முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஊடகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owne...

தாத்தா ரெட்டமலை சீனிவாசன்: மீசையா, மீசையில்லாமலா?

திவான் பகதூர் தாத்தா ரெட்டமலை சீனிவாசனாரின் பிறந்தநாள் இன்று (ஜூலை 7)! இந்நாள் நினைவுக்கு வந்ததும், உடன் நினைவுக்கு வந்த மற்றொன்று அம்பேத்கர் திரைப்படம். தமிழில் அம்பேத்கர் திரைப்படத்தைப் பார்த்தபோதிலிருந்தே இதை எழுத வேண்டும் என்று   நினைத்துக் கொண்டிருந்தேன்.   திவான் பகதூர் ரெட்டமலை சீனிவாசன் முதல் இரண்டு வட்ட மேசை மாநாடுகளிலும் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாக அண்ணல் அம்பேத்கருடன் பங்கேற்றவர் ராவ்பகதூர் ரெட்டமலை சீனிவாசன் (திரைபடத்தில் அப்படித்தான் குறிக்கப்பட்டிருக்கிறது). ஜாபர் பட்டேலின் ”டாக்டர்.பாபாசாகேப் அம்பேத்கர்” படத்தில் வரும் வட்ட மேசை மாநாட்டுக் காட்சியைப் பார்த்தபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.  முதல் வட்டமேசை மாநாட்டுக் காட்சி (அம்பேத்கரின் வலப்புறம் ராவ்பகதூர் சீனிவாசன்) முறுக்கு மீசையுடன் நாம் பார்த்துப் பழகிய ரெட்டமலை சீனிவாசனை அங்கு காணோம். மாறாக தலையில் முண்டாசுடன் மீசையில்லாத ஒரு பார்ப்பனரைப் போலவே காட்டப்பட்டிருப்பார். ராவ்பகதூர் சீனிவாசன் என்ற பெயரைப் பார்த்ததும், ஜாபர் பட்டேலின் (சீனிவாச அய்யங்கார்கள் மாதிரி) மனதில் அ...

மார்க்கமும் மனிதமும்!

முகநூலில் தோழர் அபுராயன் எழுதிய பதிவு //சிந்திக்க மட்டும்...!!! நேற்று விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இரண்டாவதாக வந்த சையத் சுபஹானிடம் நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என விஜய் டிவி தொகுப்பாளர் கேட்டதற்கு அவர் " எல்லா புகழும் இறைவனுக்கே" என்றார். அவரின் தாயாரிடம் அதே கேள்வி கேட்கப்பட்டது அதற்கு அவர் " என் மகனுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் தலைவணங்குகிறேன்" என்று கூறி தலையை சற்று தாழ்த்தினார்... பிள்ளைகளைவிட பெற்றோர்களுக்கே இஸ்லாமிய மார்க்கம் குறித்த விழிப்புணர்வு அதிகம் தேவைபடுகிறது... என்பதனை இந்த நிகழ்வு நமக்கு உணர்த்தியது... # இறைவனை தவிர எதற்கும் எவனுக்கும் தலைவனங்குவது மாபெரும் குற்றமாகும்...!!! - @ அபு ரயான் // அபுராயன் அவர்களின் பதிவில் தோழர் மதி மதி அவர்களின் கருத்து: //மகன் ஒரு பாடகராகத் தம் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்; வெற்றி பெறும் அளவுக்கு தம் திறமையை வளர்த்து, தம் உழைப்பால் வெற்றிக்கனியைப் பறித்து விட்டார்; ஆனால், இதில் எந்த தொடர்புமில்லாத 'இறைவனுக்கு' நன்றி கூறுகிறார்! அறிவின் மீது நம்பிக்கையின்றி! ஆனால், அவரின் ...

புதிய தலைமுறையா? பா.ஜ.க. விளம்பரப் படையா?

