முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கொரோனா கற்றுக் கொடுக்கும் பாடங்கள்!

கொரோனா காலம் நமக்கு முக்கியமான பாடம் ஒன்றை எடுத்துக் கொண்டிருக்கிறது.
குறுகிய காலம் - நெடுங்காலம் என்று இரண்டு போக்குகளில் அந்தப் பாடம் நமக்குப் பயன்படும்.
எது அடிப்படைத் தேவை? எது அன்றாடத் தேவை? எது எதெல்லாம் வாய்ப்பிருந்தால் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது? எவைவெல்லாம் அவசியமில்லாத செலவுகள்? எவை ஆடம்பரச் செலவுகள்? என்று நம் மனதிற்குள் இந்நேரம் ஒரு பெரிய பட்டியல் உருவாகியிருக்க வேண்டும்.
வெள்ளம் சூழும் நேரத்தில் அவசரத்திற்கு, அவசியமான பொருட்களை எடுத்துக் கொண்டு பாதுகாப்பாக எப்படி வெளியேறுவோமோ, அப்படியான சூழல் தான் இப்போது! செம்பரம்பாக்கத்தம்மன் புண்ணியத்தில் அரிதாக, ஒன்றிரண்டு புயல், வெள்ளக் காலங்களைத் தவிர பேரிடர் கால அனுபவம் நமக்கு மிகவும் குறைவு.
எப்போதும், இதமான, மிதமான கால நிலைகளையும் அனுபவித்து சொகுசு வாழ்க்கைக்குப் பழகியவர்கள் நாம். அதையெல்லாம் கொஞ்சம் ஒதுக்கிவைத்துவிட்டு, காய் இல்லை, கறி இல்லை, ஃபிரஷ்ஷா கிடைக்கவில்லை என்றெல்லாம் ரொம்ப அலட்டிக் கொள்ளாமல், கஞ்சியோ, கூழோ குடித்துக் கொண்டிருந்தாலும், அந்த அளவு தான் அரசு ஊற்றும் என்ற சூழல் வந்தாலும், அதில் தாக்குப்பிடிக்கத் தயாராக இருக்க வேண்டும்.
முன்பொரு முறை நான் சொன்னது போல, வீடற்ற ஏழைகள் தவிர, மற்றவர்களுக்கு சமாளித்துக் கொள்ளும்படியான சூழல் தான் இப்போது! பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுங்கள்! ஏரோபிளேனில் குண்டுவீசினால் எப்படி கவனமாக இருப்போமா, அப்படி இருக்க வேண்டிய காலகட்டம். அது இன்னும் ஓரிரு மாதங்கள் தொடரும்.
#நெடுங்_காலப்_பாடம்: அநாவசிய செலவுகளைக் குறைத்துக் கொண்டு சிக்கனமாக வாழ்வதற்கான தேவை இப்போதும், இனிவரும் காலங்களிலும்! நீங்கள் மனமுவந்து பழகவில்லையென்றால், காலம் காதைத் திருகி கற்றுக் கொடுக்கும்! இருப்பதைத் தக்க வைத்துக் கொண்டு, கவனமாக உழைப்பைச் செலுத்தினால் நிச்சயம் முன்னேற முடியும்.
தனிமனித, குடும்பப் பாதுகாப்புக்கு சிக்கனத்தை நாம் பரிந்துரைத்தாலும், பொருளாதாரச் சூழலுக்கு அது ஏற்றதாக இருக்குமா என்பது கேள்விக் குறி.
வாங்காமலே போய்விட்டால் இன்றைய சந்தைப் பொருளாதாரம் சரிந்துபோய்விடும். வாங்கும் சக்தி குறைந்தால் அதுவே பொருளாதார சுழற்சிக்கு அழற்சியாகிவிடும். அடிப்படைத் தேவைகளுக்கான துறைகளில் மட்டும் இன்று நாம் பணிபுரியவில்லை. அவற்றைத் தாண்டிய துறைகள் நிறைய வளர்ந்திருக்கின்றன. அப்படிப் பட்ட துறைகளில் பணியாற்றுவோரும், அதையெட்டிய தொழில்களை நடத்துவோரும் கணிசம் பேர். எனவே, இந்தக் கட்டுமானம் தகர்ந்துவிடாமல் கவனமாக மாற்றியமைக்க வேண்டியிருக்கும்.
#கவனம் - கொரோனா காலத்திலும், அதற்குப் பின்பும்! அவ்வளவுதான் சொல்றதுக்கு இருக்கு!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owne...

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்...

வீரவணக்கம்! வீரவணக்கம்!!

மாநாட்டுத் தீர்மானங்களின் தொடக்கத்தில் களத்தில் நின்று போராடி மடிந்த கொள்கை மறவர்களுக்கு வீரவணக்கம் தெரிவிக்கும் இரங்கல் தீர்மானம் தெரிவிக்கும் வழக்கம் உண்டு. முற்றிலும் எதிர்பார்க்காத வண்ணம், நம் அனைவரையும் துயரக் கடலில் ஆழ்த்தியதோடு நாம் இன்னும் முனைப்பாக செயலாற்றி, நம் உரிமையை வென்றெடுக்க நம்மைத் தூண்டியுள்ள வீரத் தளபதிகளின் மறைவுக்கு வீர வணக்கம் செலுத்த வேண்டிய நிலையில் நாம் உள்ளோம். வீரவணக்கம் செலுத்துவதோடு, தமிழீழத் தாயகத்தில் எழுச்சி ஏற்கும் நாளாக அமைந்துவிட்ட மாவீரர்களின் இறுதி நிகழ்ச்சியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம். (நன்றி: த.அருள்எழிலன்) வீரவணக்கம்; வீரவணக்கம்! வென்றெடுக்கப் போகும் எங்கள் நாட்டின் வீரவித்துக்கள் நீவீரே! மண்கொள்வதில்லை உங்கள் உடல்கள்...எங்கள் மனங்கொண்டு சினம் வளர்த்து ஈழம் படைக்க உரமாகின்றன! வீரவணக்கம்; வீரவணக்கம்! உம்மைக் கொன்றதும் எங்கள் அமைதி முகத்தைச் சிதைத்ததும் ஒன்றே! பேச்சு தேவையில்லை இனியென சிங்களம் சொல்கிறது! இனி அவர்கள் பேசவேகூடாது என்கின்றன உம்முடல்கள்... செய்து முடிப்போம்! பகையைக் கொய்து முடிப்போம்! வீரவணக்கம்; வீரவணக்கம்!