முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

வீரவணக்கம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இனமான நடிகருக்கு வீரவணக்கம்!!

”எருமைக்குப் பிறந்திருக்கும் கன்றும் கூட இனத்திற்கோர் இடர் வந்தால் எம்பிப் பாயும் எறும்பொன்றை அறியாமல் நாம் மிதித்தால் இறப்புக்கும் அஞ்சாமல் அது கடிக்கும் - அந்த எருமைக்கும் எறும்புக்கும் கூட உள்ள இனமானம் தன்மானம் உனக்கேன் இல்லை... தமிழா! இன உணர்வு கொள்!” என்ற நிறைவு வரிகளோடு தன் இரண்டு மணிநேரப் பேச்சை அவர் முடிக்கும் போது, ஒட்டுமொத்தக் கூட்டமும் பெறும் உணர்வு எழுச்சியானது. கரகரப்பான அந்தக் குரல் ‘இனமான நடிகர்’ அய்யா எம்.ஏ.கிரிதரன் அவர்களுடையது! மேடைப் பேச்சாளராகவும், குடுகுடுப்பைக்காரராகவும், மந்திரமா?தந்திரமா? நிகழ்த்துநராகவும், நாடகக் கலைஞராகவும் இயக்கத்தின் முனைப்பான பரப்புரையாளராக ஆர்வமுடன் பணியாற்றியவர். மேடை நாடகங்களைத் தயாரித்தும், நாடகங்களுக்கான போட்டியை நடத்தியும், திராவிடர் கழகக் கலைத்துறையின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர். தன் சொந்தக் காசைப் போட்டு கூட்டம் நடத்துபவர்களைப் பார்த்திருப்போம். ஒரு பிரச்சாகராகவும் வந்து, கூட்டம் நடத்துவதற்கான உதவியையும் செய்து, தற்புகழ்ச்சி இல்லாமல் பிரச்சாரம் செய்தவர் அய்யா கிரிதரன். தமிழர் தலைவர் ஆசிரியர் மீது மாறா பற்றுக் க...

நீட் ஒழிப்பு: காமராஜர் பிறந்தநாளில் ஏற்க வேண்டிய உறுதி!

மருத்துவக் கல்விக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகளும், அதையொட்டிய மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கான மாணவர் பட்டியலும் இதுவரை இல்லாத வகையில் பெரும் சமூக அநீதி நிகழ்ந்துகொண்டிருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. கல்விக்கான நமது நூறாண்டுப் போராட்ட வெற்றியின் அடித்தளத்தை அசைக்க நடக்கும்முயற்சி இது! மருத்துவக் கல்விக்கு சமஸ்கிருதம் கட்டாயம் என்று வைத்திருந்த சதியை மாற்றி, அனைவருக்குமான கல்வியாக அதை உருவாக்கியதற்கு பழிவாங்கும் நடவடிக்கை இது! பல்லாயிரக்கணக்கில் மூடப்பட்ட பள்ளிகளையும் திறந்து, ஒரு பங்கு கூடுதலாக பள்ளிகளைத் திறந்து கல்வி நீரோடையைப் பாய்ச்சிய கல்வி வள்ளல் காமராசரின் செயலுக்கான பார்ப்பனியத்தின் எதிர்வினை இது! கம்யூனல் ஜி.ஓ ஆணை தொடங்கி, அதை நிறுவுதற்கான போராட்டம், 43 தொடங்கி 69% வரை சட்டபூர்வமாக நிறுவிய வெற்றி, மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் 27% இட ஒதுக்கீட்டை கடும் போராட்டங்களுக்கு மத்தியில் மண்டல் கமிஷன் மூலம் பெற்று மொத்த இட ஒதுக்கீட்டு அளவை 49.5 என்று உயர்த்திய முயற்சி, அதை உயர்கல்வித்துறைக்கும் மெல்லமெல்லக் கொண்டு வந்த ஆட்சி என்று கடந்த 95 ஆண்டு கால சட்டப் போராட்ட...

எச்சரிக்கிறான் சரவணன்!

