முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மீள் நினைவுகள்!

தினசரி ஒரு பதிவு போட வேண்டும் என்பதற்காக மீள்பதிவு போடும் பழக்கம் எல்லாம் எனக்குக் கிடையாது. இதுவரையிலும் ஒன்றோ இரண்டோ மீள்பதிவாகியிருக்கலாம்..

சரி.. இப்போதெதற்கு அதெல்லாம்? மீள்பதிவு போடப் போகிறாயா என்கிறீர்களா? ஆம். அதே தான்.

ஆனால், மீள் பதிவாக அல்ல. மீள் நினைவாக!

மெல்ல மெல்ல பருவம் மாறத் தொடங்கி மழை பெய்ய ஆரம்பித்திருக்கிறது. எவ்வளவு மழை பெய்தாலும் அதற்குப் பயந்து வெளியில் போகாமலா இருகக் முடிகிறது. போய்த்தான் ஆக வேண்டும். அப்படி போனபோது இரண்டு மீள் நினைவுகள்.

ஒன்று பின்னால் வருபவருக்கு பூமாரி பொழிவது போல் சகதியை அள்ளி வீசி வரும் இரு சக்கர வாகனங்கள் பற்றியது.

கொஞ்சமும் கவலை இல்லாமல் குட்டியூண்டு Mud guard வைத்துக் கொண்டு, பூவாளியில் தெளிப்பதுபோல் சாலையில் ஓடும் மழை நீரை, கழிவு நீரை, சகதியை என்று சகலத்தையும் வாரி இறைக்கிறார்கள் வாகன ஓட்டிகள். Mud guard-க்குக் கீழ் சாணிமேட் மாட்ட வேண்டுமென்று நம்மவர்களுக்கும் தோன்றுவதில்லை; வண்டிகளிலும் அதற்கு வாய்ப்பு இல்லை. இது குறித்து அனைவரும், உள்ளாட்சி, போக்குவரத்து நிர்வாகங்களும் கொஞ்சம் சிந்தித்தால் நல்லது.

இரண்டாவது, விழுப்புண்கள் பற்றியது. காரணமில்லாமலா...?

மழையில் அடித்த சடன் பிரேக்கில் பின் சக்கரம் இழுத்து கீழே விழுந்ததில் எனக்கும் தோழர் பாபுவுக்கும் மீசையில் மண் ஒட்டவில்லை ஆனாலும், இடது முழங்கையில் சிறிய சிராய்ப்புகள்... சிறிது தான். ரொம்பச் சிறிதுதான்..

இருந்தாலும் விழுப்புண்கள் வரிசையில் அண்மையில் மூன்று புதுவரவுகள்..
கடந்தமாதம் அடி-தடி-கடியில் ஒன்று!
நேற்று முன்தினம் கபடியில் ஒன்று!
நேற்று வண்டி சறுக்கியதில் ஒன்று!

இப்படி கணக்குப் போட்டதில் இன்னும் 33 பாக்கியிருக்கிறது.  எதுவா? மேலும் விவரங்களுக்கு இந்தப் பதிவுக்கு செல்லவும்.

எச்சரிக்கை:
இந்தப் பதிவும், நினைவூட்டலும் கூட கண்டுகொள்ளப்படாவிட்டால், மீண்டும் ஒருமுறை மீள் நினைவுப் பதிவு போட வேண்டியிருக்கும். ஒழுங்கு மரியாதையாக ஆளாளுக்கு வந்து அட்டெண்டன்ஸ் போட்டு விடுங்கள். :)

கருத்துகள்

உண்மைத்தமிழன் இவ்வாறு கூறியுள்ளார்…
தம்பி..

காத்து, கருப்பு உன் மேல பட்டிருச்சுன்னு நினைக்கிறேன்..!

கருப்பணசாமியை நினைச்சு கறுப்புக் கயிறை வாங்கிக் கைல கட்டிக்க..!

அப்புறம் இந்த அடிதடி, வம்புதும்பு, வாய்பேச்சு, வாள்வீச்சு இதுக்கெல்லாம் முன்னாடி போய் நிக்காத..! சூதானமா ஒரு ஓரமா போய் உக்காந்து சண்டைன்னா எந்திரிச்சு ஒரே ஓட்டமா திரும்பிப் பார்க்காம வந்திரு..!

சடுகுடுவெல்லாம் விளையாண்டா கைல, கால்ல அடிபடத்தான் ராசா செய்யும்..! நீ ஏன் அதெல்லாம் விளையாடுற..?

கோல்ப் கிளப் போ.. அந்த விளையாட்டைக் கத்துக்க.. திரும்பி வெளில வரும்போது நீ ஜேம்ஸ்பாண்ட் மாதிரி இருப்ப..!
chandru / RVC இவ்வாறு கூறியுள்ளார்…
enna koduma sir ithu...? (ithuvum meel commentae)

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owne...

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்...

வீரவணக்கம்! வீரவணக்கம்!!

மாநாட்டுத் தீர்மானங்களின் தொடக்கத்தில் களத்தில் நின்று போராடி மடிந்த கொள்கை மறவர்களுக்கு வீரவணக்கம் தெரிவிக்கும் இரங்கல் தீர்மானம் தெரிவிக்கும் வழக்கம் உண்டு. முற்றிலும் எதிர்பார்க்காத வண்ணம், நம் அனைவரையும் துயரக் கடலில் ஆழ்த்தியதோடு நாம் இன்னும் முனைப்பாக செயலாற்றி, நம் உரிமையை வென்றெடுக்க நம்மைத் தூண்டியுள்ள வீரத் தளபதிகளின் மறைவுக்கு வீர வணக்கம் செலுத்த வேண்டிய நிலையில் நாம் உள்ளோம். வீரவணக்கம் செலுத்துவதோடு, தமிழீழத் தாயகத்தில் எழுச்சி ஏற்கும் நாளாக அமைந்துவிட்ட மாவீரர்களின் இறுதி நிகழ்ச்சியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம். (நன்றி: த.அருள்எழிலன்) வீரவணக்கம்; வீரவணக்கம்! வென்றெடுக்கப் போகும் எங்கள் நாட்டின் வீரவித்துக்கள் நீவீரே! மண்கொள்வதில்லை உங்கள் உடல்கள்...எங்கள் மனங்கொண்டு சினம் வளர்த்து ஈழம் படைக்க உரமாகின்றன! வீரவணக்கம்; வீரவணக்கம்! உம்மைக் கொன்றதும் எங்கள் அமைதி முகத்தைச் சிதைத்ததும் ஒன்றே! பேச்சு தேவையில்லை இனியென சிங்களம் சொல்கிறது! இனி அவர்கள் பேசவேகூடாது என்கின்றன உம்முடல்கள்... செய்து முடிப்போம்! பகையைக் கொய்து முடிப்போம்! வீரவணக்கம்; வீரவணக்கம்!