முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

கி.வீரமணி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பொள்ளாச்சி அவலம்: ஆசிரியரின் பேச்சும், பார்ப்பனர்களின் ஏச்சும்!

பொள்ளாச்சி அவலம் தொடர்பாக நாடே கொந்தளிப்பில் இருக்கிறது. பெண்களைப் பெற்றோர், மனிதநேயம் கொண்டோர், சமூக அக்கறை கொண்டோர் பதறுகிறார்கள். ஆனால், பெரியாரின் பெண்ணுரிமைக் கொள்கைகளும், அதை அடுத்து வழிநடத்திச் செல்லும் ஆசிரியர் வீரமணியும் தான் பொள்ளாச்சி அவலங்களுக்குக் காரணம் - பொம்மனாட்டிகள் கெட்டுப் போறதுக்கு இவா தான் காரணம் என்று ஒரு வன்மமான கட்டுரை வெளியிடுகிறது குறுமதியாளர் குருமூர்த்தியின் துக்ளக் ஏடு! பெண்ணுரிமை பேசியதும், பெண்கள் மீது திணிக்கப்பட்ட அடிமைத் தளைகளைக் களைந்தெறியப் போராடியதும் தான் பொள்ளாச்சி அவலங்களுக்கு காரணம் என்று பெரியார் மீது அவதூறு பரப்புபவர்களுக்கு எச்சரிக்கை செய்யவும், உண்மையில் ஆசிபா, நந்தினி, பொள்ளாச்சி கொடுமைகள், கோவை சிறுமி என ஆணாதிக்க வக்கிர வெறி கொண்ட இந்தக் கும்பலின் முகமூடியை கிழித்து எறிந்தும் பெரியார் திடலில் நடக்கிறது அவசர சிறப்புக் கூட்டம். இவையெல்லாம் விளைவுகள் என்றால், இதற்கான நியாயங்களை உறுதி செய்து இந்த மனவோட்டத்தை மக்கள் மத்தியில் காலம் காலமாக தக்க வைத்துக் கொண்டுள்ளவற்றை எடுத்துப் போட்டுத் தோலுரிக்க வேண்டாமா? “பெண்களைப் பாவ யோனியில் பிறந்தவர்...

பன்றியும் பூணூலும்

பன்றிக்கு பூணூல் போடும் போராட்டம் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக முகநூலில் நான் கண்ட சுவரெழுத்து ஒன்றின் படம் மூலம் அறிந்தேன். இது தொடர்பாக அமெரிக்கை நாராயணன் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களிலிருக்கும் பூணூலூடுருவிகள் கொந்தளித்து திராவிடர் கழகத்துக்கு எதிராக ஸ்டேடஸ் போட்டிருக்கிறார்களாம். இந்தப் போராட்டத்தை அறிவித்திருப்பது த.பெ.தி.க! போராட்டத்துக்கான கிரெடிட் அவர்களுக்குப் போவது தான் சரியானது. திராவிடர் கழகம் அப்படியொரு போராட்டத்தை அறிவித்தால், அதற்கான எதிர்வினையையும் திராவிடர் கழகம் தாராளமாக எதிர்கொள்ளும் என்பது வரலாறு. ஆனால், என்ன நடக்கிறது, யார் நடத்துகிறார்கள் என்றே தெரிந்துகொள்ளாமல் கூறுகெட்டத் தனமாக குதிப்பது பின்புத்திப் பார்ப்பனர்களுக்குப் பழக்கமானது. என்ன செய்ய? நிற்க, மகாவிஷ்ணு பன்றி அவதாரம் எடுத்ததாக புராணம் வைத்து, தீபாவளி கொண்டாடும் பார்ப்பனர்கள், அந்த வராக அவதாரத்தின் அடையாளமான பன்றிக்கு பூணூல் மாட்டினால் ஏன் கொந்தளிக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒரு வேளை பூணூல் அணிவிப்பதற்கான / உபநயனம் செய்வதற்கான (பூணூல் கல்யாணம் செ...

’கருப்புச் சட்டை’ காத்திருக்கு பெரியார் திடலில்!