எச்சரிக்கிறான் சரவணன்! இது செய்யத் துணிந்தவர்கள்... எதுவும் செய்யத் துணிவார்கள்! உயர்கல்விக்கு நுழையும் போதே மருத்துவரின் உயிரை உறிஞ்சுகின்றன ஊசிகள்! எச்சரிக்கிறான் சரவணன்! இந்தியாவெங்கும் சென்று பிணமாகத் தயாரானால் எழுதுங்கள் நீட் தேர்வு! முனைவராகும் முன்னே முறிக்கப்படும் ஆய்வு இறக்கைகள்! கேட்காமலே இட ஒதுக்கீடு வேமுலாவுக்கு அடுத்து இடுகாட்டில்! 'என் சாவுக்கு யாரும் காரணமில்லை' என்ற கடைசி வரிகளோடு 'யுவர்ஸ் சின்சியர்லி'க்குப் பிறகு பெயர் சேர்க்க வசதியாய் அய்.அய்.டி.களில் கிடைக்கின்றன கடித நகல்கள்! இழுத்தடிக்கும் பூணூல்களிடமிருந்து விடுபட சென்ட்ரல் யுனிவர்சிட்டி கேம்பஸ் ஸ்டோர்களில் குறைந்த விலையில் தூக்குக் கயிறுகள்! உயர்குடிக்கே உயர்கல்வி ! பிறர் நுழைந்தால் 'உயிர்' குடிக்கும் என்பதறிக! பனியன் தைக்க ஊசியெடுப்பவன் பிள்ளைக்கு உயர் மருத்துவனாகி ஊசியெடுக்க ஆசையா? தூண்டியது நடக்காவிட்டால் தூண்டியவர்களே ஆயுதம் தூக்குவார்கள்! நூலிய சிந்தனை தூக்கத் தொடங்கியிருக்கிறது ஊசிகளை! நூலியம் பதறுகிறது... கடிதத்தில்...

வக்கீல் அவ்வாவுக்கு வீரவணக்கம்!

இயக்கம் தான் எங்களுக்குக் குடும்பம். தந்தை வழி தாய், தந்தையர் தான் நான் பார்த்து வளர்ந்த பாட்டி, தாத்தா. (தாய் வழி தாத்தா, பாட்டி எனக்கு நினைவு தெரியும் முன்பே மறைந்துவிட்டார்கள்) அவர்களைத் தவிர்த்து சிறு குழந்தை பருவத்திலிருந்து எனக்குத் தெரிந்த தாத்தா, பாட்டி என்றால் அது வக்கீல் தாத்தா, வக்கீல் பாட்டி தான். எங்கள் தாத்தா காரைக்குடி என்.ஆர்.சாமி அவர்கள் ஒருங்கிணைந்த இராமநாதபுரம் மாவட்டத்தின் செயலாளர் என்றால் சிவகங்கை வக்கீல் சண்முகநாதன் அவர்கள் தான் மாவட்டத் தலைவர். கிட்டத்தட்ட 25 ஆண்டுகாலம் கடுமையான எதிர்ப்பின் இடையே இயக்கத்தை வளர்ந்த பெரியார் தொண்டர்கள். இவர்கள் இருவருக்கும் ஈடுகொடுத்து உழைக்கச் சளைக்காத இருவர் என்றால் அது எங்கள் அவ்வா பேராண்டாள் அவர்களும் வக்கீல் அவ்வா இராமலக்குமி அவர்களும் தான். போராட்டக் களத்தில் நிற்கும் தங்கள் இணையர்களுக்குத் தோள்கொடுத்து குடும்பத்திலும், கழகத்திலும் தங்கள் பங்கைச் செலுத்தியவர்கள். போராட்டம், மாநாடுகள், இயக்கக் கூட்டங்கள் - எது என்றாலும் ஆபத்துக்கு அஞ்சாமல் போராடியவர்கள். காங்கிரசின் எதிர்ப்பை மீறித் தான் அத்தனை பொதுக்கூட்டங்களும், மாநாடுக...

எங்கள் குலக் கொழுந்தின் குரல் ஒலிக்கிறது கேள்...

