முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மணிகண்டன் ஜாதித் திமிரும் சுப.வீ. மீசை மயிரும்

ஜாதியை ஒழிக்க விடமாட்டோம். கட்டிப்பிடித்துக் காப்பாற்றுவோம். அது எங்கள் பண்பாடு, ஆச்சா... போச்சா என்று கத்தியிருக்கிறார் பொங்கலூர் மணிகண்டன்! எப்போ பார்த்தாலும் தப்புத் தப்பா செய்தியை எழுதுறதே பொழப்பு மணிகண்டன் அவர்களுக்கு! கலப்புத் திருமணச் சட்டத்தைத் தடை செய்ய வேண்டுமாம். கலப்புத் திருமணச் சட்டம்னு ஒண்ணு இருக்கா என்ன?  ”தமிழன் - கன்னடன், தமிழன் - சிங்களன், தமிழன் - மலையாளி என்றெல்லாம் பேசுகிறீர்களே! நாங்கள் ஜாதி பேசக் கூடாதா?” என்கிறார். காவிரி நீர் உரிமையைத் தர மறுக்கும்போதுதான் தமிழன் - கன்னடன் பிரச்சினை எழுகிறது. முல்லைப் பெரியாறுக்கு பிரச்சினை வரும்போது தான் தமிழன் - மலையாளி பிரச்சினை வருகிறது. மனித உரிமை மறுக்கப்படும்போது தான் தமிழன் - சிங்களன் பிரிவினை வந்தது. உலகில் எங்கும் பாதிக்கப்படும்போது, அடையாளங்களுடன் திரள்வதை பிரிவினையாக யாரும் பார்க்கவில்லை. ஆனால், என் ஜாதித் திமிர் பாதிக்கப்படுகிறது என்று கொழுப்பு வாதம் பேசுவதை உரிமைப் பிரச்சினைகளோடு இணைத்துப் பார்க்க முடியுமா? ”சிங்களன் தமிழச்சியைக் கட்டிக் கொண்டால் சும்மா இருப்பீர்களா? நீங்கள் மட்டும் தமிழன் - சிங்களன் எ

’பிராமணாள் கபே’யும் நாயுடுஹால், கோனார் நோட்சும்!

திருச்சி திருவரங்கத்தில் இருந்த ‘ஹோட்டல் ஸ்ரீ கிருஷ்ணய்யர் என்பதில், கடந்த சில மாதங்களுக்கு முன் திடீரென ‘பிராமணாள்’ என்ற பெயர் நுழைக்கப்பட்டது. தகவலறிந்த திராவிடர் கழகத் தோழர்கள் நேரில் சென்று ‘பிராமணாள்’ பெயர்ப்பலகையை நீக்குங்கள் என்று கோரிக்கை விடுத்தனர். பல முறை வேண்டுகோள் விடுத்தும், அவர் மறுக்கவே பிரச்சினை காவல்துறையிடம் சென்றது. அங்கு பல முறை பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. காவல்துறையும், அரசு வழக்கறிஞரும் கூட ‘பிராமணா’ளுக்கு ஆதரவாக இருக்கவே, அடுத்தகட்ட நடவடிக்கையாக விளக்கக் கூட்டத்தினை நடத்த திராவிடர் கழகம் அனுமதி கோரியது. தமிழக முதல்வருக்கு (அவருடைய தொகுதி என்பதாலும்) வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டார் திராவிடர் கழக்த் தலைவர் கி.வீரமணி. இதற்கிடையில் இன்னும் சில பெரியாரிய அமைப்புகளும் எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கின.  (தந்தை பெரியார் திராவிடர் கழகம், பெரியார் பாசறை போன்ற அமைப்புகள் போராட்டத்தில் இறங்கின. கைது, சிறை வரை சென்றது. ஒட்டுமொத்த பெரியாரியக் கருத்தாளர்களும் இந்த இழிவு துடைக்கும் பணியில் திரண்டனர். விளக்கக் கூட்டம் நடத்துவதற்கு, மூன்று முறை தொடர்ந்து அனுமத

’நறுக்கு’த் தீனி (அக்டோபர் 2012)