அப்போது ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நீ திடலுக்கு வரத் தொடங்கினாய்! நெஞ்சினிக்கும் நெய்மணக்கும் நெய்வேலி திராவிடர் கழகப் பொதுக்குழுவின் தீர்மானத்துக்குப் பிறகு, நாற்பதுக்கு நாற்பதென்று வெற்றிக்கனி பறித்து, சென்னையிலிருந்தபடி டெல்லியின் ஆட்சிக் கட்டிலுக்கு நான்கு கால்களையும் உறுதிசெய்திருந்தாய்! 2004 ஜூன் - கடல்கடந்தும் தமிழனாய் இணைத்த சிங்கப்பூர் சாரங்கபாணி நூற்றாண்டு விழாவுக்காக மீண்டும் கால் பதித்தாய் பெரியார் திடலில்! ’காலவெள்ளத்தில் வெவ்வேறு பயணங்களிலிருந்த எங்களை இணைத்தார் சிங்கப்பூர் சாரங்கபாணி - என்னை அழைத்ததும் ஒரு சாரங்கபாணி (ஆருயிர் இளவல் வீரமணி) தான்’ என்று சிலேடையால் மகிழ்ந்தாய்! ’அண்ணன் - தம்பி உறவென்றாலும் சண்டை வரலாம்; தாய் - தந்தை உறவென்றாலும் சந்தேகம் வரலாம்; திராவிடர் கழகத்துக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இருப்பது தாய் - மகன் உறவு’ என்று நெஞ்சுருகச் சொன்னாய்! இறையனார் மறைந்தார் - ஆசிரியர் அமெரிக்காவில்! தம்பிக்கும் சேர்த்து ஆறுதலாய் வந்து நின்றாய் திடலின் ஒரு குறுகிய அறையில்! பொருளாளர் சாமிதுரை மறைந்தார் - அவர்தம் அன்பு நண்பர் திருச்சி ம...

பிறகு பேசிக் கொள்ளலாம் #திக - திமுக கருத்து வேறுபாடு

சொல்வதற்கு ஏராளம் பதில்கள் இருக்கின்றன; கேட்பதற்கு ஏராளம் கேள்விகள் இருக்கின்றன. தீர்க்கப்படவேண்டிய சந்தேகங்கள் இருக்கின்றன... இரு தரப்பிலும்! அவையெல்லாம் சாவகாசமாக சந்தோசமாக இருக்கும்போது பேசிக் கொள்ள வேண்டியவை. அப்போது அவை விட்டுக் கொடுத்தல்களாகவும், புரிதல்களாகவும் மாறிப் போகும். ஒரு பிரச்சினையின் மீதான வெவ்வேறு நிலைப்பாட்டை வைத்துக்கொண்டு, மீண்டும் மீண்டும் அதையே கிளறிக் கொண்டிருந்தால், வார்த்தை வளர்ப்பு காரணமாக புரிதல்கள் கூட மாறிப் போகும் அபாயம் இருக்கிறது. தமிழகத்தில் ஏராளமான அவசரமான பிரச்சினைகள் சூழ்ந்திருக்கின்றன. அதைவிட்டுவிட்டு, ஒன்றுமில்லாத பிரச்சினையை சொறிந்துகொண்டு நமக்குள் நாமே முரண்பட்டுக் கொண்டிருத்தல் நலமன்று. திமுக தோழர்களுக்கு புரிதலுக்காக மீண்டும் ஒன்றைச் சொல்லுகிறேன். அதிமுக அணிகளுக்குள் எந்த அணி இருக்க வேண்டும் என்ற எங்கள் பார்வை வேறு. திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரிப்பதென்பது வேறு. இதில் நமக்குள் இருக்கும் கருத்து வேறுபாடு தவிர, பிற பிரச்சினைகளில் ஒரே திசையில் தான் நாம் பயணிக்கிறோம். அது தொடர வேண்டும் என்றும் விரும்புகிறோம். வாரிசு அரசியல், 2ஜி...

