முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2007 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

'நான் தெரிஞ்சிக்கிட்டது இதைத்தான்'- புலவர் கலிய பெருமாள்

'நான் தெரிஞ்சிக்கிட்டது இதைத்தான்'- புலவர் கலிய பெருமாள் - மணா [நன்றி: புதிய பார்வை- ஜூன் 1-15,2007] உடல்நலக் குறைவுடனிருந்த புலவர் கலிய பெருமாள் மறைந்திருக்கிறார். மயிலத்திலும் திருவையாற்றிலும் புலவர் படிப்பு படித்ததால் 'புலவர்' இவருடன் ஒட்டிவிட்டது. பெண்ணாடத்தில் வார இதழ் ஒன்றிற்காக அவரைப் பேட்டி காணப் போனபோது மதுரை கண் மருத்துவமனைக்குச் சென்று சோதித்துவிட்டு அப்போது தான் திரும்பியிருந்தார். தன்னைப் பற்றிசொல்வதில் உற்சாகமற்ற மனநிலை இருந்தது. தயக்கம் பேச்சினூடே தலைகாட்டியது. ஆந்திராவில் நடந்த நக்ஸல்பாரிப் போராட்டம்தான் இவருக்கு வெளிச்சத்தைக் கொடுத்திருக்கிறது. தலைமறைவு வாழ்க்கை துவங்கி தமிழகத்தில் கொரில்லாக் குழுக்கள் உருவானபோது புலவருடன் இணைந்து செயல்பட்டவர் பிற்காலத்தில் பொன்பரப்பி தாக்குதலில் கொல்லப்பட்டவரான தமிழரசன். 'அழித்தொழிப்பு' இயக்கமாக உடுமலைப்பேட்டையில் துவங்கி தஞ்சை, தர்மபுரி மாவட்டங்கள் வரை தொடர்ந்தது. 1970 பிப்ரவரி மாதத்தில் பெரும் திட்டம் தயாரனது. பெண்ணாடத்தில் புலவரின் தோப்பு. அண்ணாமலைப் பல்கலலக் கழகத்திலிருந்து சில மாணவர்கள் வந்திருந்தார்கள்.

ஆயித்தில் ஒருவன்!

பழைய திரைப்படங்களை எனக்கு நிறைய போட்டுக்காட்டி, திரைப்படங்களின் மீதான ஆர்வத்தை எனக்கு வளர்த்தது என் அய்யாதான்!(அய்யா என்று குறிப்பிடுவது என் தந்தையை!) வீடியோ வந்த புதிதில் எங்கள் இல்லத்தில் மூன்று, நான்கு வீடியோ டெக்குகள் வாடகைக்கு விடுவதற்காக வைத்திருப்போம். வாடகைக்கு டெக் எடுத்து படம் பார்த்த காலம்.. ஆதலால் அன்றைக்கு(1980-ன் இறுதிப்பகுதிகளில்) அது நல்ல தொழில்! தனக்குப் பிடித்த தமிழ் திரைப்படங்கள், தன்னை வியக்கவைத்த ஆங்கிலத் திரைப்படங்கள் என தொடர்ந்து தேடி எடுத்து, படங்களை (வீடியோ கேசட்டுகளை) வாங்கிவருவார் என் தந்தை. எனவே தினம் ஒரு திரைப்படம் எங்கள் இல்லத்தில் நிச்சயம். அப்படித்தான் பீம்சிங் படங்கள், நடிகர் திலகம் சிவாஜி நடித்த திரைப்படங்கள், பழம்பெரும் திரைப்படங்கள்(சகஸ்ரநாமம் நடித்த 'போலீஸ்காரன் மகள்' போன்றவை), தேர்ந்தெடுத்த எம்.ஜி.ஆர் திரைப்படங்கள் என நிறைய பார்த்துக் குவித்திருக்கிறேன். அதிலும் ஆயிரத்தில் ஒருவன் போன்ற திரைப்படங்களை பின்னாட்களில் சன் தொலைக்காட்சியின் துணைகொண்டு நிறைய முறை பார்த்திருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த எம்.ஜி.ஆர். படங்களில் 'ஆயிரத்தில் ஒருவன

ஜீவா மரணம் - "ஓ! மனமே!"

