முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பொள்ளாச்சி அவலம்: ஆசிரியரின் பேச்சும், பார்ப்பனர்களின் ஏச்சும்!

பொள்ளாச்சி அவலம் தொடர்பாக நாடே கொந்தளிப்பில் இருக்கிறது. பெண்களைப் பெற்றோர், மனிதநேயம் கொண்டோர், சமூக அக்கறை கொண்டோர் பதறுகிறார்கள். ஆனால், பெரியாரின் பெண்ணுரிமைக் கொள்கைகளும், அதை அடுத்து வழிநடத்திச் செல்லும் ஆசிரியர் வீரமணியும் தான் பொள்ளாச்சி அவலங்களுக்குக் காரணம் - பொம்மனாட்டிகள் கெட்டுப் போறதுக்கு இவா தான் காரணம் என்று ஒரு வன்மமான கட்டுரை வெளியிடுகிறது குறுமதியாளர் குருமூர்த்தியின் துக்ளக் ஏடு! பெண்ணுரிமை பேசியதும், பெண்கள் மீது திணிக்கப்பட்ட அடிமைத் தளைகளைக் களைந்தெறியப் போராடியதும் தான் பொள்ளாச்சி அவலங்களுக்கு காரணம் என்று பெரியார் மீது அவதூறு பரப்புபவர்களுக்கு எச்சரிக்கை செய்யவும், உண்மையில் ஆசிபா, நந்தினி, பொள்ளாச்சி கொடுமைகள், கோவை சிறுமி என ஆணாதிக்க வக்கிர வெறி கொண்ட இந்தக் கும்பலின் முகமூடியை கிழித்து எறிந்தும் பெரியார் திடலில் நடக்கிறது அவசர சிறப்புக் கூட்டம். இவையெல்லாம் விளைவுகள் என்றால், இதற்கான நியாயங்களை உறுதி செய்து இந்த மனவோட்டத்தை மக்கள் மத்தியில் காலம் காலமாக தக்க வைத்துக் கொண்டுள்ளவற்றை எடுத்துப் போட்டுத் தோலுரிக்க வேண்டாமா? “பெண்களைப் பாவ யோனியில் பிறந்தவர்