எங்கள் குலக் கொழுந்தின் குரல் ஒலிக்கிறது கேள்... உலக அற மன்றமே! கேள்!! துப்பாக்கிக் குண்டுகளுக்கு திறந்த மார்பு காட்டிய எங்கள் வீரப்புதல்வன் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்! உன் கேளாக் காதுகளுக்கு இப்படி உரத்துச் சொல்ல இன்னும் எத்தனை உயிர்கள் வேண்டுமுனக்கு? எங்கள் குலக் கொழுந்தின் குரல் ஒலிக்கிறது கேள்... உலக அற மன்றமே! கேள்!!

SVTC செல்வம் சார் நினைவாக...

எல்லைகளைக் கடக்கலாம் எங்கள் எழுத்து! ஆனால்... எங்களின் ஆனா... ஆவன்னாவில் நிறைந்திருக்கிறாய் நீ! எங்கள் வெற்றிப் படிகளைத் திரும்பிப் பார்க்கையில் ஒவ்வொரு புகைப்படத்திலும் உன் புன்னகை! என் அக்கா தொடங்கி அண்ணன் மகன் வரைக்கும் எங்களுக்கு ஆரம்பக் கல்வி தந்த ஆசான் நீ... முன்னாள் சென்னை காவல்துறை ஆணையர், அன்றைய சிவகங்கை மாவட்ட ASP ராஜேந்திரன் அவர்களுக்கு மாலை அணிவிக்கும் சாமி சமதர்மம், பின்னால் SVTC செல்வம்  ’எழுமின்! விழிமின்!’ என்ற மதத்தைத் தாண்டிய விவேகானந்தரின் வரிகளை நீ இளம் நெஞ்சங்களில் விதைத்தாய்! ஒட்டுமொத்த பள்ளியையும் உட்கார வைத்துக் கொண்டு சிரிக்கச் சிரிக்க நீ எடுக்கும் வகுப்பு மறக்காது எமக்கு! இந்தி கற்க மாட்டேன் என்று ஒரு பொடிப் பயல் சொல்கிறானே என்றில்லாமல் என் உறுதிக்காகவே பள்ளியிலிருந்து இந்தியை நீக்கி வைத்து எனக்கு முதல் கொள்கை வெற்றியைத் தந்தவன் நீ! 1980களில் SVTC-ன் ஆண்டு விழா நிறைவில் எடுக்கப்பட்ட குழுப்படம் எங்கள் வளர்ச்சி கண்டு பூரித்த பெருமகன்! மாறாத பாசத்துடன் எங்களை ஏற்றிவைத்துக் கொண்டாடிய எம் தந்தையின் தோழன்! ...

காலங்கடந்த பதிவு! - சிந்தாநதிக்கு இரங்கல்!

யாருடைய நினைவு என்றைக்கு வரும் என்று சொல்லமுடியாது? திடீரென்று சாலையின் விளக்கொளியைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதோ, வாகனத்தில் பயணித்துக் கொண்டிருக்கும்போதோ, எப்போதோ சந்தித்தவர்களின் நினைவு தோன்றும்! பிறகு அது வாய்ப்பான நேரத்தில் மீண்டும் நினைவுக்கு வருவதும், வரும் நேரத்தில் தொடர்பு கொள்ளவோ, விசாரிக்கவோ வாய்ப்புக் கிடைப்பதும் அரிது! அப்படி யாரையாவது தொடர்புகொள்ள, தேடிக் கொண்டிருக்கும் போது அந்த நபர் மறைந்துவிட்டார் என்ற செய்தி கிடைத்தால் எப்படி இருக்கும்? ’அவர் போயி வருசம் ஆச்சே!’ என்று ஊரில் யாரைப் பற்றியாவது கேட்டால் கிடைக்கும் பதிலைப் போலத் தான் ’சிந்தாநதி’ மறைந்து இரண்டாண்டுகள் ஆயிற்று என்ற தகவலையும் நான் தெரிந்துகொண்டேன். வலைப்பூவில் எழுதத்தொடங்கிய காலத்தில், blogspot-இல் எழுதும் எனக்கு, Wordpress-காரர்களே அந்நியமாகத் தெரிவார்கள். யாருமே பயன்படுத்தாத blogspirit.com-இல் ஒருவர் எழுதிக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? அதிலும் கஜகஜவென்று, எந்த மூலையிலாவது துடித்துக் கொண்டோ, எரிந்துகொண்டோ இருக்கும் ஏதாவது ஒரு GIF படத்தோடு கூடிய அந்த வடிவமைப்பைப் பார்க்கும்போதெல்லாம், எல்லா கலரைய...