புதிய தலைமுறையின் முகநூல் பக்கத்தில் கீழ்க்காணும் ”விளம்பரம்” ஒன்று வெளியாகிருந்தது. (இது பெய்டு நியூசா? இல்லை கூட்டணி நியூசா?ன்னு தெரியல) வா ஜ்பாய் பிரதமராக இருந்தபோது,  தமிழக மீனவர்கள் மீது, இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தி, ஒரு மீனவர் கொல்லப்பட்டார். உடனே, அன்றைய இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயை, வாஜ்பாய் தொலைபேசியில் அழைத்தார். “இனி ஒரு துப்பாக்கி தோட்டா, இந்திய மீனவர்கள் மீது பாயுமானால், இலங்கைக்கான அனைத்து பொருளாதார உதவிகளையும் உடனடியாக நிறுத்துவோம்’ என எச்சரித்தார். விளைவு, வாஜ்பாய் பிரதமராக இருந்த வரை, தமிழக மீனவர்களை தொட்டு பார்க்கும் தைரியம், இலங்கை கடற்படைக்கு இல்லாமல் இருந்த து. (https://www.facebook.com/Puthiyathalaimurai.tv/posts/620858547975925:0) வா ஜ்பாய் போன் பண்ணி ரனிலை மிரட்டினாராம். ரனில் சொல்லி, உடனே இலங்கை கடற்படைக்காரனுகள்லாம் துப்பாக்கியைத் தூக்கி பேண்டுக்குள்ள சொருகிக்கிட்டாய்ங்களாம்... என்னங்கப்பா... APCO worldwide கம்பெனியோட கூட்டு எதுவும் வச்சுக்கிட்டிங்களா? அள்ளிவிடுறதில உங்களுக்கு அளவேயில்லையா? சரி, அன்ன...

கலைஞரின் உண்ணாவிரதம் - நாடகமா? (ஒரு மீள் பார்வை)

2009 ஏப்ரல்: ஈழப் போர் உச்ச கட்டத்தில் நடந்து கொண்டிருந்த நேரம். ஒரு தலையாக புலிகள் போர்நிறுத்த அறிவிப்பை வெளியிட்டிருந்தனர். மறு புறம் இந்தியாவின் நாடாளுமன்றத் தேர்தல் சூடுபிடித்துக் கொண்டிருக்கிறது. இலங்கையும் போர் நிறுத்த அறிவிப்பை வெளியிடவேண்டும் என்று பலரும் விரும்புகின்றனர். இலங்கை சர்வதேச அளவில் பல நாடுகளின் உதவியுடன் போரை நடத்திக் கொண்டிருக்கிறது. முழுவீச்சில் புலிகளை அழிக்கவும், அதனையே சாக்காக வைத்து தமிழர்களை அழிக்கவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது சிங்கள அரசு. தமிழகத்தில் தி.மு.க தலைமையிலான அரசு - காங்கிரசின் ஆதரவோடு ஆட்சியில்! அதுவரை போரென்றால் மக்கள் சாகத் தான் செய்வார்கள் என்று சொல்லிவந்த ஜெயலலிதா (அதிமுக), டபுள் சிறீ ரவிசங்கர் காட்டிய படங்களைப் பார்த்ததும், ஈழத்தில்... சாரி... சாரி... இலங்கையில் நடந்து வந்த கொடுமைகளை அப்போது தான் உணர்ந்துகொண்டதாகக் கூறி, தனது ஈழ முகமூடியை அணியத் தொடங்குகிறார். அதுவரை கூடவே சுத்திக் கொண்டிருந்த செவ்வாழைகளும், புதிதாகப் போய்ச் சேர்ந்தவர்களும் சொல்லிப் புரியாததை டபுள் சிறீ ரவிசங்கர் சொல்லித் தான் தெரிந்துகொண்டாராம். சரி, போய்த் தொலைகிற...

’பிராமணாள் கபே’யும் நாயுடுஹால், கோனார் நோட்சும்!

