முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இடஒதுக்கீட்டால் உயர்ந்த ஒருவர் சுயஜாதித் திருமணம் மூலம் இன்னொரு ஒடுக்கப்பட்டவரை முன்னேற்ற முடியுமா?

அண்ணன் டி.வி.எஸ்.சோமு அவர்களின் வாட்ஸ் அப் பதிவுக்கு (பேஸ்புக்கிலும் போட்டுள்ளார் - https://www.facebook.com/reportersomu/posts/1945338828943651) நான் இட்ட பதில் இங்கே தொகுத்துத் தரப்படுகிறது. //என் நண்பன் சொன்னது: "ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த நான், என் சாதிக்கான இட ஒதுக்கீட்டில் படித்தேன்; உதவித்தொகை வாங்கினேன்; அரசு வேலையில் சேர்ந்தேன்: பதவி உயர்வு பெற்றேன். ஆனால் என் சாதி இழிவானது என எண்ணினேன்; ' உயர் சாதி' என நம்பப்படும் ஒரு பெண்ணை திருமணம் செய்தால் இந்த 'இழிவு' நீங்கும் என 'காதலித்து ' மணம் புரிந்தேன். இப்போதுதான் உணர்கிறேன்... எனக்கு கல்வி வேலை, பதவி உயர்வு, வாழ்க்கை அளித்த என் சாதியிலேயே திருமணம் செய்திருந்தால், அதே ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த இன்னொரு குடும்பமும் முன்னேறி இருக்கும் அல்லவா?!" என்றார். அவரது கேள்விக்கு எனக்கு பதில் சொல்லத் தெரியவில்லை! - டி.வி.எஸ். சோமு// என் பதில்: சரி, தவறு என்பதை படிப்போர் முடிவு செய்து கொள்ளுங்கள். அண்ணன் சோமு அவர்களின் நண்பர் அறிந்துகொள்ள வேண்டிய செய்திகளைக் குறிப்பிடுகிறேன். 1. “என் சாத

திருக்குறளை மலத்தோடு ஒப்பிட்டாரா பெரியார்? உண்மை என்ன?

இதைத் தான் அயோக்கியத்தனம் என்கிறோம். எதை? குறளை பெரியார் மலத்துடன் ஒப்பிட்டார்... இதோ ஆதாரம் என்றார்கள்.  எது? இது தான் அது!  "வள்ளுவர் குறளையும் அந்தப்படியே அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன். எல்லாவற்றையும் குறை சொல்லும்போது பலர் என்னிடம், எல்லாம் போய்விட்டால் நமக்கு எதுதான் நூல் என்று கேட்பார்கள். நான் இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது; அதை எடுத்து விடு என்று கூறினால் அந்த இடத்தில் என்ன வைப்பது? என்று கேட்பதா என்று பதில் கூறுவேன்."  பார்த்தியா... பார்த்தியா... இதைத்தான் சொன்னோம்னு குதிச்ச கூமுட்டைகள், கூமுட்டைகள் சொல்லுக்குக் குட்டிக்கரணம் போட்ட கூறுகெட்டதுகள் எல்லோரையும் நாம் கேட்டுக் கொள்வது, அந்தக் கட்டுரையை முழுமையாகப் படியுங்கள் என்பது தான். அவ்வளவு வேண்டாம்... அதற்கு முன்னேபின்னே என்ன சொல்லியிருக்கிறார்.. அதைப் படித்தாலே புரியும் அவரது நேர்மைத் திறம்கொண்ட பார்வை!  பெரியாருக்குப் பொழிப்புரை, தெளிவுரையெல்லாம் தேவையில்லை. இதோ பெரியார் பேசுகிறார்... கேளுங்கள்! "மக்களுக்கும் நான் குறள் பற்றி பேசுவது மிகுந்த ஆச்சரியமாய் இருக்கிறது