தமிழ்த் திரையுலகில் தனக்கென ஒரு பாணியை வகுத்துக் கொண்டு, தனிக்கவனம் பெற்று வந்த ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ஜீவா அவர்கள், தனது 'தாம்தூம்' படப் பிடிப்பின் முடிவில் ருஷ்யாவில் மாரடைப்பால் இறந்தார் என்ற செய்தி வந்துள்ளது. திடீரென வந்த இச்செய்தியை, ஒலிபரப்பிய சூரியன் பண்பலை தொடர்ந்து அவரது படமான 'உள்ளம் கேட்குமே'வில் இருந்து "ஓ மனமே!" பாடலையும் ஒலிபரப்பியது. எனது செல்பேசியில் கடந்து வந்த காலங்களை, நண்பர்களூடன், குடும்பத்துடன் இருந்த தருணங்களைத் திரும்பப் பெற முடியாத நேரங்களில், கேட்பதற்காக வைத்திருக்கும் பாடல் 'ஓ! மனமே'. எனக்குப் பிடித்த பாண்டஸி இயக்குநர்களில் முக்கியமானவர் ஜீவா. அவரது துல்லியமான ஒளிப்பதிவும், அவர் பயன்படுத்தும் வண்ணங்களும், காட்சிப்பட்த்துதலும் எனக்குப் பிடித்தவை. அவர் அறிமுகப்படுத்தும் கொழுக் மொழுக் நடிகர்கள் கூட! அவரது 12பி, உள்ளம் கேட்குமே, உன்னாலே உன்னாலே உள்ளிட்ட அனைத்து படங்களையும் ஒரு ரசிகனாக்க இருந்து ரசித்தவன் நான். எந்தவித சமூகக் கேடுகளுமற்ற பொழுது போக்குப் படங்கள் என்று அவரது படங்களை வரிசைப்படுத்தலாம். இன்னும், அவரது 12பி-யி

தமிழில் எழுதாதே!- ஆர்குட் கோவை குழுமத்தில் தடை!

ஆர்குட் இணையதளம் அனைவரும் அறிந்ததே! ஆர்குட்டுனனான என் தொடர்புகள் உறவுகளை பிறிதொருநாள் விரிவாக எழுத எண்ணியிருக்கிறேன். அதற்கு முன் அவசியம் கருதி, ஆர்குட் தொடர்பான மற்றொரு செய்தியை பகிர்ந்து கொள்கிறேன். ஆர்குட்-டில் கோவை தொடர்பான குழுமம் (community) ஒன்று இயங்குகிறது. (பல்வேறு குழுக்களில் இதுவும் ஒரு குழுமம்.) இதன் நிறுவனராக ரோகித் என்பவர் இருக்கிறார். இந்தக் குழுமத்தில் கோவையைச் சேர்ந்த நண்பர் நாதாரி அவர்களும் உறுப்பினர். இந்தக் குழுமத்தின் நடவடிக்கைகளிலிருந்து திடீரென நண்பர் நாதாரி விலக்கி வைக்கப்ப்பட்டுள்ளார். காரணம் கேட்டதற்கு ரோகித் கொடுத்த பதிலில் கொப்பளிக்கிறது ஆணவமும், அவரது தமிழ் வெறுப்பும்! என்ன காரணம் தெரியுமா? "தமிழில் எழுதியதால் தான் நீங்கள் விலக்கி வைக்கப்பட்டுள்ளீர்கள்" என்ற திமிர்த்தனமான பதிலை அளித்துள்ளார். தமிழ்நாட்டில் இருக்கும், தமிழர்கள் வாழும் கோவை பற்றிய குழுமத்தில் தமிழில் எழுதுவது தடுக்கப்படுகிறது என்றால் தமிழர்களே தமிழின் நிலை என்ன? புதிதாக ஒரு குழுமத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்- என்ற வெண்டைக்காய் விளக்கங்கள் எல்லாம் கிடக்கட்டும். இணையத்தில் தமிழில்

இந்தியாவின் முதல் பெண் குடியரசுத்தலைவர்

இந்தியாவின் முதல் பெண் குடியரசுத்தலைவராக பிரதிபா பாட்டீல் தேர்வு செய்யப்படவுள்ளார். அவரை அய்க்கிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளராக கூட்டணித் தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார். இதன் காரணமாக தே ஜ கூட்டணியினர் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். பிரதீபா பாட்டீல் சட்டமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், மாநிலங்களவை துணைத் தலைவர் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளில் இருந்து பயிற்சி பெற்றவர்.

