முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தங்கலட்சுமி பூரிக் கிழங்கும், புராணிகர்கள் அறிவியல் சிந்தனையும்


ஒரே திசையில பயணம் பண்ணோம்னா உலகத்தைச் சுத்தலாமா? முடியாதா? இந்த மாதிரி ஒரு கேள்வியை ஒரு சாதாரண சின்னப் புள்ளக்கிட்ட கேட்டோம்னா அது படிச்ச அறிவியலை வச்சே அது விளக்கம் சொல்லும். 

ஆனால், தங்கள் புத்தகங்கள்ல 1000 வருசங்களுக்கு முன்ன சொன்னதெல்லாம் இன்றைய அறிவியல் படியும் உண்மைன்னு சொல்றதுக்கு என்ன குழப்பு குழப்புறாரு இந்த மனுசன். பொறுமையா அந்த துல்கர்னைன் பய்ணத்தைப் பத்தி விளக்கம் தரும் தோழர்களைத் தான் பாராட்டணும். 

பின்னே என்ன? ச்சும்மா... நாங்க அணு விஞ்ஞானத்தை ஆயிரக்கணக்கான வருசத்துக்கு முன்னாடியே கண்டு பிடிச்சிட்டமாக்கும். எங்க புராணத்தில தான் அது இருக்குதாக்கும்.. இது இருக்குதாக்கும்னு இந்து மதத்தில பீலா வுடுற ஆளுக மாதிரி, ஒவ்வொரு மதத்துக்காரனும் அள்ளிவுடுறான்யா... 

அந்தந்த காலத்து அறிவு தான் அன்றைய இலக்கியங்கள், புராணங்கள், மதநூல்கள் எல்லாத்திலேயும் இருக்கும். ஆப்பிள் அய்பேட் அப்டேட் பண்றது எப்படின்னு திருக்குறள்ல போய்த் தேடக் கூடாது. இன்னும் சொல்லப்போனா... தொலைக்காட்சி தொடர்களால உறவுகள் பாதிக்கப்படுதுன்னு தீர்வைப் போய் வள்ளுவர்ட்ட கேட்கக்கூடாது; அவர் காலத்தில அந்தப் பிரச்சினை இல்லை. அன்றைக்கும் இன்றைக்கும் பொதுவா இருக்கிற பிரச்சினைகளைத் தான் குறள்ல இருந்து எடுத்துக்கணும். கருத்துகளை மட்டும் சொன்ன திருக்குறளுக்கே இந்த நிலைமைன்னா, கதைகளை அளந்துவுட்ட மதப் புத்தகங்களெல்லாம் வாயே திறக்கப்புடாது..


அறிவாளி படத்தில தங்கவேலு பூரி செய்ய கத்துக் கொடுக்குறப்போ, ’அது தான் எனக்குத் தெரியுமே’, ’அது தான் எனக்குத் தெரியுமே’ன்னு சொல்ற தங்கலட்சுமி..மீ..மீ.. மீ.. மாதிரி எந்த அறிவியல் செய்தின்னாலும், இது தான் எங்க கிட்ட இருக்குதே... இது தான் எங்க கம்புக்கூட்டுக்குள்ள இருக்குதேன்னு புளுகுறதே இந்த மதவாதிகளுக்குப் பொழைப்பாப் போச்சு... இருக்குன்னா அதை முன்னாடியே மக்களுக்குத் தெரிய வைக்க வேண்டியது தானே! இல்லை, இந்தத் தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டம் என்ன, இந்த அறிவியல் போக்கின் அடுத்த கட்டம் என்னன்னு ஒழுங்க அந்தந்த புத்தகங்கள்ல ரெஃபர் பண்ணிச் சொல்லிடணும். என்ன அறிவியல்னு அடிப்படையே புரிஞ்சுக்காம உளறிக் கொட்டிக்கிட்டு சும்மா தொல்லை பண்ணக் கூடாது.

அப்புறம் ஒரு டிஸ்கி: இந்தக் காட்சியில வர்ற முதல் 5 நிமிசத்துக்கு நான் ஜவாப் தாரியில்ல... தண்ணியடிச்சவன் உளறுன மாதிரி தான் இருக்கும். அதையெல்லாம் கடந்து பொறுமையா அதைக் கேட்டாத் தான், ஒண்ணும் இல்லாத ஒரு புளுகலை என்னா விளக்கு விளக்குறார்ன்னு புரிஞ்சுக்க முடியும். (90டிகிரி காட்டும் போது இவர் பாத்திரம் வெளக்குற ஸ்டைலுக்கே கிளாப்ஸ் அள்ளும் போங்க...)


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owne...

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்...

வீரவணக்கம்! வீரவணக்கம்!!

மாநாட்டுத் தீர்மானங்களின் தொடக்கத்தில் களத்தில் நின்று போராடி மடிந்த கொள்கை மறவர்களுக்கு வீரவணக்கம் தெரிவிக்கும் இரங்கல் தீர்மானம் தெரிவிக்கும் வழக்கம் உண்டு. முற்றிலும் எதிர்பார்க்காத வண்ணம், நம் அனைவரையும் துயரக் கடலில் ஆழ்த்தியதோடு நாம் இன்னும் முனைப்பாக செயலாற்றி, நம் உரிமையை வென்றெடுக்க நம்மைத் தூண்டியுள்ள வீரத் தளபதிகளின் மறைவுக்கு வீர வணக்கம் செலுத்த வேண்டிய நிலையில் நாம் உள்ளோம். வீரவணக்கம் செலுத்துவதோடு, தமிழீழத் தாயகத்தில் எழுச்சி ஏற்கும் நாளாக அமைந்துவிட்ட மாவீரர்களின் இறுதி நிகழ்ச்சியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம். (நன்றி: த.அருள்எழிலன்) வீரவணக்கம்; வீரவணக்கம்! வென்றெடுக்கப் போகும் எங்கள் நாட்டின் வீரவித்துக்கள் நீவீரே! மண்கொள்வதில்லை உங்கள் உடல்கள்...எங்கள் மனங்கொண்டு சினம் வளர்த்து ஈழம் படைக்க உரமாகின்றன! வீரவணக்கம்; வீரவணக்கம்! உம்மைக் கொன்றதும் எங்கள் அமைதி முகத்தைச் சிதைத்ததும் ஒன்றே! பேச்சு தேவையில்லை இனியென சிங்களம் சொல்கிறது! இனி அவர்கள் பேசவேகூடாது என்கின்றன உம்முடல்கள்... செய்து முடிப்போம்! பகையைக் கொய்து முடிப்போம்! வீரவணக்கம்; வீரவணக்கம்!