இதைத் தான் அயோக்கியத்தனம் என்கிறோம். எதை? குறளை பெரியார் மலத்துடன் ஒப்பிட்டார்... இதோ ஆதாரம் என்றார்கள். எது? இது தான் அது! "வள்ளுவர் குறளையும் அந்தப்படியே அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன். எல்லாவற்றையும் குறை சொல்லும்போது பலர் என்னிடம், எல்லாம் போய்விட்டால் நமக்கு எதுதான் நூல் என்று கேட்பார்கள். நான் இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது; அதை எடுத்து விடு என்று கூறினால் அந்த இடத்தில் என்ன வைப்பது? என்று கேட்பதா என்று பதில் கூறுவேன்." பார்த்தியா... பார்த்தியா... இதைத்தான் சொன்னோம்னு குதிச்ச கூமுட்டைகள், கூமுட்டைகள் சொல்லுக்குக் குட்டிக்கரணம் போட்ட கூறுகெட்டதுகள் எல்லோரையும் நாம் கேட்டுக் கொள்வது, அந்தக் கட்டுரையை முழுமையாகப் படியுங்கள் என்பது தான். அவ்வளவு வேண்டாம்... அதற்கு முன்னேபின்னே என்ன சொல்லியிருக்கிறார்.. அதைப் படித்தாலே புரியும் அவரது நேர்மைத் திறம்கொண்ட பார்வை! பெரியாருக்குப் பொழிப்புரை, தெளிவுரையெல்லாம் தேவையில்லை. இதோ பெரியார் பேசுகிறார்... கேளுங்கள்! "மக்களுக்கும் நான் குறள் பற்றி பேசுவது மிகுந்த ஆச்சரியமாய் இருக்க...
சிரமப்படாதீங்க... பதம் பிரிச்சு சொல்றேன். "பிரின்சு என் ஆர் சமா". இப்படித்தான் படிக்கணும்.