மினி ப்ளாக்குகள் எனப்படும் ட்விட்டரும், பேஸ்புக்கும் வந்த பிறகு, விரிவாக எழுதுவதற்கான அவசியமோ, பெரிய தயாரிப்போ இல்லாமல் கூட, உடனுக்குடன் தோன்றும் கருத்தை எழுதிவிட முடிகிறது. அதனால் வலைப்பூவில் எழுத நினைக்கும் செய்திகள் கூட அங்கேயே முடிந்துவிடுகின்றன. அல்லது சோம்பலால் முழுமையாகப் பதிவு செய்யப்படாமல் விடுபட்டுப் போகின்றன.  எனவே அவற்றை அப்படியே இங்கு பதிவு செய்யவோ, அல்லது கொஞ்சம் விரிவாக்கி எழுதவோ வேண்டும் என்று பல காலமாக நினைத்துள்ளேன். அதற்கான பகுதிக்கு நல்ல பெயர் வைக்க வேண்டும் என்று யோசித்து, யோசித்தே தாமதித்துவிட்டேன். நல்ல பெயரோ என்னவோ- இப்ப வச்சாச்சு... தொடங்கியாச்சு... ’ நறுக்கு ’ த் தீனி விஜயகாந்த் கோபம்? விஜயகாந்த் வீடியோவைப் பார்த்தேன். ‘நீ யார்’ என்று அந்த பத்திரிகையாளரைப் பார்த்துக் கேட்கிறார். அவர் எந்த பத்திரிகையிலிருந்து வருகிறார் என்று கடைசி வரை சொன்னதாகத் தெரியவில்லை. அதன் பிறகு பத்திரிகையின் / தொலைக்காட்சியின் பெயரோடு வந்து கேட்டவர்களுக்கு அவரின் பதில் ஓரளவு மரியாதையாகத் தான் இருக்கிறது. அதற்கும் பிறகு மீண்டும் அந்த நபர் வந்து வம்பிழுக்க இழுக்க வேகம் கூடுகிறது.

தமிழன் பேர் சொல்லி மிகு தமிழரிடைத் தமிழ்நாட்டில் வாழ்ந்திட்டாலும்...

பார்ப்பனர்கள் குறித்த எச்சரிக்கையை விடுக்கும் போதெல்லாம் ’அவர்களும் தமிழர்கள் தானே! அவர்களுக்கும் மொழிப் பற்றெல்லாம் உண்டு’ என்று நம்மவர்களே திரண்டு வருவார்கள். அதிலும் அந்தப் பார்ப்பனரால் பலனோ, விளம்பரமோ கிடைக்கும் என்றால் இந்தக் குரல் இன்னும் வேகமாக எழும்புவதோடு, ”இன்னும் ஆரியர், திராவிடர், பார்ப்பனர் என்றெல்லாம் திட்டிக் கொண்டு...” என்று நம்மை ஏதோ பிற்போக்குவாதிகள் போலப் பார்ப்பார்கள். பார்ப்பதோடு மட்டுமல்லாமல், அதைப் பகரவும் செய்வார்கள். ஏனெனில் அத்தகையோருக்குத் தான் விபீஷணப் பட்டமும், பார்ப்பனர்களின் விளம்பர சடகோபமும் கிடைக்கும். அண்மைக் காலமாக, பனியாவின் பத்திரிகை ஒன்றில் ஆசிரியராக நுழைந்திருக்கும் பார்ப்பனர் ஒருவர் எங்கெங்கு தமிழ்ச்சங்கங்கள் இருந்தாலும், அங்கெல்லாம் விஜயம் செய்து வருகிறார். அந்த அச்சு அசல் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனரான வைத்தியநாத அய்யர்வாளுக்கு, திடீரென தமிழ்ப் பற்று பீறிட்டு அடித்துக் கொண்டிருக்கிறது. இந்தியத் தேயமெங்கும் அதைப் பாய்ச்சுவதைக் கடமையாகக் கொண்டு செயலாற்றிவருகிறார். (அழைத்தால் வெளிநாடுகளுக்கும் அவாள் வரத் தயார். ’கடல் தாண்டக் கூடாது என்பதெல்லாம் பழ

இன்னும் நீக்கப்படவில்லை அம்பேத்கர் கார்ட்டூன்!