அரியணை ஏறும் அய்யாவின் வரலாறு!

தந்தை பெரியாரின் வரலாறு- ஒரு நூற்றாண்டு கால தமிழ்நாட்டு அரசியலின் வரலாறு என்றால் அது சரியான மதிப்பீடே! மக்களோடு கலந்து, மக்களுக்காகவே வாழ்ந்த அந்த மகத்தான தலைவரின் முழுமையான வாழ்க்கை வரலாற்றை எப்படி ஒரு படத்துக்குள் அடக்க முடியாதோ, அதே போல ஒரே ஒரு நூலுக்குள்ளும் அடக்க முடியாது! தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு என்பது பல்வேறு கால கட்டங்களைக் கொண்டது! சிறுவனாக, இளைஞராக, வணிகராக, காங்கிரஸ் பிரமுகராக, வைக்கம் வீரராக, சுயமரியாதைச் சூரியனாக, இந்தியாவுக்கு பொதுவுடைமையை அறிமுகம் செய்தவராக, இந்தி எதிர்ப்புப் போராட்ட வீரராக என்று தந்தை பெரியாரின்(1939 வரை) பல்வேறு பரிணாமங்களை 'தமிழர் தலைவர்' நூலில் 'சாமி.சிதம்பரனார்' வடித்துக் காட்டினார். தந்தை பெரியாராலேயே சரிபார்க்கப்பட்டு வெளியிடப்பட்ட பெருமை வாய்ந்தது அந்நூல்! (அதன் பிந்தைய நிகழ்ச்சிகள் வரலாற்றுக் குறிப்புகளாக 'தமிழர் தலைவர்' நூலின் பிற்சேர்க்கையாகவும், Biographical Sketch என்று குறுநூலாக தமிழ் மற்றும் இங்கிலீஷ்-ல் வெளியிடப்பட்டிருக்கிறது.) ஆனால் அதனினும் எழுச்சிக் காலமான 1940 தொடங்கி அய்யாவின் இறுதிக் காலம் வரைய

'பெண் ஏன் அடிமையானாள்?' - தந்தை பெரியார்

தந்தை பெரியாரின் மிகவும் இன்றியமையாத படைப்புகளில் பெண்ணுரிமைக்கான விளக்கமாக அமையக்கூடிய சிறப்புடையது "பெண் ஏன் அடிமையானாள்?" என்னும் நூலாகும். அச்சில் பல பதிப்புகள் வெளிவந்து பல லட்சம் மக்களை சென்றடைந்திருக்கும் இந்த பெண்ணுரிமை ஆவணம் மின்னூலாக வெளிவந்தால் நன்று என்று பல தரப்பு நண்பர்களும் தோழியர்களும் வேண்டுகோள் விடுத்திருந்தனர். நூலின் அச்சுக்கோர்ப்பு மின் வடிவம் கிடைக்காததால் அதனை மின்னூலாக்கும் பணி தடைப்பட்டுவந்தது. தந்தை பெரியாரின் எழுத்துக்களை மின்னூலாக்கி இணையத்தில் வெளியிடுவதற்கான ஒப்புதல் தமிழர் தலைவர் அய்யா கி.வீரமணி அவர்களால் வழங்கப்பட்டதோடு, பெரும் ஊக்கமும் அளித்து அந்தப் பணி நடைபெற பெரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். பெரியார் இணையங்கள் சார்பில் அப்பணி நடைபெற்று வருகிறது. அதன் முதல் கட்டமாக 'விடுதலை' நாளிதழின் 72-ஆம் ஆண்டை முன்னிட்டு கடந்த 1-ஆம் தேதி periyar.org தளத்தில் 'பெண் ஏன் அடிமையானாள்?' என்ற இந்நூல் மின்னூலாக தரவேற்றப்பட்டுள்ளது. இதன் உடனடித் தேவை கருதி முழு நூலையும் (80 பக்கங்கள்) ஸ்கேன் செய்து தந்த திரு.பிரபாகரன் நம் நன்றிக்குரியவர். ப