திருச்சி திருவரங்கத்தில் இருந்த ‘ஹோட்டல் ஸ்ரீ கிருஷ்ணய்யர் என்பதில், கடந்த சில மாதங்களுக்கு முன் திடீரென ‘பிராமணாள்’ என்ற பெயர் நுழைக்கப்பட்டது. தகவலறிந்த திராவிடர் கழகத் தோழர்கள் நேரில் சென்று ‘பிராமணாள்’ பெயர்ப்பலகையை நீக்குங்கள் என்று கோரிக்கை விடுத்தனர். பல முறை வேண்டுகோள் விடுத்தும், அவர் மறுக்கவே பிரச்சினை காவல்துறையிடம் சென்றது. அங்கு பல முறை பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. காவல்துறையும், அரசு வழக்கறிஞரும் கூட ‘பிராமணா’ளுக்கு ஆதரவாக இருக்கவே, அடுத்தகட்ட நடவடிக்கையாக விளக்கக் கூட்டத்தினை நடத்த திராவிடர் கழகம் அனுமதி கோரியது. தமிழக முதல்வருக்கு (அவருடைய தொகுதி என்பதாலும்) வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டார் திராவிடர் கழக்த் தலைவர் கி.வீரமணி. இதற்கிடையில் இன்னும் சில பெரியாரிய அமைப்புகளும் எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கின.  (தந்தை பெரியார் திராவிடர் கழகம், பெரியார் பாசறை போன்ற அமைப்புகள் போராட்டத்தில் இறங்கின. கைது, சிறை வரை சென்றது. ஒட்டுமொத்த பெரியாரியக் கருத்தாளர்களும் இந்த இழிவு துடைக்கும் பணியில் திரண்டனர். விளக்கக் கூட்டம் நடத்துவதற்கு, மூன்று முறை த...

’நறுக்கு’த் தீனி (அக்டோபர் 2012)

மினி ப்ளாக்குகள் எனப்படும் ட்விட்டரும், பேஸ்புக்கும் வந்த பிறகு, விரிவாக எழுதுவதற்கான அவசியமோ, பெரிய தயாரிப்போ இல்லாமல் கூட, உடனுக்குடன் தோன்றும் கருத்தை எழுதிவிட முடிகிறது. அதனால் வலைப்பூவில் எழுத நினைக்கும் செய்திகள் கூட அங்கேயே முடிந்துவிடுகின்றன. அல்லது சோம்பலால் முழுமையாகப் பதிவு செய்யப்படாமல் விடுபட்டுப் போகின்றன.  எனவே அவற்றை அப்படியே இங்கு பதிவு செய்யவோ, அல்லது கொஞ்சம் விரிவாக்கி எழுதவோ வேண்டும் என்று பல காலமாக நினைத்துள்ளேன். அதற்கான பகுதிக்கு நல்ல பெயர் வைக்க வேண்டும் என்று யோசித்து, யோசித்தே தாமதித்துவிட்டேன். நல்ல பெயரோ என்னவோ- இப்ப வச்சாச்சு... தொடங்கியாச்சு... ’ நறுக்கு ’ த் தீனி விஜயகாந்த் கோபம்? விஜயகாந்த் வீடியோவைப் பார்த்தேன். ‘நீ யார்’ என்று அந்த பத்திரிகையாளரைப் பார்த்துக் கேட்கிறார். அவர் எந்த பத்திரிகையிலிருந்து வருகிறார் என்று கடைசி வரை சொன்னதாகத் தெரியவில்லை. அதன் பிறகு பத்திரிகையின் / தொலைக்காட்சியின் பெயரோடு வந்து கேட்டவர்களுக்கு அவரின் பதில் ஓரளவு மரியாதையாகத் தான் இருக்கிறது. அதற்கும் பிறகு மீண்டும் அந்த நபர் வந்து வம்பிழுக்க இழுக்க வேகம் கூடுகி...

எதற்காக டெல்லியில் குண்டுவெடித்தது?