யாரிடமும் நல்ல பெயரெடுக்க அவசியமில்லை

சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் நேற்று நடந்து கொண்ட விதம் பற்றி நமக்கு மாற்றுக் கருத்தும், விமர்சனமும் உண்டு. அதை சொல்ல வேண்டிய முறையில் சொல்ல வேண்டிய கடமை கொண்ட திராவிடர் கழகத் தலைவர் நேற்று தன் கருத்தை வெளியிட்டிருக்கிறார். இது யாருக்கு உவப்பானது, யாருக்கு வெறுப்பானது என்பதையெல்லாம் யோசித்து கருத்தை வெளியிட வேண்டிய அவசியம் திராவிடர் கழகத்துக்கு ஒரு போதும் இல்லை. அதற்கு மறுப்பு தெரிவிக்க விரும்புவோர், மாற்றுக் கருத்து கொண்டோர் தாராளமாக தெரிவிப்பதை யாரும் எதிர்க்க முடியாது. தரம்தாழ்ந்த விமர்சனங்களும் வரும் என்பது நமக்குப் புதிதல்ல. அரசியல் தளத்தில் இயங்கும் இயங்கங்களுள் திராவிட இயக்கத்தின் கொள்கைகளை பெரிதும் செயல்படுத்தக் கூடிய இயக்கமாக திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பார்ப்பதன் காரணமாகத் தான், அது வலுவோடிருக்க வேண்டும் என்றும், ஆட்சியில் அமர்ந்து திராவிட இயக்கக் கொள்கைகளை சட்டங்களாகவும், திட்டங்களாகவும் வடித்தெடுக்க வேண்டும் என்றும் நாம் விரும்புகிறோம். அதனால் ஆதரிக்கிறோம். பா.ஜ.க - தி.மு.க கூட்டணி ஏற்பட்ட 1999, 2001 தேர்தல்களைத் தவிர மிகப் பெரும்பாலான தேர்தல்களில் திமுக...

ராகு காலம் பார்த்தாரா வீரமணி?

இணைய தளத்தில் அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட சின்மயி விவகாரம் குறித்து புத்தகம் எழுதிய விமலாதித்த மாமல்லன் என்பவர், தனது வலைத்தளத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் குறித்து அவதூறு  பரப்பியுள்ளார். அதைச் சில அறிவிலிகளும் பரப்பிக் கொண்டிருக்கின்றன. //பெரியவர், தம் வீட்டுப் பிள்ளையின் திருமணத்துக்குப் பெண் தேடிக்கொண்டிருக்கும் சமயத்தில், தி.க. வீரமணி அவர்களின் பேத்தி திருமணத்துக்கு இருப்பதாகத் தெரிய வரவே அவருடன் தொடர்புகொண்டிருக்கிறார். இருவரும் பலவருடங்களாய் ஒருவருக்கொருவர் நன்கு தெரிந்தவர்கள் என்பதால் மகிழ்வுடன் அளவளாவத் தொடங்கிவிட்டனர். பெண்பார்க்க வரும் நாளையும் முடிவுசெய்துகொண்டனர். அன்று மாலை ஒரு நான்கரை மணி வாக்கில் வருகிறோம் என்று கூறியிருக்கிறார் பெரியவர். நாலரை வேண்டாம் அன்றைய தினம் நாலரை ஆறு ராவுகாலம் எனவே அதற்கு அப்புறமாக வாருங்கள் என்றிருக்கிறார் திரு. தி.க.வீரமணி.// யார் இந்தத் தகவலை திரு.விமலாதித்த மாமல்லன் அவர்களுக்குச் சொன்னவர்? அந்தப் பெரியவரேவா? இல்லை. அந்த சோ கால்ட் பெரியவரின் உறவினராம். அவர் என்ன வகை உறவினர்; எத்தனை விட்ட உறவினர் என்பதெல்ல...

அட சின்னச் சின்ன அன்பில் தானே...

தொப்பிகளின் ரசிகன் நான்!  காரைக்குடியில் இருந்தவரை காலை அணியும் தொப்பியை இரவு வீட்டுக்குத் திரும்பும் வரை கழற்றும் வழக்கம் இல்லை. விதம்விதமான தொப்பிகளின் மேல் எப்போதும் ஈர்ப்பு உண்டு. வழக்கமான முன் பக்கம் மட்டும் நிழல் தரும் தொப்பி, கிரிக்கெட் அம்பயர்கள் & சில வீரர்கள் பயன்படுத்தும் வட்ட வடிவ திடமாக நிற்கும் பட்டியுடைய நிழல் தரும் தொப்பி, இன்றைக்கு சேரன் உள்ளிட்ட சில இயக்குநர்கள் பயன்படுத்துவதைப்போல வட்ட வடிவமாக, ஆனால் மடங்கியிருக்கும் தொப்பி (எம்ஜிஆர் தொப்பியின் நவீன வடிவம்) என்று எல்லா வகையிலும் பல வண்ணங்களில் குறைந்தது 10 தொப்பிகளாவது வீட்டில் இருக்கும்.  குஷி படம் வந்த பின் வழக்கத்தை விட நீளமான வளைந்த முன்பகுதியுடனான தொப்பிகள் வரத் தொடங்கின. கார்த்திக் ஸ்டைல் தொப்பி அய்யாவுக்குப் பெரிதும் பிடிக்காவிட்டாலும், அதன் மேல் ஓர் ஆசை எப்போதும் உண்டு எனக்கு! இவை தவிர முன் பக்கம் கொஞ்சம் காற்றோட்டம் வரும் வசதியுள்ள சிங்கப்பூர் தொப்பி (அது என்ன அப்படி பெயர் என்றெல்லாம் கேட்கக் கூடாது; அப்போது அப்படி ஒரு தொப்பி சிங்கப்பூரிலிருந்து வந்தது.  அதனால் அந்தப்...

