முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

சேதி ஒண்ணு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

’பிராமணாள் கபே’யும் நாயுடுஹால், கோனார் நோட்சும்!

திருச்சி திருவரங்கத்தில் இருந்த ‘ஹோட்டல் ஸ்ரீ கிருஷ்ணய்யர் என்பதில், கடந்த சில மாதங்களுக்கு முன் திடீரென ‘பிராமணாள்’ என்ற பெயர் நுழைக்கப்பட்டது. தகவலறிந்த திராவிடர் கழகத் தோழர்கள் நேரில் சென்று ‘பிராமணாள்’ பெயர்ப்பலகையை நீக்குங்கள் என்று கோரிக்கை விடுத்தனர். பல முறை வேண்டுகோள் விடுத்தும், அவர் மறுக்கவே பிரச்சினை காவல்துறையிடம் சென்றது. அங்கு பல முறை பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. காவல்துறையும், அரசு வழக்கறிஞரும் கூட ‘பிராமணா’ளுக்கு ஆதரவாக இருக்கவே, அடுத்தகட்ட நடவடிக்கையாக விளக்கக் கூட்டத்தினை நடத்த திராவிடர் கழகம் அனுமதி கோரியது. தமிழக முதல்வருக்கு (அவருடைய தொகுதி என்பதாலும்) வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டார் திராவிடர் கழக்த் தலைவர் கி.வீரமணி. இதற்கிடையில் இன்னும் சில பெரியாரிய அமைப்புகளும் எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கின.  (தந்தை பெரியார் திராவிடர் கழகம், பெரியார் பாசறை போன்ற அமைப்புகள் போராட்டத்தில் இறங்கின. கைது, சிறை வரை சென்றது. ஒட்டுமொத்த பெரியாரியக் கருத்தாளர்களும் இந்த இழிவு துடைக்கும் பணியில் திரண்டனர். விளக்கக் கூட்டம் நடத்துவதற்கு, மூன்று முறை த...

கார்களில் கருப்பு பிலிம் அகற்றுதல் தேவையா?

கார்களில் கருப்பு பிலிம்களை எடுக்கச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறது நீதிமன்றம். எனக்கு இந்த உத்தரவில் இன்னும் உடன்பாடு ஏற்படவில்லை.  தீவிரவாதிகள், கொலை, கொள்ளையர்களைப் பிடிக்க வாகன சோதனைகள் இருக்கின்றன. கருப்பு பிலிம்களை அகற்றுவதன் ஊடாக எதைப் பார்த்து கண்டுபிடித்துவிட முடியும் - உள்ளிருப்போரின் தனிமையைக் கெடுப்பதைத் தவிர? மற்ற வாகனங்கள் அனைத்தையும் விட உயரம் குறைவானவை மகிழுந்துகள். அவை மகிழுந்துகளாக இருப்பதற்கு முக்கியமான காரணம் அதில் உள்ள privacy என்பது என் கருத்து. அதுவும் குடும்பத்தோடு செல்லும்போது, சிரிப்பு, மகிழ்ச்சி, கிண்டல் என செல்லும் தருணங்களை ரசித்தவர்களுக்கு அத்தனை பேரும் சுற்றி பார்த்துக் கொண்டிருக்கும் காரணத்தால் மூஞ்சியைத் தூக்கி வைத்துக் கொண்டு வரும் கொடுமையை சகித்துக் கொள்ள முடியாது.  போக்குவரத்து சிக்னல்கள், நெருக்கடிகள் உள்ள இடங்களில், வண்டி ஓட்டுபவரைத் தவிர மற்ற அனைவரும் மகிழ்வுடன் இருக்கும் தருணங்களுக்கு இந்த நடவடிக்கை கடுப்பைத் தரக்கூடியது. இந்த நடவடிக்கைக்குப் பிறகு குடும்பத்துடன் மகிழுந்தில் செல்லவில்லை என்றாலும், சாலையில் செல்லும் போது கார்கள...

கள்ள நோட்டைக் கண்டுபிடிப்போம் வாங்க!

கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே எ.எ.வி.வி. (எண்ணி எழுதாமல் விட்ட விசயம்) மற்றொன்று - கள்ளநோட்டு விவகாரம். நாடெங்கும் இப்பிரச்சினை கவனம் பெற்றிருக்கும் சூழலில் இப்போதாவது எழுதிவிடுவோம் என்ற வேகத்துடன் அதிகாலை 4மணிக்கு எழுதத் தொடங்குகிறேன். -------------------------------------------------------------------- கை யில் கிடைக்கும் நோட்டு ஒத்தையோ கத்தையோ, அது கள்ள நோட்டா நல்ல நோட்டா என்று சோதனை செய்து, பணத்தைக் கொடுத்தவர் வயிற்றில் பீதியைக் கிளப்பி ஆராய்ச்சி செய்யும் பழக்கம் 2010-ன் இறுதிவாக்கில், மின்னஞ்சலில் கிடைத்த தகவல்களைக் கொண்டு எதார்த்தமாய் தொடங்கியது.  எனது ஆய்வில்... கிட்டத்தட்ட ஆய்வாகவே இதைச் செய்தேன் என்பதை அருகில் உள்ளவர்கள் அறிவார்கள்- நொந்த மனத்துடன்....! ஏன்னா அவங்க கிட்ட இருந்துதானே கத்தையைப் புடுங்கி ஆராய்ச்சி பண்ணுவேன். அவங்களுக்கும் இந்த ஆய்வு நோய் தொற்றிக் கொண்டது என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும். எங்களது ஆய்வில் மிகக் குறைந்த அளவு என்று எடுத்துக் கொண்டாலும் 15 % முதல் 25% வரை கள்ள நோட்டுப் புழக்கம் இருந்துவருகிறது என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது. உண்மை...

தமிழில் பிறந்தநாள் வாழ்த்துப்பாடல்! நன்றி தோழர்களே!

”எனக்கு இன்னிக்கு ஹேப்பி பர்த்டே!” என்று சொல்லிக் கொள்ளும் குழந்தைகளைப் பார்த்திருக்கிறீர்களா? அன்றைக்கு முழுமையும் அவர்களுடைய நாள் என்ற உணர்வு தான் அதற்கு காரணம். எல்லா நாளும் நம்முடைய நாள் தான் என்றாலும் கொண்டாட்டத்திற்குரிய நாள்களாக பிறந்தநாள், திருமணநாள் போன்றவை அமைகின்றன. கூடுமானவரை, மறக்காமல் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் பிறந்தநாள் வாழ்த்துச் சொல்வதும், இயன்றவரை குட்டிக் குட்டி கொண்டாட்டங்களை கேக் வெட்டி நடத்துவதும் எமது வழக்கங்களில் ஒன்று. அப்போதெல்லாம் "Happy Birthday To You|" பாடுவதற்கு பதிலாக, தமிழில் அதே ராகத்தில் “இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்; இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று பாடுவேன். தமிழில் நல்ல பிறந்தநாள் வாழ்த்துப் பாடல் இல்லையே என்ற வருத்தமும், நமது இசைக் கலைஞர்களை வைத்து ஒன்று தயாரித்து வெளியிட வேண்டும் என்ற எண்ணமும் இருக்கும்; இருக்கிறது. அந்த ஏக்கத்தினைத் தீர்க்கும் விதமாக அமைந்திருக்கிறது - முகில் படைப்பகம் வழங்கியிருக்கும் பிறந்தநாள் வாழ்த்துப் பாடல். வித்யாசாகரின் நற்றமிழில் ஆதியின் இனிய இசையில் சரோ என்ற மென்குரல் நாயகனின் குரலில் தேன...

தீபாவளியன்று வீட்டுக்கு வந்த பெரியார்

...... 1949க்குப் பிறகு அய்யா அவர்கள் எனது இல்லத்தில் தான் தங்குவார்கள் (காரைக்குடி வரும்போது) என்பது எனக்குக் கிடைத்த பெருமையாகும். ஒருமுறை 1950வாக்கில் தீபாவளி அன்று திடீரென்று பெரியார் அவர்கள் எங்கள் இல்லத்திற்கு வந்து விட்டார்கள். முதல் நாளில் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட நிகழ்ச்சி முடித்து மதுரை வந்த அய்யா மேலூர், திருப்பத்தூர் வழியாக காரைக்குடிக்கு வந்து விட்டார்கள். நேராக எனது கடைக்கு முன் அய்யாவின் வேன் வந்து நின்றுள்ளது. நான் அந்த நேரம் கடையில் இல்லை. எனது மைத்துனர் தனுக்கோடிதான் கடையில் இருந்தார். அப்போது மதியம் 3-4 மணி இருக்கும். வந்தவுடன் "சாமி எங்கே?" என்று கேட்டதும், "வீட்டிலிருக்கிறார். இதோ கூட்டி வருகிறேன்" என்று கிளம்பியவரை நிறுத்திவிட்டு, அய்யா அவர்களே தனியாக கடை எதிரே உள்ள ஒரே நீளமான சந்தில் வருகிறார். (படம்:பெரியார் நடந்து வந்த சந்தின் இன்றைய தோற்றம்) (உள்படம்: என்.ஆர்.சாமியும், பேராண்டாள் அம்மையாரும், கையில் குழந்தையாக திராவிடச்செல்வம்) நான் கருப்புச்சட்டையுடன் எதிரே வருகிறேன். சற்று தூங்கிவிட்டு வருவதால் எனக்கே ஒரு சந்தே...