வட இந்திய ஆங்கில ஊடகங்களைப் போலவே, புதிய தலைமுறை தொலைக்காட்சியின் இன்றைய பேசு பொருளாக டில்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பே இருந்தது! நீதி கிடைக்குமென நம்பி சாதாரண மக்களும், நீதியை ’வாங்கு’வதற்கென சிலருமாகப் பொதுமக்கள் குழுமியிருக்கும் இடத்தில் நடத்தப்பட்டிருக்கும் குண்டு வெடிப்பு கடுமையான கண்டனத்திற்குரியது தான். நீதிமன்றத்திற்குள்  குத்து, வெட்டு, கொலை நடப்பதை நம்மூரில் பார்த்திருக்கிறோம். ஆனால், இந்தியாவின் தலைநகரல்லவா? குண்டு வெடித்திருக்கிறது. கடும் கண்டனத்திற்குரிய இந்நிகழ்வை யாரும், எக்காரணத்தைக் கொண்டும் ஆதரிக்க முடியாது. இதற்கு பாதுகாப்புக் குறைபாடுகள் காரணமா? அலட்சியம் காரணமா? CCTV கேமராக்கள் இல்லாத்தற்குக் காரணம் யார்? சகல திறமையும் பொருந்திய நமது இராணுவம், காவல்துறை இவற்றைவிட தீவிரவாதிகள் பெரியவர்களா? உளவுத்துறை என்ன செய்கிறது? இப்படி எண்ணற்ற கேள்விகள் எல்லா ஊடகங்களாலும் கேட்கப்பட்டன. புதிய தலைமுறை நிகழ்ச்சியிலும் கேட்கப்பட்டது. இந்த விவாதத்தில் கலந்துகொள்ள ஓய்வுபெற்ற இந்திய இராணுவ உளவுப்பிரிவைச் சேர்ந்த கர்னல் ஹரிஹரன் என்பவரும், இதழாளர் பகவான...

இலவசக் கழிவறையும், சில கழிவுகளும்

மதுரை பேருந்து நிலையம் அருகில் நவீன இலவச கழிப்பிடம் ஒன்றைக் கட்டப்பட்டிருக்கிறது! அவரைப் பாராட்டுவதை விட்டுவிட்டு அழகிரி படம் இருப்பதைப் புகைப்படம் எடுத்துக் காட்டி கிண்டல் அடிக்கிறார் ஒருவர். அங்கே ராசா படம் வைக்கவேண்டும்; பெண்கள் பகுதிக்கு கனிமொழி, நீராராடியா என்று ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறீர்கள். வேலையத்த வெட்டிகளைப் போல உங்கள் அருவெறுப்பை இங்கே வந்து காட்டுவதா? http://www.facebook.com/photo. php?fbid=1693166976473&set=a. 1134458769117.21317. 1456758830&pid=1725248&id= 1456758830 கோடிகோடியாய்க் கோயிலுக்குக் கொட்டி அழுபவர்களும், திருவிழா, கொண்டாட்டம் என்று பாவக் கணக்கை தீர்க்க செலவு செய்து கொண்டிருப்பவர்களும் லட்சக்கணக்கில் இருக்கின்றனர். அப்படி நடக்கும் திருவிழாக்களில் கூட முறையாகக் கழிப்பிட வசதி செய்து கொடுக்காமல், போகும் வரும் இடங்களில் எல்லாம் அசுத்தம் செய்து ஊரையே கழிவறையாக்கிவிட்டுச் செல்லும் படி திருவிழா நடத்துகிற கோயில்களையும், அதன் மூலம் கொள்ளையடிக்கிற கும்பலையும் கண்டிக்க ஒருமுறையாவது உங்களுடைய விரல்கள் கணினியைத் தொட்டிருக்குமா? சுகாதரமற்ற குளங்களினாலும், கோவில...

