பணியில் இருக்கும்போது படித்துக் கொண்டிருக்கும்போது போனில் யாருடனும் பேசிக் கொண்டிருக்கும்போது பயணத்தில் இருக்கும்போது அடுத்தடுத்து செய்ய வேண்டியவற்றை நினைவில் வைக்கக் குறித்துக் கொள்வதுண்டு. துண்டுச் சீட்டோ டிக்கெட் பின்புறமோ சரியான குறிப்பேடோ சட்டை உள்மடிப்போ செல்பேசியோ உள்ளங்கையோ பத்துரூபாய் நோட்டோ குறிப்பெடுக்கப் பயன்படும். தேர்வு நேரங்களில் அமைதியான சூழலில் கேள்விக்கான பதிலை விட அடுத்தடுத்து செய்ய வேண்டிய பணிகளோ, நெடுங்காலத் திட்டங்களுக்கான நினைவூட்டல்களோ கேள்வித் தாளில் பிட் என்று கருத முடியாத அளவிற்கு குறித்துவைத்துக் கொள்வதுண்டு. எதுவும் இல்லையென்றால் பக்கத்தில் இருப்பவர் தான் என் குறிப்பேடு. எனக்கு மறந்துவிட்டாலும் ஏன் நினைவூட்டவில்லையென்று அவர் மேல் பொறுப்பைப் போடலாம். யாருடைய வேண்டுகோளானாலும் ’நீங்களே மீண்டும் மீண்டும் நினைவூட்டி என்னிடமிருந்து வேலையை முடித்துக் கொள்ளுங்கள். நான் தவறாக நினைக்க மாட்டேன்’ என்று சரண்டர் ஆகிவிடுவதுண்டு. நினைவூட்டுவதற்கு இவை, இவர்கள் இல்லாமல் என்ன செய்வது என்று யோசித்ததுமுண்டு. கையில் தாளோ, எழுதுகோலோ பக்கத்தில் ஆளோ செல்பேசியோ கணினியோ இருக்க முடியா
PRINCENRSAMA
சிரமப்படாதீங்க... பதம் பிரிச்சு சொல்றேன். "பிரின்சு என் ஆர் சமா". இப்படித்தான் படிக்கணும்.