சின்னக்குத்தூசி - சில நினைவுகள்

திராவிட இயக்க சிந்தனையாளர், எழுத்தாளர், இதழாளர் சின்னக்குத்தூசி அவர்கள் நேற்று (22.5.2011) காலை இயற்கை எய்தினார். திருமணம் செய்துகொள்ளாமல் கூட தன்னை முழுமையாக இயக்கத்துக்கும் கொள்கைக்கும் ஒப்படைத்துக் கொண்ட கொள்கை வீரர். பிறப்பால் பார்ப்பனர் தான்... ஆனால் அதற்கான எந்த அடையாளமும் குணத்தின் எந்தத் துளியிலும் இருக்காது. உண்மையில் இவர் தான் அக்கிரகாரத்தின் அதிசய மனிதர். பொதுவுடைமை இயக்கத்தவருடன் பணியைத் தொடங்கி, திராவிட இயக்கத்தில் இணைந்து இறுதிவரை கொள்கையில் உறுதியாய் இருந்தவர். 1996-97-க்குப் பிறகு நக்கீரனில் அவர் எழுதத் தொடங்கியிருந்தார். பதின்ம வயதின் தொடக்கத்தில் வாசிப்பு வேகம் கூடியிருந்த எனக்கு, நக்கீரனில் ஆதாரத்துடன், திராவிட இயக்க உணர்வுடன் வெளிவரும் சின்னக்குத்தூசியின் கட்டுரைகள் ஈர்ப்பை அளித்தன. அவர் யாரென விசாரித்த போது, ”பிறப்பால் பார்ப்பனர். ஆனால் உறுதியான பெரியார் பற்றாளர். கடுமையான திராவிடர் இயக்க உணர்வாளர்” என்று சாக்ரடீசு அண்ணன் சொல்லியிருந்தார். எனக்கோ பெரிய ஆச்சரியம். இப்படியொரு மனிதன் இருக்க முடியுமா? பின்னர் ’பொன்னர் - சங்கர்’ படித்த போது, அதில் கலைஞரின் முன்னு...

பெரியாரியல் பரப்புநர் பூபதி மறைந்தாரே!

தந்தை பெரியாரின் கொள்கைகளை புத்தகங்கள் மூலம் நாளும் பரப்பும் அரும்பணி ஏற்றிருந்த தோழர் செங்கை பூ.பூபதி அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தி ஆழ்ந்த வருத்தத்தையும், தாங்கொணாத துயரத்தையும் தரக்கூடிய ஒன்றாக இருக்கிறது. 14.02.2011 இரவு 7 மணிக்கு தனது சொந்த ஊரான செங்கல்பட்டில் வயது நாற்பதுக்குள் தான் என்றாலும், காசநோய் தீவிரத்தின் காரணமாக இறப்பு நிகழ்ந்திருக்கிறது. கடந்த சனிக்கிழமையன்று அவரைத் திடலில் சந்தித்தேன். உடல்நிலை குறித்து கேட்டபோது, எப்போதும் போல் இருப்பதாகச் சொன்னார்.. உடலின் சோர்வை உழைப்பில் காட்டாமல்! எப்போதும் வருத்தும் உடல்நிலையைக் குறித்தும் கவலை கொள்ளாமல் கொண்ட கொள்கைக்காக களப்பணியாற்றும் சுயமரியாதை வீரர். யாருடைய உதவியையும் எவ்விதத்திலும் ஏற்கமாட்டார்; யாருடைய பரிதாபத்தையும் கோர மாட்டார். அவருடைய உடல்நிலை மோசமாகும் சமயத்தில் எல்லாம், தென்சென்னை, வட சென்னை, தாம்பரம் கழகத் தோழர்கள் தான் அவருக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்வார்கள். அவற்றையும் கூட ஒருவித தயக்கத்துடனே ஏற்றுக் கொள்வார். சென்னையைச் சுற்றி திராவிடர் கழகத்தின் சார்பில் எங்கு கூட்டம் நடந்தாலும், அது தெருமுனைக் கூட்டமோ, ம...

