முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வக்கீல் அவ்வாவுக்கு வீரவணக்கம்!

இயக்கம் தான் எங்களுக்குக் குடும்பம். தந்தை வழி தாய், தந்தையர் தான் நான் பார்த்து வளர்ந்த பாட்டி, தாத்தா. (தாய் வழி தாத்தா, பாட்டி எனக்கு நினைவு தெரியும் முன்பே மறைந்துவிட்டார்கள்) அவர்களைத் தவிர்த்து சிறு குழந்தை பருவத்திலிருந்து எனக்குத் தெரிந்த தாத்தா, பாட்டி என்றால் அது வக்கீல் தாத்தா, வக்கீல் பாட்டி தான்.

எங்கள் தாத்தா காரைக்குடி என்.ஆர்.சாமி அவர்கள் ஒருங்கிணைந்த இராமநாதபுரம் மாவட்டத்தின் செயலாளர் என்றால் சிவகங்கை வக்கீல் சண்முகநாதன் அவர்கள் தான் மாவட்டத் தலைவர். கிட்டத்தட்ட 25 ஆண்டுகாலம் கடுமையான எதிர்ப்பின் இடையே இயக்கத்தை வளர்ந்த பெரியார் தொண்டர்கள்.

இவர்கள் இருவருக்கும் ஈடுகொடுத்து உழைக்கச் சளைக்காத இருவர் என்றால் அது எங்கள் அவ்வா பேராண்டாள் அவர்களும் வக்கீல் அவ்வா இராமலக்குமி அவர்களும் தான். போராட்டக் களத்தில் நிற்கும் தங்கள் இணையர்களுக்குத் தோள்கொடுத்து குடும்பத்திலும், கழகத்திலும் தங்கள் பங்கைச் செலுத்தியவர்கள். போராட்டம், மாநாடுகள், இயக்கக் கூட்டங்கள் - எது என்றாலும் ஆபத்துக்கு அஞ்சாமல் போராடியவர்கள். காங்கிரசின் எதிர்ப்பை மீறித் தான் அத்தனை பொதுக்கூட்டங்களும், மாநாடுகளும் அந்நாளில்! அத்தனையையும் கடந்து தங்கள் இறுதிக் காலம் வரைக்கும் கழகத்தில் பங்காற்றியவர்கள்.

தங்கள் பிள்ளைகளை, குடும்பத்தை இயக்கத்துக்கு ஒப்படைத்த பெருமைக்குரியவர்கள். ஒருங்கிணைந்த ராமநாதபுரம் பிரிந்து சிவகங்கை மாவட்டமாக ஆனபிறகும், பின்னர் இயக்க வசதிக்காக காரைக்குடி- சிவகங்கை என இரண்டு மாவட்டங்களாக (கழக அமைப்பில்) பிரிக்கப்பட்ட பின்னரும் கூட எங்களுடையது குடும்ப உறவு தான்.

அந்த தாத்தா, அவ்வா வரிசையில் மற்ற மூவரும் மறைந்தபிறகும், உடல்நலிவுற்ற நிலையிலும் மாநாடுகளிலும், போராட்டங்களிலும் பங்கு கொண்டு வந்தவர் வக்கீல் அவ்வா இராமலக்குமி அவர்கள். அவர்கள் நேற்று மறைவுற்றார் என்ற செய்தி கிடைத்தது. கழகத்தின் சார்பிலும், குடும்பத்தின் சார்பிலும் காரைக்குடியிலிருந்து சென்று வீரவணக்கம் செலுத்தியிருக்கிறார்கள்.



அந்த வீராங்கனைக்கு எங்கள் வக்கீல் அவ்வாவுக்கு வீரவணக்கம்! வீரவணக்கம்!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owne...

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்...

சரத்குமாருக்கு மட்டுமல்ல... மானமற்ற மடையர்கள் அனைவருக்கும்!

"தமிழ் வளர வேண்டும். தமிழர்கள் வழிபடும் ஆலயங்களில் தமிழில் மந்திரங்கள் ஒலிக்க வேண்டும். தமிழில் அர்ச்சனைகள் நடக்க வேண்டும் என்ற ஆர்வம் தவறில்லை. ஆனாலும், காலகாலமாய் கடைப்பிடிக்கப்பட்டு வந்த மரபுகளையும் மனதில் கொண்டே மாற்றங்களை நிகழ்த்த அமைதி வழியில் முயற்சிக்க வேண்டும். அதற்கு இறை நம்பிக்கை கொண்டோரை, ஆன்மீகப் பெரியோர்களை, அறிஞர் பெருமக்களை கொண்ட ஒரு குழு அமைத்து அதன் வழியில் தீர்க்கமான சுமூக முடிவை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும் என்று ***** கூறியுள்ளார்." (தினமணி 4.3.2008 ) இது தினமணியில் வந்த செய்தி. அதே பேட்டியை சன் டி.வி-யும் ஒளிபரப்பியது. அதில் சொன்னார், "கடவுளுக்கு எந்த மொழியில் அர்ச்சனை செய்வது என்று ஆகமத்தில் இருக்கிறது அதன்படி தான் செய்ய வேண்டும். கடவுள் நம்பிக்கையற்றவர்கள் இப்பிரச்சினையில் உள்நுழைந்து குழப்பக்கூடாது." என்று. இப்பேட்டி யார் கொடுத்தது என்று நினைக்கிறீர்கள்? பா.ஜ.க. 'இலக்கடை' கணேசன் கொடுத்தது என்றுதானே! அதுதான் கிடையாது; இல்லை 'சோ'...ம்ஹூம்... அதுவும் கிடையாது இந்த அரிய பெரிய கருத்தினை தெரிவித்தவர் 2011-ன் தமிழக முதல்வர்களில் ஒர...