பாடப்புத்தகத்தில் அம்பேத்கர் மீதான காழ்ப்புணர்வைக் கொட்டி, எப்போதோ பத்திரிகையில் வெளியிடப்பட்ட கார்ட்டூனை மீண்டும் வெளியிட்டிருந்த போக்கு அனைவராலும் கடுமையாகக் கண்டிக்கப்பட்டது.    இதனை அடுத்து, அந்த படம் - பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால், இணையத்தில் இன்னும் அந்தப் படத்துடனே பாடம் வைக்கப்பட்டுள்ளது. http://ncert.nic.in/NCERTS/textbook/textbook.htm?keps2=1-10 பார்க்க: பக்கம் 18 இந்த நேரத்தில் சமச்சீர் கல்வி விசயத்தில் நடந்த ஒன்று நினைவுக்கு வருகிறது. 2011-ஆம் ஆண்டு மே 22-ஆம் நாள் அதிமுக அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில் சமச்சீர் கல்விப் பாடத்திட்டங்கள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அன்று ஞாயிற்றுக் கிழமை - நான் சென்னையில் இல்லை. இணைய வாய்ப்பு இல்லாத காரணத்தால் உடனடியாக அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு, தமிழக அரசின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும் சமச்சீர் கல்விப் பாடங்களைப் பதிவிறக்கம் செய்து வைக்கச் சொன்னேன். பதிவிறக்கம் செய்யப்பட்டவற்றை ஒரு தனியார் இலவச இடம் ஒன்றில் பதிவேற்றம்ச் செய்தும் வைத்துவிட்டோம். அன்று ஞாயிற்றுக் கிழ

விளையாட்டிலும் ஜாதி என்று பேசாதீங்க..

”விளையாட்டிலும் ஜாதி என்று பேசாதீங்க..” ”விட்டால் விளையாட்டிலும் இட ஒதுக்கீடெல்லாம் கேட்பீங்க போல...” என்றெல்லாம் பேசும் அரைகுறைகளுக்கு, அதாவது ‘ஹிந்தியர்’களுக்கு இப்படம் சமர்ப்பணம்! “விளையாட்டில் ஜாதி பார்க்காதே” என்று ஜாதி பார்ப்பவனிடம் போய்ச் சொல்! ஜாதிப் பாகுபாடு இருக்கிறது என்று எடுத்துச் சொல்பவனிடம் வாய்ஜம்பம் காட்டாதே! திறமை உள்ளவன் எல்லாம் தெருவில் கிடக்கையில் தகுதி திறமை எல்லாம் பூணூல் கயிற்றில் ஆடுகிறது என்று சொல்லும் கூட்டத்தில் போய்ச் சொல்... “ஜாதி பார்க்காதே” என்று! ஏர் பிடிக்காத எம்.எஸ்.சுவாமிநாதனை வேளாண் விஞ்ஞானி என்று சொல்லி நிலத்தைப் பாழ்படுத்திய பார்ப்பனக் கூட்டத்திடம் போய்ச் சொல்... “ஜாதி பார்க்காதே” என்று! கிரிக்கெட்டில் இத்தனை சதவிகிதம் எஸ்.சி/ எஸ்.டி... இத்தனை சதவிகிதம் ஓ.பி.சி... இத்தனை சதவிகிதம் சிறுபான்மையினர் என்று இல்லாத இடஒதுக்கீட்டை இருப்பதாய்க் காட்டி கிண்டல் செய்யும் வட இந்திய மின்னஞ்சலைப் நண்பர்களுக்குப் பரப்பும் முன் நிரம்பி இருக்கும் பார்ப்பன கிரிக்கெட்டர்களைக் கணக்கெடுத்துவிட்டுச் சொல் “ஜாதி பார்க்காதே” என்

கார்களில் கருப்பு பிலிம் அகற்றுதல் தேவையா?

