முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அறிவியல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கொரோனா கற்றுக் கொடுக்கும் பாடங்கள்!

கொரோனா காலம் நமக்கு முக்கியமான பாடம் ஒன்றை எடுத்துக் கொண்டிருக்கிறது. குறுகிய காலம் - நெடுங்காலம் என்று இரண்டு போக்குகளில் அந்தப் பாடம் நமக்குப் பயன்படும். எது அடிப்படைத் தேவை? எது அன்றாடத் தேவை? எது எதெல்லாம் வாய்ப்பிருந்தால் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது? எவைவெல்லாம் அவசியமில்லாத செலவுகள்? எவை ஆடம்பரச் செலவுகள்? என்று நம் மனதிற்குள் இந்நேரம் ஒரு பெரிய பட்டியல் உருவாகியிருக்க வேண்டும். #குறுகிய_காலப்_பாடம் : வெள்ளம் சூழும் நேரத்தில் அவசரத்திற்கு, அவசியமான பொருட்களை எடுத்துக் கொண்டு பாதுகாப்பாக எப்படி வெளியேறுவோமோ, அப்படியான சூழல் தான் இப்போது! செம்பரம்பாக்கத்தம்மன் புண்ணியத்தில் அரிதாக, ஒன்றிரண்டு புயல், வெள்ளக் காலங்களைத் தவிர பேரிடர் கால அனுபவம் நமக்கு மிகவும் குறைவு. எப்போதும், இதமான, மிதமான கால நிலைகளையும் அனுபவித்து சொகுசு வாழ்க்கைக்குப் பழகியவர்கள் நாம். அதையெல்லாம் கொஞ்சம் ஒதுக்கிவைத்துவிட்டு, காய் இல்லை, கறி இல்லை, ஃபிரஷ்ஷா கிடைக்கவில்லை என்றெல்லாம் ரொம்ப அலட்டிக் கொள்ளாமல், கஞ்சியோ, கூழோ குடித்துக் கொண்டிருந்தாலும், அந்த அளவு தான் அரசு ஊற்றும் என்ற சூழல் வந்தாலும், அதில் தாக்...

டிஜிட்டலில் கரையும் டேட்டா?

ஹார்டு டிஸ்குகளில் கண்ணுக்குத் தெரியாத காரணங்களால் காணாமல் போகும் கோப்புகளைப் பற்றி அறிந்ததும், ஏற்படுகிற மனநிலை - அணுகுண்டு வீச்சில் அழிந்துபோன நகரங்களில் உறவுகளைத் தேடுகிற மனநிலை! சுவடே இல்லாமல் அழிந்துபோய்விடும் அவற்றைப் பதிவு செய்யவோ, காக்கவோ நாம் எடுத்துக் கொள்ளும் முயற்சிகள் எல்லாம் நொடியில் சிலிக்கான் பொதிகளுக்குள் கரைந்துபோய்விடுகின்றன. ஹெட் கடித்தாலும் மிச்சமிருக்கும் ஒலி/ஒளிப்பேழையின் (கேசட்) மேக்னடிக் டேப்பை செலோ டேப் கொண்டு ஒட்டி பத்திரப்படுத்தும் அளவிற்குக் கூட  பாதுகாப்பில்லை. சிடிகள் நொறுங்கினால் 700 எம்பி, டிவிடி தெறித்தால் 4.7 ஜிபி, ஹார்ட் டிஸ்குகள் காணாமல் போனாலோ ஒன்றிரண்டு டிபி என நம் வரலாற்றை, படைப்பை காணாதடித்து நம் பிபியை வெகுவாக எகிற வைத்துவிடுகின்றன. கடந்த தலைமுறை பிலிமாகவும், புத்தகமாகவும், படங்களாகவும் காத்து வைத்தவைகளை முழுமையான செலவுவைக்கும் தீர்வுகளுக்குப் போகமுடியாத நம் எளிய (சிடி, டிவிடி, ஹார்ட் டிஸ்குகள் போன்ற) டிஜிட்டல் முயற்சிகள் ஒட்டுமொத்தமாக இல்லாமல் செய்துவிடுகின்றன. கிழிந்த தாள்களை ஒட்டியோ, சிதைந்த படத்தின் மீது வரைந்தோ அவற்றை மீட்டமைக்க...

தங்கலட்சுமி பூரிக் கிழங்கும், புராணிகர்கள் அறிவியல் சிந்தனையும்

ஒரே திசையில பயணம் பண்ணோம்னா உலகத்தைச் சுத்தலாமா? முடியாதா? இந்த மாதிரி ஒரு கேள்வியை ஒரு சாதாரண சின்னப் புள்ளக்கிட்ட கேட்டோம்னா அது படிச்ச அறிவியலை வச்சே அது விளக்கம் சொல்லும்.  ஆனால், தங்கள் புத்தகங்கள்ல 1000 வருசங்களுக்கு முன்ன சொன்னதெல்லாம் இன்றைய அறிவியல் படியும் உண்மைன்னு சொல்றதுக்கு என்ன குழப்பு குழப்புறாரு இந்த மனுசன். பொறுமையா அந்த துல்கர்னைன் பய்ணத்தைப் பத்தி விளக்கம் தரும் தோழர்களைத் தான் பாராட்டணும்.  பின்னே என்ன? ச்சும்மா... நாங்க அணு விஞ்ஞானத்தை ஆயிரக்கணக்கான வருசத்துக்கு முன்னாடியே கண்டு பிடிச்சிட்டமாக்கும். எங்க புராணத்தில தான் அது இருக்குதாக்கும்.. இது இருக்குதாக்கும்னு இந்து மதத்தில பீலா வுடுற ஆளுக மாதிரி, ஒவ்வொரு மதத்துக்காரனும் அள்ளிவுடுறான்யா...  அந்தந்த காலத்து அறிவு தான் அன்றைய இலக்கியங்கள், புராணங்கள், மதநூல்கள் எல்லாத்திலேயும் இருக்கும். ஆப்பிள் அய்பேட் அப்டேட் பண்றது எப்படின்னு திருக்குறள்ல போய்த் தேடக் கூடாது. இன்னும் சொல்லப்போனா... தொலைக்காட்சி தொடர்களால உறவுகள் பாதிக்கப்படுதுன்னு தீர்வைப் போய் வள்ளுவர்ட்ட கேட்கக்கூடாது; அவர் காலத்...