முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அம்முவோ தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறாள்


Kavin Malar கவின் மலர்
ஒரு கவிமனது தற்கொலையை நோக்கி அவ்வபோது பயணித்துச் சென்று பின் மீண்டும் இயல்புக்குத் திரும்புவது வாடிக்கையானது. வாழ்நாளில் ஒருமுறையேனும் தற்கொலை எண்ணம் வராத அளவுக்கு மனிதர்கள் அத்தனை இன்பமான வாழ்க்கை வாழ நம் சமூகத்தில் பணிக்கப்பட்டிருக்கவில்லை. அவரவர் தற்கொலை எண்ணத் தருணங்களை மீண்டும் எண்ணிப்பார்க்க வைக்கிறது கவிதை. பாபுவின் கவிதையில் 1.40 என்றால் எனக்கு 2.40 ஆக இருக்கலாம். உங்களுக்கு 3.40 ஆக இருக்கலாம். ஆனால் ஒரு நாளின் எல்லா நொடியிலும் உலகின் எந்த மூலையிலாவது யாராவது ஒருவர் தற்கொலை எண்ணத்துடன் மடிந்துகொண்டிருக்கலாம் அல்லது முயன்று கொண்டிருக்கலாம். அந்த நொடியை நினைத்துப் பார்த்து அச்சங்கொள்ளவோ அல்லது அப்பாடா என்று ஆசுவாசப்படுத்திக் கொள்ளவோ வைக்கிறது இந்தக்கவிதை. கவிதையில் ‘அம்முவோ தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறாள்’ என்கிற வரிகளே முக்கியமானவை. இந்த வரிகள் இல்லையெனில் இந்தக் கவிதை இல்லை. ஒருவேளை அம்மு தொடர்பு எல்லைக்குள்ளேயே இருந்திருந்தால் இந்தக் கவிதை நமக்குக் கிடைத்திருக்காதோ என்னவோ? ஒவ்வொரு மனமும் துயரங்கள் அழுத்துகையில் ஓர் அம்முவின் ஆறுதல் வார்த்தைகளுக்காகத்தானே துடிக்கிறது? அம்முவுடன் ஒரு வார்த்தை பேசிவிட்டால் தற்கொலை எண்ணம் மறைந்துவிடும். எல்லோருக்காகவும் ஒரு அம்மு இருப்பாள் அல்லது இருப்பான். அந்த அம்மு ஒரு தோழியாகவோ, நண்பனாகவோ, நூலாகவோ, இசையாகவோ கூட இருக்கக்கூடும். ஆனால் தற்கொலைகளைத் தவிர்க்க அம்முக்கள் அவசியம். யாரிடமாவது இரண்டு வார்த்தைகள் பேசிடத் துடிக்கும் மனதுக்கு எல்லோரும் அம்முவாகிவிட முடியாது என்றாலும் நாமும் அம்முவாக முயலலாம்.
- வே.பாபு(Babu Thakkai Babu) வின் ‘மதுக்குவளை மலர்’ கவிதைத் தொகுப்புக்கான விமர்சனத்திலிருந்து....

-----------------------------------------------
இதைப் படித்த பின், விருப்பம் போடுவதற்குக் கூட ஒவ்வொரு பிக்சலாக, மவுசை நகர்த்தியது கை! அவ்வளவு தான் அதற்கு வலுவிருந்தது. மேல் கீழாக, கீழ் மேலாக, இடையிலிருந்து.... என்று மீண்டும் மீண்டும் படிக்கிறேன் - இந்த விமர்சனத்தை! எப்படியாவது அந்தக் கவிதையை இந்த நொடியே படித்துவிட வேண்டும் என்று துடிக்கிறது மனம்!

இணையத்தில் தேடிக் கிடைத்த (http://malaigal.com/?p=572) ஓரு சில வரிகளோடு, ‘அம்முவோ தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறாள்’ என்ற வரிகள் எங்காவது பொருந்துகின்றனவா என்று அலைகின்றன கண்கள்! ப்ச்...

இந்த வரியைத் தேடித் தேடி எண்ணற்ற அம்முக்கள் கிடைக்கிறார்கள் இணையத்தில்! ஒவ்வொன்றிலும் நுட்பமான ஏதோ ஓர் உணர்வு அழுத்துகிறது. http://vinaiooki.blogspot.in/2012/07/blog-post.html, http://dhineshmaya.blogspot.in/2010/12/blog-post_22.html

மீண்டும் இந்த விமர்சனத்திற்கே வந்து படிக்கிறேன். 50 ரூபாய் தான் புத்தகம்.. அதற்கு 21 ரூபாய் அஞ்சல் செலவு சொல்லும் டிஸ்கவரி புக் பேலஸ் இணையதளத்தில் இன்னும் இரண்டு புத்தகங்கள் சேர்த்தால் எவ்வளவு அஞ்சல் செலவு என ’எண்’ணிப் பார்க்கிறேன்! ம்ம்ஹூம்... இன்னும் அவசரம் தணியவில்லை. புத்தகம் வந்துசேர இரண்டு நாட்களாவது ஆகும். இன்றைய பணிகளின் நடுவில் பயணிக்கும் போது எந்தப் புத்தகக் கடையில் இந்தக் கவிதை கிடைக்கும்? என்று மீண்டும் தேடுகிறேன்.

5:40 முதல் 6:40-அய்த் தாண்டியும் இங்கேயே சுற்றிக் கொண்டிருக்கிறேன். இடையில் ஒரு 4:40 இருந்திருக்கிறது. அதில் யாருக்கு என்னவாயிற்றோ? அம்முக்கள் எப்போதும் தொடர்பு எல்லையிலேயே இருக்கட்டும்.

தொடர்பு கிடைக்காத நொடிகளில் அடித்துக் கொள்ளும் அம்முக்களின் பதற்றம் என்னைப் பற்றிக் கொள்கிறது... ஒரு சில நிமிடங்களாவது அம்முவுக்கு வாய்ப்புக் கொடுங்கள்! இல்லையேல், பின்னாளில் அம்மு - தனக்கொரு அம்முவைத் தேடவேண்டியிருக்கும்.

கருத்துகள்

https://periyariam.blogspot.com இவ்வாறு கூறியுள்ளார்…
ஒரு கவிதை விமர்சனத்திற்கான எழுத்தை இப்படிக் "கலங்கடித்து " உருக்க முடியும் என்பதை கவின்மலர் நிரூபித்திருக்கிறார். அம்முகள் உடனான இடைவெளிகள் நீர்க்கிற போது, "உருக்கமான" எல்லாமும் நெருக்கமாகும் என்பது மட்டும் நிச்சயம்!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்...

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owne...