கார்களில் கருப்பு பிலிம்களை எடுக்கச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறது நீதிமன்றம். எனக்கு இந்த உத்தரவில் இன்னும் உடன்பாடு ஏற்படவில்லை.  தீவிரவாதிகள், கொலை, கொள்ளையர்களைப் பிடிக்க வாகன சோதனைகள் இருக்கின்றன. கருப்பு பிலிம்களை அகற்றுவதன் ஊடாக எதைப் பார்த்து கண்டுபிடித்துவிட முடியும் - உள்ளிருப்போரின் தனிமையைக் கெடுப்பதைத் தவிர? மற்ற வாகனங்கள் அனைத்தையும் விட உயரம் குறைவானவை மகிழுந்துகள். அவை மகிழுந்துகளாக இருப்பதற்கு முக்கியமான காரணம் அதில் உள்ள privacy என்பது என் கருத்து. அதுவும் குடும்பத்தோடு செல்லும்போது, சிரிப்பு, மகிழ்ச்சி, கிண்டல் என செல்லும் தருணங்களை ரசித்தவர்களுக்கு அத்தனை பேரும் சுற்றி பார்த்துக் கொண்டிருக்கும் காரணத்தால் மூஞ்சியைத் தூக்கி வைத்துக் கொண்டு வரும் கொடுமையை சகித்துக் கொள்ள முடியாது.  போக்குவரத்து சிக்னல்கள், நெருக்கடிகள் உள்ள இடங்களில், வண்டி ஓட்டுபவரைத் தவிர மற்ற அனைவரும் மகிழ்வுடன் இருக்கும் தருணங்களுக்கு இந்த நடவடிக்கை கடுப்பைத் தரக்கூடியது. இந்த நடவடிக்கைக்குப் பிறகு குடும்பத்துடன் மகிழுந்தில் செல்லவில்லை என்றாலும், சாலையில் செல்லும் போது கார்களில் செல்ல

SVTC செல்வம் சார் நினைவாக...

எல்லைகளைக் கடக்கலாம் எங்கள் எழுத்து! ஆனால்... எங்களின் ஆனா... ஆவன்னாவில் நிறைந்திருக்கிறாய் நீ! எங்கள் வெற்றிப் படிகளைத் திரும்பிப் பார்க்கையில் ஒவ்வொரு புகைப்படத்திலும் உன் புன்னகை! என் அக்கா தொடங்கி அண்ணன் மகன் வரைக்கும் எங்களுக்கு ஆரம்பக் கல்வி தந்த ஆசான் நீ... முன்னாள் சென்னை காவல்துறை ஆணையர், அன்றைய சிவகங்கை மாவட்ட ASP ராஜேந்திரன் அவர்களுக்கு மாலை அணிவிக்கும் சாமி சமதர்மம், பின்னால் SVTC செல்வம்  ’எழுமின்! விழிமின்!’ என்ற மதத்தைத் தாண்டிய விவேகானந்தரின் வரிகளை நீ இளம் நெஞ்சங்களில் விதைத்தாய்! ஒட்டுமொத்த பள்ளியையும் உட்கார வைத்துக் கொண்டு சிரிக்கச் சிரிக்க நீ எடுக்கும் வகுப்பு மறக்காது எமக்கு! இந்தி கற்க மாட்டேன் என்று ஒரு பொடிப் பயல் சொல்கிறானே என்றில்லாமல் என் உறுதிக்காகவே பள்ளியிலிருந்து இந்தியை நீக்கி வைத்து எனக்கு முதல் கொள்கை வெற்றியைத் தந்தவன் நீ! 1980களில் SVTC-ன் ஆண்டு விழா நிறைவில் எடுக்கப்பட்ட குழுப்படம் எங்கள் வளர்ச்சி கண்டு பூரித்த பெருமகன்! மாறாத பாசத்துடன் எங்களை ஏற்றிவைத்துக் கொண்டாடிய எம் தந்தையின் தோழன்! 1

ஆயிற்று பத்தாண்டுகள் அருமைத் தோழர்களே!

