகோலோ
பக்கத்தில் ஆளோ
செல்பேசியோ
கணினியோ
இருக்க முடியாத நேரங்கள்
துயரங்கள்.

நான்கு குவளை நீர் ஊற்றியபின்
கை தேடும் இடத்தில்
சோப் இல்லையென்னும்போது
மூன்று நாட்களாக சோப்பில்லாமல்
குளிப்பது நினைவுவரும் கணத்திலும்
அவசரமாக வீட்டைப் பூட்டிக் கிளம்பி
இருசக்கர வாகனத்தை உதைக்கும்போது
இயங்கத் தொடங்கினாலும்,
உரிய இடத்திற்குத் திரும்பாமல்
சிக்கித் திணறி நிற்கும்
கிக்கருக்கு எண்ணெய்
வைக்க வேண்டுமெனும் போதும்
முந்தாநாள் காயப்போட்ட போர்வைகள்
நேற்றும் பனியில் நனைந்திருக்குமெ
ன்று
தோன்றும் காலைப் பொழுதில்
இன்று பகலும் காயட்டும்
மாலை எடுத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில்
மாடியிலேயே விட்டுவைக்கும்போதும்
தலையில் எண்ணெய் வைக்கவும்
தண்ணீர் குடிக்கவும்
செல்பேசியில்
நினைவூட்டல்கள் வைத்துக் கொள்ளும் எனக்கு
என் நினைவாற்றலின் மீது
மீண்டும் மூடநம்பிக்கை தொற்றிக் கொள்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owne...

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்...

வீரவணக்கம்! வீரவணக்கம்!!

மாநாட்டுத் தீர்மானங்களின் தொடக்கத்தில் களத்தில் நின்று போராடி மடிந்த கொள்கை மறவர்களுக்கு வீரவணக்கம் தெரிவிக்கும் இரங்கல் தீர்மானம் தெரிவிக்கும் வழக்கம் உண்டு. முற்றிலும் எதிர்பார்க்காத வண்ணம், நம் அனைவரையும் துயரக் கடலில் ஆழ்த்தியதோடு நாம் இன்னும் முனைப்பாக செயலாற்றி, நம் உரிமையை வென்றெடுக்க நம்மைத் தூண்டியுள்ள வீரத் தளபதிகளின் மறைவுக்கு வீர வணக்கம் செலுத்த வேண்டிய நிலையில் நாம் உள்ளோம். வீரவணக்கம் செலுத்துவதோடு, தமிழீழத் தாயகத்தில் எழுச்சி ஏற்கும் நாளாக அமைந்துவிட்ட மாவீரர்களின் இறுதி நிகழ்ச்சியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம். (நன்றி: த.அருள்எழிலன்) வீரவணக்கம்; வீரவணக்கம்! வென்றெடுக்கப் போகும் எங்கள் நாட்டின் வீரவித்துக்கள் நீவீரே! மண்கொள்வதில்லை உங்கள் உடல்கள்...எங்கள் மனங்கொண்டு சினம் வளர்த்து ஈழம் படைக்க உரமாகின்றன! வீரவணக்கம்; வீரவணக்கம்! உம்மைக் கொன்றதும் எங்கள் அமைதி முகத்தைச் சிதைத்ததும் ஒன்றே! பேச்சு தேவையில்லை இனியென சிங்களம் சொல்கிறது! இனி அவர்கள் பேசவேகூடாது என்கின்றன உம்முடல்கள்... செய்து முடிப்போம்! பகையைக் கொய்து முடிப்போம்! வீரவணக்கம்; வீரவணக்கம்!