என்னாச்சு பிளாக்கருக்கு? வலைப்பூ காணாமல் போச்சு :(

திடீர் திடீரென சில வலைப்பூக்கள் காணாமல் போகின்றன. என்னவென்று அந்தந்த வலைப் பதிவரைக் கேட்டபோது தான் அவரும் கவனித்தார். இவ்வாறு ”நீங்கள் தேடும் வலைப்பூவைக் காணவில்லை. நீங்கள் இவ்வலைப்பூவின் உரிமையாளரானால் கணக்கில் நுழைக” என்று பதில் வருகிறது. தனது கட்டுப்பாட்டகத்துக்குள் சென்று அவர் பார்த்த போது மேலும் அதிர்ச்சி. வலைப்பூ இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் காணாமல் போயிருக்கிறது. ஆனால், google தேடலில், cached இணைப்பில் முந்தைய பதிவுகள் கிடைக்கின்றன.  சரி, இது குறித்து Blogger-க்கு தெரிவிக்கலாம் என்றால், அங்கே ஒரு வாரமாக இது குறித்து முனங்கி முறையிட்டுக் கொண்டிருக்கிறார்கள் போலிருக்கிறது. என்ன பிரச்சினை? என்ன செய்யலாம்? என்று  விவரம் தெரிந்தவர்கள் பாருங்கள். முடிந்தால் தமிழில் இது குறித்த விளக்கங்களைத் தாருங்கள். http://www.google.com/support/forum/p/blogger/label?lid=0271191b4249689a&hl=en இது போல பதிவுகளைத் தொலைத்தவர்கள் அங்கே போய் முறையிடுங்கள். அவர்கள் தீர்வை முன்மொழியும் போது மின்னஞ்சலில் அது குறித்த தகவல் கிடைக்க வழியேற்படும்.  அப்புறம் என்னை மாதிரி பல பதிவுகள் வைத...

தேடுகிறோம்... தேடுகிறோம்...

தேடலின் கதையைத் திரையில் காட்ட வாய்ப்பளிக்கின்றன Google-உம் Youtube-உம்! இது என் தேடல் மட்டுமல்ல... ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் தேடல்! அந்தத் தேடலின் கதை??? IC on tamils??? (International Community on Tamils???) உங்கள் தேடலை நீங்களும் படமாக்கலாம்... இங்கே !

"தீராத விளையாட்டுப் பிள்ளை" Part -1

"எ ன்னத்த சொல்றது? கலி முத்திடுத்து... பாருங்கோ இந்தப் புள்ளாண்டானை எல்லாரும் என்னமா நம்பிண்டிருந்தா.... இப்போ என்னடான்னா... இப்படி நடந்திண்டிருக்கானே.. ஹிந்து மதத்துக்கே அவமானம். நம்ம மதத்தையே அசிங்கப்படுத்துற இந்த மாதிரி ஆசாமிகளையெல்லாம் என்ன பண்றதுன்னே தெரியலை... ஈஸ்வரா?" என்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரை நோக்கி தொழுகிறார்களாம். அருணாசலேஸ்வரப் பெருமானின் அருள்பார்வை விழும் திருவண்ணாமலையில் தானே இத்தனையும் நடந்திருக்கிறது. அதைக் கண்டு கொள்ளாதவனிடம் இதைக் கேட்கலாமா? அதெப்படி அவர் கண்டு கொள்வார்? அங்கே நடந்தது சிவலிங்க பூஜைதானே! இதுவாவது அருணாசலேஸ்வரரின் பேரில் அவரது ஊர்க்காரரால் நடந்தது. கண்டுகொள்ள முடியாமல் போய்விட்டது என்று சொல்லலாம். இன்னொரு ஈஸ்வரரான மச்சேஸ்வரரின் சன்னதியிலேயே தேவநாத லீலைகள் நடந்தபோதும் அல்லவா அவர் கண்டுகொள்ளாமல் இருந்தார். பிறகு அவரிடம் முறையிட்டு என்ன பயன்? இங்கேயெல்லாம் கடவுளின் கண்கள் வேலை செய்தனவோ இல்லையோ, கேமராவின் கண்கள் ஒழுங்காக வேலை செய்திருக்கின்றன என்பதை நம்மால் தெளிவாகப் (:P) பார்க்க முடிகிறது. எல்லா படங்களையும் இவர்களே வாங்கி விநியோகிக்கிறார...

