முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நீட் ஒழிப்பு: காமராஜர் பிறந்தநாளில் ஏற்க வேண்டிய உறுதி!

மருத்துவக் கல்விக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகளும், அதையொட்டிய மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கான மாணவர் பட்டியலும் இதுவரை இல்லாத வகையில் பெரும் சமூக அநீதி நிகழ்ந்துகொண்டிருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

கல்விக்கான நமது நூறாண்டுப் போராட்ட வெற்றியின் அடித்தளத்தை அசைக்க நடக்கும்முயற்சி இது!

மருத்துவக் கல்விக்கு சமஸ்கிருதம் கட்டாயம் என்று வைத்திருந்த சதியை மாற்றி, அனைவருக்குமான கல்வியாக அதை உருவாக்கியதற்கு பழிவாங்கும் நடவடிக்கை இது!

பல்லாயிரக்கணக்கில் மூடப்பட்ட பள்ளிகளையும் திறந்து, ஒரு பங்கு கூடுதலாக பள்ளிகளைத் திறந்து கல்வி நீரோடையைப் பாய்ச்சிய கல்வி வள்ளல் காமராசரின் செயலுக்கான பார்ப்பனியத்தின் எதிர்வினை இது!

கம்யூனல் ஜி.ஓ ஆணை தொடங்கி, அதை நிறுவுதற்கான போராட்டம், 43 தொடங்கி 69% வரை சட்டபூர்வமாக நிறுவிய வெற்றி, மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் 27% இட ஒதுக்கீட்டை கடும் போராட்டங்களுக்கு மத்தியில் மண்டல் கமிஷன் மூலம் பெற்று மொத்த இட ஒதுக்கீட்டு அளவை 49.5 என்று உயர்த்திய முயற்சி, அதை உயர்கல்வித்துறைக்கும் மெல்லமெல்லக் கொண்டு வந்த ஆட்சி என்று கடந்த 95 ஆண்டு கால சட்டப் போராட்டங்கள், அதன் வெற்றிகளைக் கண்டு பொறுக்காத கும்பலின் பொச்சரிப்பு இது!

இடஒதுக்கீட்டால் தகுதி குறைகிறது, பொதுப் போட்டி இடங்களை அதிகரிக்க வேண்டும், அதில் எங்களை விஞ்ச முடியாது என்று இறுமாப்புடன் சொல்லிக் கொண்டிருந்தனர். அவர்களால் கூட எளிதில் எதிர்கொள்ள முடியாத அளவுக்கு, பொதுப்போட்டியிலும் வெற்றிக் கொடி நாட்டி, பொதுப் போட்டி இடங்கள் முழுவதையும் நிரப்பிக் காட்டிய பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட திறமையாளர்களை எப்படியாவது வெளியேற்றிட வேண்டுமென்று குறுக்குவழியில் நடைபோட்ட கொடுங்கோலர்களின் குற்றப் புத்திக்குக் கிடைத்த வெற்றி இது!

ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கு முன்னால் காமராஜர் நிகழ்த்திய கல்விப் புரட்சியின் அடிநாதத்தை குலைக்கும் முயற்சிக்கு நடுவில் இன்று காமராஜரின் பிறந்தநாள் (15.7.2017)

இந்த நாளன்று காமராஜருக்கு மாலை அணிவிப்பதோடு நம் கடமை முடிந்திடவில்லை. அவர் போட்ட பாதையைத் தகர்க்க நினைக்கும் கும்பலுக்கெதிராக உறுதி பூண வேண்டிய நாள் இது!

இயக்கத்தவர், அரசியல்வாதிகள் மட்டுமல்ல, மாணவர்கள், பெற்றோர்கள் திரளுங்கள்...

நாடெங்கும் காமராஜர் சிலைகள் இருக்கின்றன. உங்கள் குரல்கள் அங்கிருந்து ஒலிக்கட்டும்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owne...

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்...

சரத்குமாருக்கு மட்டுமல்ல... மானமற்ற மடையர்கள் அனைவருக்கும்!

"தமிழ் வளர வேண்டும். தமிழர்கள் வழிபடும் ஆலயங்களில் தமிழில் மந்திரங்கள் ஒலிக்க வேண்டும். தமிழில் அர்ச்சனைகள் நடக்க வேண்டும் என்ற ஆர்வம் தவறில்லை. ஆனாலும், காலகாலமாய் கடைப்பிடிக்கப்பட்டு வந்த மரபுகளையும் மனதில் கொண்டே மாற்றங்களை நிகழ்த்த அமைதி வழியில் முயற்சிக்க வேண்டும். அதற்கு இறை நம்பிக்கை கொண்டோரை, ஆன்மீகப் பெரியோர்களை, அறிஞர் பெருமக்களை கொண்ட ஒரு குழு அமைத்து அதன் வழியில் தீர்க்கமான சுமூக முடிவை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும் என்று ***** கூறியுள்ளார்." (தினமணி 4.3.2008 ) இது தினமணியில் வந்த செய்தி. அதே பேட்டியை சன் டி.வி-யும் ஒளிபரப்பியது. அதில் சொன்னார், "கடவுளுக்கு எந்த மொழியில் அர்ச்சனை செய்வது என்று ஆகமத்தில் இருக்கிறது அதன்படி தான் செய்ய வேண்டும். கடவுள் நம்பிக்கையற்றவர்கள் இப்பிரச்சினையில் உள்நுழைந்து குழப்பக்கூடாது." என்று. இப்பேட்டி யார் கொடுத்தது என்று நினைக்கிறீர்கள்? பா.ஜ.க. 'இலக்கடை' கணேசன் கொடுத்தது என்றுதானே! அதுதான் கிடையாது; இல்லை 'சோ'...ம்ஹூம்... அதுவும் கிடையாது இந்த அரிய பெரிய கருத்தினை தெரிவித்தவர் 2011-ன் தமிழக முதல்வர்களில் ஒர...