முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

துப்பட்டா போட்டால் தான் ஆதார் அட்டையா?


ஆதார் அடையாள அட்டைக்குப் புகைப்படம் எடுக்கப்போனால் துப்பட்டா போட்டுக் கொண்டு வந்தால் தான் படம் எடுப்போம் என்று திருப்பி அனுப்புகிறார்களாம். துப்பட்டாவிலும் லேசாக இருப்பதைப் போட்டாலும் திருப்பியனுப்புகிறார்களாம். நான் என்ன உடை போட்டால் உனக்கென்ன? பாஸ்போர்ட் சைஸ் போட்டோ தானேன்னு நான் பேண்ட் கூடத் தான் போடாமப் போய்ருந்தேன்னு விவேக் சொல்ற மாதிரி, நான் எப்படி இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய இவர்கள் யார்? 
http://indiatoday.intoday.in/story/aadhaar-card-photo-dupatta-uidai/1/273873.html

அதிகாரம் கையில் இருக்கு என்ற துணிச்சலில் இவனுங்க கொடுக்கும் கொடைச்சல் தாங்க முடியாததாக இருக்கிறது. தாடியை சரச்சிட்டு வா, மீசைக்குப் பெயிண்ட் அடிச்சுட்டு வா-ன்னு எல்லாம் கேட்பானுங்க போல! துப்பட்டா போடாதது தான் ஒரு பெண்ணின் அடையாளமாக இருக்கும் பட்சத்தில், துப்பட்டா போட்டு நீ எடுக்கச் சொல்லும் படம், அவளது அடையாளத்தையே அழிப்பதல்லவா? 


நான் கடவுச் சீட்டுக்காக விண்ணப்பித்தபோது, ‘டி-சர்ட் போட்ட போட்டோ வேண்டாம்,’ ‘கருப்பு போடாதீங்க’ என்று அறிவுரை சொன்னார்கள். எனக்கு ஏகக் கடுப்பாகிவிட்டது. (எப்போதும் கருப்புச் சட்டையுடன் தான் மார்பளவு படம் எடுப்பது என் வழக்கம்.) ”இதற்காக என் விண்ணப்பம் நிராகரிக்கப்படுமேயானால், ஏன் நிராகரித்தார்கள் என்பதை அவர்கள் எழுதிக் கொடுக்காமல் அங்கிருந்து நகர மாட்டேன். கருப்பில் தான் படம் கொடுப்பேன். டி-சர்ட் போட்டால் என்ன? நெக் பனியன் போட்டால் என்ன? இவனுகளுக்காக கோட் சூட் போட்டெல்லாம் போய் நிற்க முடியாது. சாமியாரெல்லாம் பாஸ்போர்ட் வாங்கணும்னா, காவியைக் கழட்டிட்டுவான்னு சொல்வானா? விடுங்க, என்ன பண்றாய்ங்கன்னு பாத்துடுவோம்” என்று சொல்லிவிட்டு, கருப்புடையுடன் தான் விண்ணப்பித்தேன். கடவுச்சீட்டும் பெற்றேன். துப்பட்டா போட்டால் தான் படமெடுப்பேன்னு எவனாவது சொன்னால், கடும் எதிர்ப்பைப் பதிவு செய்யவேண்டும். அப்படியென்றால் பெண்கள் டி-சர்ட், சட்டை போட்டால் படம் எடுக்க மாட்டனா? எவன் அவன்?


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owne...

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்...

சரத்குமாருக்கு மட்டுமல்ல... மானமற்ற மடையர்கள் அனைவருக்கும்!

"தமிழ் வளர வேண்டும். தமிழர்கள் வழிபடும் ஆலயங்களில் தமிழில் மந்திரங்கள் ஒலிக்க வேண்டும். தமிழில் அர்ச்சனைகள் நடக்க வேண்டும் என்ற ஆர்வம் தவறில்லை. ஆனாலும், காலகாலமாய் கடைப்பிடிக்கப்பட்டு வந்த மரபுகளையும் மனதில் கொண்டே மாற்றங்களை நிகழ்த்த அமைதி வழியில் முயற்சிக்க வேண்டும். அதற்கு இறை நம்பிக்கை கொண்டோரை, ஆன்மீகப் பெரியோர்களை, அறிஞர் பெருமக்களை கொண்ட ஒரு குழு அமைத்து அதன் வழியில் தீர்க்கமான சுமூக முடிவை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும் என்று ***** கூறியுள்ளார்." (தினமணி 4.3.2008 ) இது தினமணியில் வந்த செய்தி. அதே பேட்டியை சன் டி.வி-யும் ஒளிபரப்பியது. அதில் சொன்னார், "கடவுளுக்கு எந்த மொழியில் அர்ச்சனை செய்வது என்று ஆகமத்தில் இருக்கிறது அதன்படி தான் செய்ய வேண்டும். கடவுள் நம்பிக்கையற்றவர்கள் இப்பிரச்சினையில் உள்நுழைந்து குழப்பக்கூடாது." என்று. இப்பேட்டி யார் கொடுத்தது என்று நினைக்கிறீர்கள்? பா.ஜ.க. 'இலக்கடை' கணேசன் கொடுத்தது என்றுதானே! அதுதான் கிடையாது; இல்லை 'சோ'...ம்ஹூம்... அதுவும் கிடையாது இந்த அரிய பெரிய கருத்தினை தெரிவித்தவர் 2011-ன் தமிழக முதல்வர்களில் ஒர...