17-ஆம் தேதி எங்கே இருக்கீங்க?

17- ஆம் தேதி எங்கே இருக்கீங்க? எங்கே இருந்தாலும் அவசியம் வர மறந்துடாதீங்க? என்ன விசயமா? அட, நான் இயக்கிய 'திற' குறும்படத்தின் திரையிடல் மற்றும் திறனாய்வு நடக்குதுங்க! 'திற' (குறும்படம்) - - மதவெறி குடித்த ரத்தத்தின் ஒரு துளி - - திரையிடல் . திறனாய்வு ------------------------------ ------------------------------ ------------------------------ ---------- 17.12.2009 | வியாழன் | மாலை 6.30 மணி ரஷ்ய கலாச்சார மய்யம் (ஹோட்டல் சோழா பின்புறம்), சென்னை-18 ------------------------------ ------------------------------ ------------------------------ ---------- தலைமை: தமிழர் தலைவர் கி.வீரமணி மதவெறிக்கு எதிரான குரல்கள் கவிஞர் கலி.பூங்குன்றன் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் 'நக்கீரன்' கோபால் 'திரைப்பட இயக்குநர்' எஸ்.பி.ஜனநாதன் வழக்கறிஞர் அ.அருள்மொழி 'நிழல்' திருநாவுக்கரசு 'தலித் முரசு' புனித பாண்டியன் பேராசிரியர் ஹாஜா கனி பேராசிரியர் ரவிராஜ் 'திரைப்பட இயக்குநர்' சே.பாத்திமா பீவி ------------------------------ ------------------------------ --------...

பெரியார் திரை குறும்படப் போட்டி 2009

பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை மற்றும் பகுத்தறிவாளர் கழகம் இணைந்து நடத்தும் முதலாம் ஆண்டு பெரியார் திரை குறும்படப் போட்டி க்காக குறும்படங்கள் வரவேற்கப்படுகின்றன. முதல் பரிசு: ரூ.10000/- இரண்டாம் பரிசு: ரூ.5000/- மூன்றாம் பரிசு: ரூ.3000/- போட்டிக்கான விதிமுறைகள்: 1. பகுத்தறிவு, பெண்ணுரிமை, சமூகநீதி, ஜாதி ஒழிப்பு, மதவாத எதிர்ப்பு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைப் பிரதிபலிப்பதாக குறும்படம் இருத்தல் வேண்டும். 2. குறும்படம் தமிழில் எடுக்கப்பட்டதாக 30 மணித்துளிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆங்கிலத் துணைத் தலைப்புகளுடன்(Subtitles) இருப்பின் நலம். தரமான DVD அல்லது CD வடிவில் குறும்படத்தின் இரண்டு பிரதிகள் அனுப்பப்பட வேண்டும். 3. ஒருவரே ஒன்றுக்கும் மேற்பட்ட குறும்படங்களையும் போட்டிக்கு அனுப்பலாம். ஒவ்வொன்றிற்கும் தனித்தனி விண்ணப்பங்கள் பயன்படுத்தப்பட வேண்டும். 4. இயக்குநர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரமும், ஏற்கெனவே பரிசு பெற்றிருந்தால் அது பற்றிய விவரமும் இணைத்து அனுப்பப்பட வேண்டும். 5. குறும்படத்தின் கதைச் சுருக்கம், முக்கியக் காட்சிகளின் ஒளிப்படங்கள் (Photos) மற்றும் இ...

வி.பி. சிங் வீரவணக்க நாள் கூட்டம்

வி.பி. சிங் வீரவணக்க நாள் கூட்டம் நாள்: 27.11.2009 இரவு 7 மணி. இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை வரவேற்புரை: கா.எழிலரசன் தலைமை: கு.வெ.கி. ஆசான் , நெறியாளர், பெரியார் களம், முன்னிலை: இறைவி, தலைவர், பெரியார் களம்; ஆடிட்டர் ஜெயராமன் , செயலாளர், பெரியார் களம், வீரவணக்க உரை: கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச்செயலாளர், திராவிடர் கழகம் வழக்கறிஞர் அ. அருள்மொழி, பிரச்சார செயலாளர், திராவிடர் கழகம் கோ. கருணாநிதி, பொதுச்செயலாளர், AIOBC நன்றியுரை: பாரி

எல்லாம் கேளுங்க....மீசையில் மண் ஒட்டவில்லை!

