முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நன்றி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஒரே மெட்டு - எத்தனை பாடல்!! அடடா...என்றும் ராஜா!

அவசியம் எழுத வேண்டும்; பிறருக்குச் சொல்ல வேண்டும் என்று நாம் கருதி பணி/சோம்பல் காரணமாக தள்ளிப்போடும் செய்திகள் பல பிறரால் சொல்லப்பட்டுவிடும் போது, நாம் நினைத்தது வந்துவிட்டதே என்ற மகிழ்ச்சியும், கொஞ்சம் இயலாமையால் உருவான பொறாமையும் ஏற்படுவதை மறுக்க முடியாது. ஆனால் அதை மீறி, மகிழ்ச்சியை வளர்த்துக் கொள்ளுதலே நமது உடலுக்கும் மனதுக்கும் நல்லது என்கிற உணர்வில் தான் இது வரை செயல்பட்டு வந்திருக்கிறேன். (வேற வழி...!) அந்த வகையில் நீண்ட நாட்களாக நினைத்துவைத்திருந்த சில விசயங்கள் பதிவாகவோ, செய்தியாகவோ, படத்திலோ வெளிவந்து விட்டன. எனவே இனியும் அவற்றைக் காலம் கடத்தாமல் பதிவது என்ற நோக்கில் தொடங்கிவிட்டேன். அநேகமாக, அடுத்த ஓரிரண்டு பதிவுகளும் இதே திக்கில் இருக்கலாம்.. --------------------------------------- இளையராஜாவின் பாடல்களைத் தொடர்ந்து கேட்டு, அணுஅணுவாய் ரசிக்கும் பழக்கம் அண்ணன்களிடமிருந்து தொற்றியது. ஒவ்வொரு இசை நுணுக்கங்களையும் ரசித்து, வியந்து, மகிழ்வது தனிசுகம். இப்போதிருக்கும் சன் மியூசிக் வருவதற்கு முன்னால், சன் தொடங்கிய சில ஆண்டுகளில் சன் மூவீஸ் என்றும், சன் மியூசிக் என்றும் இரண்...

மாசு அகற்றிய மாசு!

இந்தக் கட்டுரையை நான் எழுதத்தொடங்குகிற இந்த நொடியோ (11:59:14 - 20.10.2011), அல்லது எழுதத் தோன்றிய 16-ஆம் தேதி இரவோ எந்த விதத்திலும், பிரச்சாரத்திற்கோ ஒரு ஓட்டிற்கோ கூடப் பயன்படப் போவதில்லை; அந்த நோக்கமும் இல்லை. ஏன், எழுதும் நான், என் ஓட்டைக் கூடத் தர முடியாதவன்... சென்னை மாநகராட்சிக்கு! (காரைக்குடிக்குச் சென்று 19-ஆம் தேதி வாக்கிட்டுவிட்டு வந்துவிட்டேன்) வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்ட மாமன்ற உறுப்பினர்கள் மீதான வெறுப்பையும் தாண்டி, மக்களின் ஆதரவு என்னும் பேரலை இவருக்குச் சாதகமாக இருப்பினும், சென்னை மாநகராட்சியை எப்பாடுபட்டேனும் கைப்பற்றியே தீருவது என்ற வெறியில், இவரது வெற்றி ஆளுங்கட்சியினரால் தட்டிப் பறிக்கப்படலாம். ஆனாலும் என் நன்றியைத் தெரிவிக்கும் நோக்கம் ஒன்றே என்னை எழுதத் தூண்டுகிறது. நேரடியாக மேயரைத் தேர்ந்தெடுக்காமல், மாநகராட்சி உறுப்பினர்களிலிருந்து ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் முறை கடந்த 2006-ஆம் ஆண்டு பின்பற்றப்பட்டது. அப்படி சென்னை சைதையிலிருந்து தி.மு.க.வின் சார்பில் மாமன்ற உறுப்பினராகத் தேர்வாகி, பின்னர் மாநகரத் தந்தை ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் மா.சு என்க...