(அழகப்பா அரசு கலைக் கல்லூரி - இளம் வணிகவியல் 1999-2002 (B.Com 99-02) மாணவ நாட்களின் நினைவாக...) ஆயிற்று பத்தாண்டுகள் அருமைத் தோழர்களே! நம்ப முடிகிறதா நம்மால்? 2002 ஏப்ரல் 25! கடைசி நாள் மாணவர்களாய் கண்கலங்க விடைபெற்று ஆயிற்று பத்தாண்டுகள்! கல்லூரி கலங்க ஆடி மகிழ்ந்த நாட்கள் அடங்கி ஆயிற்று பத்தாண்டுகள்! அடிதடி... கும்மாளம்... ஆர்ப்பாட்டம்... அந்யோந்நியம்... அத்தனையும் முடிந்ததாய் மனம் நொறுங்கி ஆயிற்று பத்தாண்டுகள்! பவநகர் ஸ்டேடியம்... அழகப்பர் நினைவிடம்... அஞ்சல் நிலையம்... வாசல் பெட்டிக் கடை... தைல மரங்கள்... சைக்கிள் ஸ்டாண்ட்... ஸ்டோர் நோட்புக்கு... நூலகத்தின் பின்னோடும் ரயில்வே சிக்குபுக்கு... கேண்டீன் கணக்கு... ஆங்காங்கே மரத்தடியில் ’கடலை’ ஆமணக்கு! மர பெஞ்ச் ஓவியம்... கரும்பலகைக் கவிதை... அன்பு, நட்பு, காதலென்று அவரவர் நினைப்புக்கேற்ப அழியாத ஒரு விதை! டுர்டுர் வண்டியில ரெண்டு வருசம் டூரு! மலை மலையாய் ஏறி, கடல் கடலா குளிச்சு, அருவி அருவியா நனைஞ்சு, விடிய விடிய முழிச்சு சீட் இல்லாட்டி சூட்கேஸு... அதுவும் இல்லைன்னா தரையி

ஆறு வித்தியாசம் கண்டுபிடியுங்கள்!

”இம்மண்ணில் திராவிடர்களாக இருக்கும் பிறமொழியாளர்களையும் கட்சி “உங்களை பிறமொழியாளர்கள் என்றுசொல்லி உங்களைப் பிறராக பார்க்க நாங்கள் விரும்பவில்லை. உங்களின் மூலத் தாய்மொழியாம் தமிழுக்கு திரும்பிட, உங்களுக்கு உள்ள முழு உரிமையை நாங்கள் ஏற்கிறோம். நீங்கள், நாங்களென ஏன் இனி இருக்க வேண்டும்? வாருங்கள் நாம் தமிழராய் ஒன்றாவோம்! உயர்வோம்!" (ப.எண் 50) என அழைக்கிறது”  - நாம் தமிழர் கட்சி ”இந்தியாவில் உள்ள முஸ்லிம் கிறிஸ்துவர் அனைவரும் இந்துக்களே! இவர்கள் அங்கிருந்தாலும் தங்கள் தாய்மதம் இந்துமதமே என ஒப்புக் கொள்ள வேண்டும். இராமன், கிருஷ்ணனை கடவுளாக ஏற்க வேண்டும். அவர்கள் தங்கள் தாய் மதத்திற்குத் திரும்புவதை நாங்கள் வரவேற்கிறோம். இந்துக்களாக ஒன்றிணைவோம்!” - இந்துத்துவவாதிகள்

சார் பெட்ரோல் எங்க போடுறாங்க தெரியுமா?

”மணி ஏழரை ஆயிடுச்சு! எட்டு மணிக்குள்ள பில் கட்டியாகணும். இல்லைன்னா எனக்கு கால் பண்றது கஷ்டமாயிடும்” என்று அக்கா புலம்பிய காரணத்தால், கலையை இழுத்துப் போட்டுக் கொண்டு மாண்டியத் சாலையில் இருக்கும் ஒரு தனியார் செல் நிறுவன பணம் உறிஞ்சியகத்திற்கு சென்றேன். அதென்ன பணம் உறிஞ்சியகமா? சொல்கிறேன். மாத செல் கட்டணம் கட்ட சென்ற இடத்தில், ’கார்டா? கேஷா?’ என்றார்கள். வழக்கமாக ’கார்டு’ என்றால், அங்கே போய் தேய்த்துக் கொள்ளுங்கள். பணம் என்றால் இங்கே கட்டுங்கள் என்பார்கள். ஆனால் கேஷ்ன்னா அங்க தனியா ஒரு மெஷின் இருக்கும் அதில போய் கட்டிடுங்க என்றார். உண்மையில் முதல் முறையாக இப்போது அந்த இயந்திரத்தைப் பார்த்தேன். ஏ.டி.எம்-இல் பணம் எடுப்பதைப் போல ஒவ்வொரு நோட்டாக வாயில் வைத்தால் மாட்டுக்கு தீனி கொடுப்பதைப் போல சரேலென உறிஞ்சிக் கொள்கிறது. ஒரு 500 நூபாய் நோட்டை வைத்தேன். உறிஞ்சிக் கொண்டு, பெற்றுக் கொண்டதற்கான சிட்டையை நீட்டியது. கிழித்தெடுத்துக் கொண்டு வந்துவிட்டேன். ஏ.டி.எம்-களில் பணம் எடுக்கும் போதெல்லாம், ’இதே போல பணம் கட்டுவதற்கு இடம் இல்லையல்லவா? இருந்தால் நன்றாக இருக்குமே.. அவரவர் வங்கியில் காத்திருப்

ஒன் வே-யில போங்க சார்!