’பிராமணாள் கபே’யும் நாயுடுஹால், கோனார் நோட்சும்!

திருச்சி திருவரங்கத்தில் இருந்த ‘ஹோட்டல் ஸ்ரீ கிருஷ்ணய்யர் என்பதில், கடந்த சில மாதங்களுக்கு முன் திடீரென ‘பிராமணாள்’ என்ற பெயர் நுழைக்கப்பட்டது. தகவலறிந்த திராவிடர் கழகத் தோழர்கள் நேரில் சென்று ‘பிராமணாள்’ பெயர்ப்பலகையை நீக்குங்கள் என்று கோரிக்கை விடுத்தனர். பல முறை வேண்டுகோள் விடுத்தும், அவர் மறுக்கவே பிரச்சினை காவல்துறையிடம் சென்றது. அங்கு பல முறை பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. காவல்துறையும், அரசு வழக்கறிஞரும் கூட ‘பிராமணா’ளுக்கு ஆதரவாக இருக்கவே, அடுத்தகட்ட நடவடிக்கையாக விளக்கக் கூட்டத்தினை நடத்த திராவிடர் கழகம் அனுமதி கோரியது. தமிழக முதல்வருக்கு (அவருடைய தொகுதி என்பதாலும்) வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டார் திராவிடர் கழக்த் தலைவர் கி.வீரமணி. இதற்கிடையில் இன்னும் சில பெரியாரிய அமைப்புகளும் எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கின.  (தந்தை பெரியார் திராவிடர் கழகம், பெரியார் பாசறை போன்ற அமைப்புகள் போராட்டத்தில் இறங்கின. கைது, சிறை வரை சென்றது. ஒட்டுமொத்த பெரியாரியக் கருத்தாளர்களும் இந்த இழிவு துடைக்கும் பணியில் திரண்டனர். விளக்கக் கூட்டம் நடத்துவதற்கு, மூன்று முறை த...

’தமுக்கு’ வீரமணி: ஆசிரியரின் அறிக்கையும், அலர்ஜிக்காரர்களின் அரிப்பும்!

தமுக்கு வீரமணி என்று பட்டம் தருகிறார்களாம்! அதற்கு ஆதரவு தந்து கை தூக்குகின்றனராம் அலர்ஜிக்காரர்கள்!  http://www.facebook.com/photo.php?fbid=166589886723898&set=a.132067643509456.20892.100001186622923&comments தமுக்கு எங்கள் ஒடுக்கப்பட்டோரின் இசைக்கருவி தான்! அதைச் சுமப்பதிலும் அடிப்பதிலும், அதன் மூலம் அடைமொழிபெயர் பெறுவதிலும் கூட எங்களுக்கு ஒன்றும் மனஒதுக்கீடு இல்லை! இன்னும் சொல்லப்போனால் அந்தப் பெயருக்கு ஒரு பொருத்தமும், கூடவே வரலாறும் உண்டு! ”1995 செப்டம்பரில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா உத்தரப்பிர தேச அரசு சார்பில் மூன்று நாள்கள் கோலா கலமாகக் கொண்டாடப்பட்டது. இந்தியா முழுவதுமிருந்தும் மக்கள் லட்சக்கணக்கில் வந்து குவிந்தனர். இதனைப் பொறுக்க மாட்டாத ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சந்திராசாமி பின்னணியில் பிள்ளையார் பால் குடித்ததாக இந்தியா முழுமையும் பரப்பினர். இது புரட்டு என்பது நிரூபிக்கப்பட்டது பிள்ளையார் கொழுக்கட்டை தின்றால் ரூபாய் ஒரு லட்சம் பரிசு என்று அன்றைய திராவிடர் கழக பொதுச்செயலாளர் கி. வீரமணி அவர்கள் சென்னை அண்ணா சாலையில் தமுக்கு (டாம்டாம்) அடித்துப் பிரச்சாரம் செய்...