விதையாக விழுந்தவர்கள் உரமாக மாறுவர்!

எவன் சொன்னான் தமிழீழம் மண்ணில் புதைந்ததென? மாவீரர் இல்லங்கள் தகர்க்கப்பட்டதென? துயிலும் இல்லங்களைத் துடைத்தெறிந்தோம்.. துகிலுரிக்கப்பட்ட உன் தமிழச்சி போலென‌ கொக்கரிக்கட்டும் சிங்களம் செருக்குடன்! கல்லறைகளில் மட்டுமா வீரர்கள் உறைந்தனர்! தமிழீழ மண்ணெங்கும் காற்றாய் நிறைந்தனர்! இன்று அவ்வில்லங்கள் இணையத்தில்.. என்றும் அவ்வில்லங்கள் இதயத்தில்...! புரட்டிப் போடட்டும் வீரம் விதைத்த மண்ணை! வரலாறு மறக்காது விதைகளின் எண்ணை! போயிற்று களம் என‌ அழுவது வீணடா! ஒரு போகம் விளைந்ததும் உழுவது ஏனடா? உனக்குமா தெரியாது உழவின் அரிச்சுவடி? நல்லேரைக் கொண்டுழுது அடிமண்ணை மேலெழுப்பி சத்தாக்குவோம்! நெல் வேரை உரமாக்கி விளைச்சலுக்கு அதனையே சொத்தாக்குவோம்! அன்று நாம் விதைத்தோம்! அவன் அறுத்தான்!! முதல் போகம் முடிந்தது! இன்று.. அறுத்தவன் உழுகிறான் இனி... நாம் விதைப்போம்.. நாம் அறுப்போம்! விதையாக விழுந்தவர்கள் உரமாக மாறுவர்! உறுதியாய் நம் தமிழர் தமிழீழம் காணுவர்!

தளிர்கள் கருகிய அமாவாசை தினத்தில்...

வேகாத வெய்யிலுல நான்           வெறகு வித்துப் படிக்க வச்சேன்..! வெந்துபோன வெறகா உன்னை           தூக்கவா அனுப்பி வச்சேன்? வெய்யிலிலே நீ நின்னா           கால் வெந்து போகுமுன்னு... வெளியவே வராதேன்னு           வீட்டுக்குள்ள நான் வளர்த்தேன். கால் கடுக்க நீ நின்னா           என் காலு எரியுமடி - இப்ப கரிக்கட்டையா கிடக்குறியே           என் உசுரு வேகுதடி! சுடு சோறு வேணுமின்ன...!           புதுச் சட்டி வாங்கச் சொன்ன..! சுடு சோறு திங்கலியே...!           சூடு தான் தாங்கலியோ...? வாங்கித் தந்த புதுச்சட்டி           வாய்பிளந்து கிடக்குதடி.. -உன்ன தூங்க வச்சுப் பார்த்த தூளி           தூக்கிப்போக உதவுதடி! .....தளிர்கள் கருகிய அமாவாசை தினத்தில்...(16.07.2004) --...

அந்த நாள் என் நினைவில் இருக்கிறது...