ஒருவழிச்சாலையில் கூட்டமே இல்லை என்று தப்பித்தவறி எதிர்த் திசையில் சென்று விட்டாலும் போக்குவரத்து காவலரிடம் மாட்டிக் கொண்டால் போச்சு... அதிலும் அண்ணா சாலை பகுதியில் என்றால் கேட்கவே வேண்டியதில்லை. திட்டுவார்கள் அல்லது தீட்டிவிடுவார்கள். ராயப்பேட்டையிலிருந்து காங்கிரஸ் குத்துச்சண்டை மைதானம் வழியாக அண்ணா சாலைக்குள் நுழையும் சாலை அப்படிப்பட்ட சாலைகளில் ஒன்று! ஆனால், அதே போக்குவரத்துக் காவல்துறையினர் இந்தப் பக்கமா போங்க... இந்தப் பக்கமா போங்க... என்று சந்துக்கிருவராய் நின்று வழி திருப்பிவிட்டால் எவ்வளவு மகிழ்ச்சியாயிருக்கும்.  அந்த அனுபவம் தான் இன்று! ஆம். மெட்ரோ பணிகள் நடப்பதால், அண்ணாசாலை தர்காவைத் தாண்டி அதே சாலையில் சைதை நோக்கிச் செல்வதைத் தடுத்து,  ராயப்பேட்டை திரு.வி.க சாலை வழியாகச்சுற்றி, மணிக்கூண்டு தாண்டி ஒயிட்ஸ் சாலை வழியாக அண்ணா சாலையில் மீண்டும் நுழையுமாறு வழி அமைத்திருக்கிறார்கள். அதே போல் திரும்பி வரும் வழியில், அண்ணா சாலையில் இருபக்கச் சாலைகளிலும் சென்ட்ரல் நோக்கிச் செல்லலாம். இரவில் கூட இவ்வழி தைரியமாகப் பயணம் செய்யமுடியாது. ஆனால் இன்று தெனாவட்டாக அந்த வழியில் வரும

காலங்கடந்த பதிவு! - சிந்தாநதிக்கு இரங்கல்!

யாருடைய நினைவு என்றைக்கு வரும் என்று சொல்லமுடியாது? திடீரென்று சாலையின் விளக்கொளியைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதோ, வாகனத்தில் பயணித்துக் கொண்டிருக்கும்போதோ, எப்போதோ சந்தித்தவர்களின் நினைவு தோன்றும்! பிறகு அது வாய்ப்பான நேரத்தில் மீண்டும் நினைவுக்கு வருவதும், வரும் நேரத்தில் தொடர்பு கொள்ளவோ, விசாரிக்கவோ வாய்ப்புக் கிடைப்பதும் அரிது! அப்படி யாரையாவது தொடர்புகொள்ள, தேடிக் கொண்டிருக்கும் போது அந்த நபர் மறைந்துவிட்டார் என்ற செய்தி கிடைத்தால் எப்படி இருக்கும்? ’அவர் போயி வருசம் ஆச்சே!’ என்று ஊரில் யாரைப் பற்றியாவது கேட்டால் கிடைக்கும் பதிலைப் போலத் தான் ’சிந்தாநதி’ மறைந்து இரண்டாண்டுகள் ஆயிற்று என்ற தகவலையும் நான் தெரிந்துகொண்டேன். வலைப்பூவில் எழுதத்தொடங்கிய காலத்தில், blogspot-இல் எழுதும் எனக்கு, Wordpress-காரர்களே அந்நியமாகத் தெரிவார்கள். யாருமே பயன்படுத்தாத blogspirit.com-இல் ஒருவர் எழுதிக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? அதிலும் கஜகஜவென்று, எந்த மூலையிலாவது துடித்துக் கொண்டோ, எரிந்துகொண்டோ இருக்கும் ஏதாவது ஒரு GIF படத்தோடு கூடிய அந்த வடிவமைப்பைப் பார்க்கும்போதெல்லாம், எல்லா கலரைய

கள்ள நோட்டைக் கண்டுபிடிப்போம் வாங்க!

கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே எ.எ.வி.வி. (எண்ணி எழுதாமல் விட்ட விசயம்) மற்றொன்று - கள்ளநோட்டு விவகாரம். நாடெங்கும் இப்பிரச்சினை கவனம் பெற்றிருக்கும் சூழலில் இப்போதாவது எழுதிவிடுவோம் என்ற வேகத்துடன் அதிகாலை 4மணிக்கு எழுதத் தொடங்குகிறேன். -------------------------------------------------------------------- கை யில் கிடைக்கும் நோட்டு ஒத்தையோ கத்தையோ, அது கள்ள நோட்டா நல்ல நோட்டா என்று சோதனை செய்து, பணத்தைக் கொடுத்தவர் வயிற்றில் பீதியைக் கிளப்பி ஆராய்ச்சி செய்யும் பழக்கம் 2010-ன் இறுதிவாக்கில், மின்னஞ்சலில் கிடைத்த தகவல்களைக் கொண்டு எதார்த்தமாய் தொடங்கியது.  எனது ஆய்வில்... கிட்டத்தட்ட ஆய்வாகவே இதைச் செய்தேன் என்பதை அருகில் உள்ளவர்கள் அறிவார்கள்- நொந்த மனத்துடன்....! ஏன்னா அவங்க கிட்ட இருந்துதானே கத்தையைப் புடுங்கி ஆராய்ச்சி பண்ணுவேன். அவங்களுக்கும் இந்த ஆய்வு நோய் தொற்றிக் கொண்டது என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும். எங்களது ஆய்வில் மிகக் குறைந்த அளவு என்று எடுத்துக் கொண்டாலும் 15 % முதல் 25% வரை கள்ள நோட்டுப் புழக்கம் இருந்துவருகிறது என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது. உண்மையில்

ஒரே மெட்டு - எத்தனை பாடல்!! அடடா...என்றும் ராஜா!

அவசியம் எழுத வேண்டும்; பிறருக்குச் சொல்ல வேண்டும் என்று நாம் கருதி பணி/சோம்பல் காரணமாக தள்ளிப்போடும் செய்திகள் பல பிறரால் சொல்லப்பட்டுவிடும் போது, நாம் நினைத்தது வந்துவிட்டதே என்ற மகிழ்ச்சியும், கொஞ்சம் இயலாமையால் உருவான பொறாமையும் ஏற்படுவதை மறுக்க முடியாது. ஆனால் அதை மீறி, மகிழ்ச்சியை வளர்த்துக் கொள்ளுதலே நமது உடலுக்கும் மனதுக்கும் நல்லது என்கிற உணர்வில் தான் இது வரை செயல்பட்டு வந்திருக்கிறேன். (வேற வழி...!) அந்த வகையில் நீண்ட நாட்களாக நினைத்துவைத்திருந்த சில விசயங்கள் பதிவாகவோ, செய்தியாகவோ, படத்திலோ வெளிவந்து விட்டன. எனவே இனியும் அவற்றைக் காலம் கடத்தாமல் பதிவது என்ற நோக்கில் தொடங்கிவிட்டேன். அநேகமாக, அடுத்த ஓரிரண்டு பதிவுகளும் இதே திக்கில் இருக்கலாம்.. --------------------------------------- இளையராஜாவின் பாடல்களைத் தொடர்ந்து கேட்டு, அணுஅணுவாய் ரசிக்கும் பழக்கம் அண்ணன்களிடமிருந்து தொற்றியது. ஒவ்வொரு இசை நுணுக்கங்களையும் ரசித்து, வியந்து, மகிழ்வது தனிசுகம். இப்போதிருக்கும் சன் மியூசிக் வருவதற்கு முன்னால், சன் தொடங்கிய சில ஆண்டுகளில் சன் மூவீஸ் என்றும், சன் மியூசிக் என்றும் இரண்