தமிழில் சமஸ்கிருதத் திணிப்பா? - தமிழர் தலைவர் கி.வீரமணி எச்சரிக்கை

தமிழ் யூனிகோட் முறையில் சமஸ்கிருத கிரந்த எழுத்துகளைத் திணிக்க முயற்சிக்கும் பார்ப்பன முயற்சி குறித்துக் கண்டனம் தெரிவித்தும், தமிழர்களுக்கு அறைகூவல் விடுத்தும் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கை பின்வருமாறு: முதல்வரின் முக்கிய கவனத்துக்கு... ஒருங்குறி (யுனிகோட்) என்ற அமைப்புக்குள்  பார்ப்பன சமஸ்கிருத ஊடுருவல்! ஊடுருவல்!! யுனிகோட் (Unicode)  எனப்படும் ஒருங்குறி முறையென்பது, உலகளவில் உள்ள அனைத்து மொழிகளின் எழுத்துகளையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்ட கணினி எழுத்து குறியீட்டு முறையாகும். இம்முறையில் ஒவ்வொரு மொழிக்கும் இடம் வழங்கப்பட்டிருக்கிறது. இன்றைய கணினி, இணைய யுகத்தில் இத்தகைய ஒருங்கிணைப்பின் அவசியத்தை உணர்ந்து முக்கியமான மென்பொருள் தயாரிப்பாளர்கள் இணையதளங்கள் உள்பட அனைவரும் இக்குறியீட்டு முறையை ஏற்றுக் கொண்டுள்ளன. இதனால் தனியாக எந்த ஒரு புதிய தரவிறக்கமும் (Download) இன்றி சீனம் முதல் அரேபியம் வரை எந்தவொரு மொழி எழுத்தையும் யாரும் படிக்கலாம்; பயன்படுத்தலாம். தமிழ் ஒருங்குறியின் பயன்பாடு கணினித் தமிழ் வளர்ந்த தொடக்க காலத்தில் ஆளுக்கு ஒர...

கழகத் தோழர்கள் பதற்றம் அடையவேண்டாம்! - தமிழர் தலைவர் கி.வீரமணி வேண்டுகோள்

துரோகங்களைச் சந்தித்துப் பழக்கப்பட்டவர்கள் நாம்; அச்சுறுத்தல்கள் நம்மை ஒன்றும் செய்யாது கழகத் தோழர்கள் பதற்றம் அடையவேண்டாம்! - தமிழர் தலைவர் கி. வீரமணி வேண்டுகோள் இன்று (2.7.2010) காலை 7.30 மணியளவில் (சேத்துபட் ஆரணி அருகில்) ஒரு மண விழாவை நடத்தி வைக்க நான் வேனில் பயணமாகி, திருமணம் முடிந்தவுடன் புறப்பட்டு மாலை 3.45 மணிக்கு சென்னை திரும்பும் வழியில் எனக்கு ஒரு தகவல்: வீட்டில் இருந்த காவலாளியை சுற்றி 3 பேர் தடிகளுடன் நின்றிருக்க, மற்றும் 4 பேர் வீட்டின் பின்புறம் நிறுத்தப்பட்டிருந்த எனது காரை இரும்புத் தடிகளால் அடித்து நொறுக்கி, 'ஒழிக!' என்று கோஷங்கள் போட்டுக்கொண்டிருந்தனராம். அதற்கு சற்றுமுன், வீட்டிற்கு வந்த பெரியார் திடல் நிருவாகி சீதாராமன் அவர்கள் எனக்காக காத்திருந்தபோது, வீட்டில் வேலை செய்யும் பெண் மேலே இருந்து பார்த்து, காரை அடித்து நொறுக்குகிறார்கள் என்று கூச்சல் போட்டவுடன், உள்ளே இருந்த குடும்பத்தினர், நிருவாகி சீதாராமன் கீழே இறங்கி வருவதற்குள், அந்தக் கும்பல் ஓடி சாலையின் குறுக்கே கடந்து சென்றுள்ளது. காவல்துறையினர் விரைந்து வந்து முழு விசாரணையை ந...