ஹே! எல்லாம் கேட்டுக்க.... கேட்டுக்க....! மீசையில எனக்கு மண் ஒட்டலை... ஒட்டலை... ஒட்டலை! ஏன்னா எனக்கு மீசையே இல்ல...! உயர் நீதிமன்றத்தில் சிதம்பரம் தீட்சிதர்களுக்கு ஆதரவாக, மனுத் தாக்கல் செய்யவந்த அரசியல் புரோக்கர் சு.சாமி மீது முட்டை வீசப்பட்டபின் ஓடிஒளிந்து நீதிபதிகளிடம் புகார் அளித்துவிட்டு, வெளியில் வந்து செய்தியாளர்களைச் சந்தித்த சு.சாமி, சாரி... (thatsislam-இன் வேண்டுகோள்படி மு.சாமி ) கருத்து தெரிவித்ததாவது: கோர்ட்டுக்குள் நான் நுழைந்தபோது சிலர் முட்டை வீசினார்கள்.. அதில் சில வக்கீல்களும் இருந்தார்கள். அவர்கள் வீசியது டேபிளின் மீது விழுந்தது. அங்கிருந்த File-களின் மீது விழுந்தது. டவாலியின் மீது விழப்போனது. இதை நீதிபதிகள் பார்த்தார்கள். பின்னர் அந்த கும்பல் ஒரு காவலரைப் பிடித்து அடித்து உதைத்தது. நீதிமன்றத்துக்குள் அவர்களது அட்டூழியத்தை நான் நீதிபதிகளிடம் புகார் செய்தேன். அவர்களும் பதிவு செய்துகொண்டனர்." இதை அவரு(னு)க்கேயுரிய ஜுனூன் தமிழில் சொன்னார். சரி... உன்னைய அடிச்சது உண்மையா-இல்லையா?... முட்டை உன் மேலே விழுந்ததா? இல்லையா? அதைச் சொல்லுப்பான்னா? பென்ச்-ல விழுந்தது... இன்ச்...

ஊன்றிப் படித்து உண்மையை அறிக!

ஊன்றிப் படித்து உண்மையை அறிக! சென்னை மாநாடுகளும் - நமது சிந்தனையும்! - கலி. பூங்குன்றன், பொதுச்செயலாளர், திராவிடர் கழகம். மதவாதம் இந்தியத் துணைக் கண்டத்தை மட்டுமல்ல - உலகப் பந்தையே உருட்டி மிரட்டிக் கொண்டு இருக்கிறது!வெடிகுண்டுகள் ஒரு பக்கம்; மனிதனே வெடிகுண்டாகி ரத்தத்தைக் குடித்துக் கொண்டு இருக்கிறான் மறுபக்கம்! ஓருயிர் போகட்டும் - அதற்கு விலையாக ஒரு நூறு உயிர்களைக் குடிப்போம் என்கிற குரூரப் புத்தியை மதங்கள் மலிவாக வழங்கிக் கொண்டு இருக்கின்றன.கடவுளிடம் அனுமதி பெற்று ஈராக்கின் மீது போர் தொடுத்தோம் என்று படித்த மனிதன் - அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் விஷம் கக்குகிறார்.ஒரு மதத்துக்கும், இன்னொரு மதத்துக்கும் மட்டுமல்ல - ஒரு மதத்தின் குட்டிகளுக்குள்ளேயே கூட அடிதடி - ரணம் - ரத்த ஆறு!மதம் வழி காட்டியது போதும், போதும்! புது வழியைத் தேடும் - புதுப் பார்வையை நாடும் ஒரு காலகட்டம் இது.இதற்குத் தேவைப்படும் மாமனிதர்தான் தந்தை பெரியார் - மாமருந்துதான் தந்தை பெரியார் என்ற சமூக விஞ்ஞானி கண்டுபிடித்துக் கொடுத்த சுயமரியாதை - சமத்துவ - பகுத்தறிவுச் சித்தாந்தம்!உலகில் இதற்கான ஒரே ஒரு தனித்தன்மை வாய்ந்த இய...