முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அம்பேத்கர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தாத்தா ரெட்டமலை சீனிவாசன்: மீசையா, மீசையில்லாமலா?

திவான் பகதூர் தாத்தா ரெட்டமலை சீனிவாசனாரின் பிறந்தநாள் இன்று (ஜூலை 7)! இந்நாள் நினைவுக்கு வந்ததும், உடன் நினைவுக்கு வந்த மற்றொன்று அம்பேத்கர் திரைப்படம். தமிழில் அம்பேத்கர் திரைப்படத்தைப் பார்த்தபோதிலிருந்தே இதை எழுத வேண்டும் என்று   நினைத்துக் கொண்டிருந்தேன்.   திவான் பகதூர் ரெட்டமலை சீனிவாசன் முதல் இரண்டு வட்ட மேசை மாநாடுகளிலும் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாக அண்ணல் அம்பேத்கருடன் பங்கேற்றவர் ராவ்பகதூர் ரெட்டமலை சீனிவாசன் (திரைபடத்தில் அப்படித்தான் குறிக்கப்பட்டிருக்கிறது). ஜாபர் பட்டேலின் ”டாக்டர்.பாபாசாகேப் அம்பேத்கர்” படத்தில் வரும் வட்ட மேசை மாநாட்டுக் காட்சியைப் பார்த்தபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.  முதல் வட்டமேசை மாநாட்டுக் காட்சி (அம்பேத்கரின் வலப்புறம் ராவ்பகதூர் சீனிவாசன்) முறுக்கு மீசையுடன் நாம் பார்த்துப் பழகிய ரெட்டமலை சீனிவாசனை அங்கு காணோம். மாறாக தலையில் முண்டாசுடன் மீசையில்லாத ஒரு பார்ப்பனரைப் போலவே காட்டப்பட்டிருப்பார். ராவ்பகதூர் சீனிவாசன் என்ற பெயரைப் பார்த்ததும், ஜாபர் பட்டேலின் (சீனிவாச அய்யங்கார்கள் மாதிரி) மனதில் அ...

தகுதி - திறமை கூப்பாடு ஏன்?

இவய்ங்க தகுதி, திறமையின் லட்சணம் இதுதான். இட ஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்களே, இட ஒதுக்கீடு என்பதொன்று இருந்தும், நமக்கு அதைக் கேட்பதற்கு உரிமையும், அவர்களுக்கு அதை இட்டு நிரப்ப வேண்டிய கடமையும், சரியில்லையென்றால் முறையீடு செய்யும் வாய்ப்பும் இருக்கும் போதே எத்தனை தில்லு முல்லுகள், முடிச்சவிக்கித் தனங்கள் நடக்கின்றன, என்று பாருங்கள்! பி.ஹெச்.டி முடித்தாலும் நமக்கு தகுதி, திறமை வராது என்பான். முடிக்காதவனுக்கெல்லாம் வேலை போட்டுக் கொடுப்பான். இது தான் பார்ப்பனப் பண்ணையம். இதை விட மோசமான நிலையிலிருந்து இவ்வளவு தூரம் மீண்டிருக்கிறோம்.. நம் உரிமையைக் கேட்க துணிந்திருக்கிறோம் என்றால், இதற்குக் காரணமான தந்தை பெரியாரையும், அண்ணல் அம்பேத்கரையும் நினைப்போம். நம் உரிமைகளை வென்றெடுக்கும் வரை இந்த மொள்ள மாரித் தனங்களுக்கெதிராகப் போராடுவோம்.. அய்.அய்.டி. பணி நியமனத்தின் அவலட்சணத்திற்கு ஒரு சிறிய எடுத்துக் காட்டு இதோ,,,, பாருங்கள்.... Employment opportunity in the IIT Madras at Chennai. from thaamaraichchelvi