அந்த நாள் என் நினைவில் இருக்கிறது... இன்றோ... நாளையோ... விடியும் எங்கள் வாழ்வு என்று வானோக்கியிருந்த எங்களை இருட்டு வந்து சூழ்ந்த அந்த நாள் என் நினைவில் இருக்கிறது... பதுங்குவது பாய்வதற்கே என்று போரின் நாட்குறிப்புகளைப் புரட்டிப் பார்த்து நிம்மதி கொண்டிருந்த எங்களுக்கு நாளை குறிக்க தாளே இல்லை என்ற குறிப்பு வந்து சேர்ந்த அந்த நாள் என் நினைவில் இருக்கிறது... 'மக்களைக் காக்க நாங்கள் இருந்த நாள் போக... எங்களைக் காக்க மக்களா? எங்கள் துவக்குகள் மௌனிக்கும்' என்ற குரல் கேட்ட அந்த நாள் என் நினைவில் இருக்கிறது... "வெள்ளைக் கொடி ஏந்தினாலும் கொல்லுவோம்... தமிழர்களை கடைவாயில் மெல்லுவோம்..." -கொக்கரித்த கொடூரனின் ரத்தம் வடிந்த புன்னகை கண்ட அந்த நாள் என் நினைவில் இருக்கிறது... தந்தையை.. தமையனை.. கணவனை... களத்திற்குத் தந்து தனயனை.. களத்திற்கனுப்பிய தாய் போல்.. "எம் பிள்ளைகளை நாட்டுக்கே கொடுத்திட்டனப்பா" என்ற எம் தலைவனின் பெருமிதம் கேட்ட அந்த நாள் என் நினைவில் இருக்கிறது... கள நிலைக்குத் திரையிட்டு எம் அரிப்பு...

வி.பி. சிங் வீரவணக்க நாள் கூட்டம்

வி.பி. சிங் வீரவணக்க நாள் கூட்டம் நாள்: 27.11.2009 இரவு 7 மணி. இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை வரவேற்புரை: கா.எழிலரசன் தலைமை: கு.வெ.கி. ஆசான் , நெறியாளர், பெரியார் களம், முன்னிலை: இறைவி, தலைவர், பெரியார் களம்; ஆடிட்டர் ஜெயராமன் , செயலாளர், பெரியார் களம், வீரவணக்க உரை: கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச்செயலாளர், திராவிடர் கழகம் வழக்கறிஞர் அ. அருள்மொழி, பிரச்சார செயலாளர், திராவிடர் கழகம் கோ. கருணாநிதி, பொதுச்செயலாளர், AIOBC நன்றியுரை: பாரி

தலைவர் பிரபாகரனுக்கு தலைவர் கலைஞர் வாழ்த்து!

தலைவர் பிரபாகரன் பிறந்தநாளுக்கும் மாவீரர் நாளுக்கும் சேர்த்து தலைவர் கலைஞர் விடுத்துள்ள நம்பிக்கை வாழ்த்து! தலைவர் கலைஞர் இன்று முரசொலியில் எழுதியுள்ள கடிதத்திலிருந்து: "இரண்டாவது முறையாக முரசொலியில் வெளிவந்து கொண்டிருந்த "பாயும் புலி பண்டாரக வன்னியன்'' வரலாற்று ஓவியம்; முடிவுற்றுவிட்டது. எத்தனை முறை அந்த வீரனின் வரலாறு வெளிவரினும்; அந்த வீரகாவியம் வாழ்ந்து கொண்டே இருக்கும். 1991-ம் ஆண்டு வாக்கில் வெளியிடப் பட்டதும், நான் எழுதிய வரலாற்றுப் புதினமுமான "பாயும் புலி பண்டாரக வன்னியன்'' எனும் எழுச்சி மிக்க காவியத்தில், நான் படைத்துள்ள கதாபாத்திரங்கள் பண்டாரக வன்னியனும், அவன் உள்ளங்கவர்ந்த காதலி, குருவிச்சி நாச்சியாரும், அவன் அருமைத் தங்கையர், நல்ல நாச்சியும், ஊமைச்சி நாச்சியும் இலங்கை மண்ணில் தமிழர்களின் உரிமை காக்கப் போராடியவர்கள் என்று நான் சித்தரித்துள்ளேன். துரோகிகளை சந்திக்க நேர்ந்த தூயவன்... துரோகிகளைச் சந்திக்க நேர்ந்த அந்த தூயவனுக்கு நல்ல நண்பர்களும் இல்லாமலில்லை. கி.பி. 1815-ம் ஆண்டு வரையில் கண்டியை ஆட்சி செய்து ஆங்கிலேயர்களால் சிறைபிடிக்கப்பட்டு தமிழ...