குற்றச்சாட்டு தவறு என்று நிரூபிப்பேன் - மத்திய அமைச்சர் ஆ.இராசா

சென்னை, நவ. 14- தொலைத் தொடர்புத் துறையில் மாறுதலை விரும்பாதவர்கள் ஒன்று சேர்ந்து என்மீது களங்கம் கற்பிக்க முனைந் துள்ளனர் என்று மத்திய அமைச்சர் ஆ. இராசா இந்து நாளித ழுக்கு அளித்த பேட் டியில் கூறியுள்ளார். அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு: கேள்வி:  2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு, புதிய நிறுவனங்களுக்கு உரிமங்கள் வழங்கியது, உரிம நிபந்தனைகளில் மாற்றம் செய்தது ஆகியவை காரணமாக அரசுக்கு 1.77 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது என்று இந்திய உயர் தணிக்கை அதிகாரியின், தணிக்கை அறிக்கையில் தெரிவிக் கப்பட்டுள்ளது என்ற செய்தி கசிந்திருக்கிறது. இதனைப் பற்றி நீங்கள் விளக்கமுடியுமா? ஆ.இராசா : எழுப் பப்பட்டுள்ள பிரச் சினைகளை இரு வகை களாகப் பிரிக்கலாம். முதலாவது, அரசாங் கத்துக்கு இழப்பு ஏற் பட்டதாகக் கூறப்படு வது. அடுத்தது நடை முறையில் தவறுகள் ஏற்பட்டது என்று கூறப்படுவது. 1999 தேசிய தொலைத் தொடர்புக் கொள்கை மத்திய அமைச்சரவை யால் ஏற்றுக் கொள் ளப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டு நாடா ளுமன்றம் பின்னேற்பு வழங்கப்பட்டு உள் ளது. ஏலம் வழியான நடை முறையிலிருந்து(NTP 94) வருவாய் பங் கீடு நடைமுறைக்கு (NTP 99) மாறுவதற்கு ...

திராவிடத்தால் கேடா? பாரதிராஜாவின் சிந்தனைக்கு! (மட்டுமல்ல...)

ஈழத் தமிழர் படுகொலை நடந்து ஓராண்டிற்குள் உலகத் தமிழ் மாநாடு கொண்டாட்டமா? என்று கேட்டவர்கள் யாரும் பெட்னா விழா குறித்தெல்லாம் கேள்வி எழுப்பவில்லை. பங்கெடுக்காமலும் போய்விடவில்லை. ஜூன் 27-க்கும் ஜூலை 3-க்கும் ஒரு வேளை ஆண்டுக்கணக்கில் வித்தியாசம் இருக்குமோ என்னமோ தெரியவில்லை. ஆனால் கடந்த ஆண்டும் பெட்னா விழா நடத்தப்பட்டிருப்பதையும் அதில் தமிழ்த்திரை நடிகர்கள் உள்ளிட்டோர் பங்கெடுத்ததையும் காணொளிகள் வாயிலாக இரண்டு நாட்களுக்கு முன்பு தான் கண்டேன்.   லக்கி தான் இது குறித்து ஏற்கெனவே கேள்வி எழுப்பினார் என்று கருதுகிறேன். இதனால் நாம் ஏதோ பெட்னா நடைபெற்றதைக் குறை கூறுவதாக எண்ண வேண்டாம். தமிழர்கள் தமிழர்களாக எங்கு ஒன்று கூடினாலும், எப்போது ஒன்று கூடினாலும் அதில் நமக்கு மட்டற்ற மகிழ்ச்சியும், அதனால் கிஞ்சிற்றேனும் பயன் விளையும் என்ற நம்பிக்கையும் நிச்சயம் உண்டு. அந்த வகையில் கடந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்வும் கூட அவசியமான ஒன்றே! ஆனால் அது போன்ற ஒன்றுகூடல் தமிழகத்தில் கலைஞரால் நடத்தப்படக்கூடாது என்றவர்களுக்கு மட்டுமே நமது கேள்விகள். போகட்டும். வெற்றிகரமாக செம்மொழி மாநாடு முடிந்துவிட்டது. அத...