முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விடுபடக் கூடாதவை!

* திராவிட தேசங்களில் முதல் முறையாக கர்நாடகாவில் ஆட்சி அமைக்கப்போவதாகப் பெருமை கொள்கிறது பா.ஜ.க.
இப்படித்தான் கணக்குத் திறப்பதாக பெருமை கொண்டது தமிழகத்தில்... பின்பு பின்னங்கால் பிடறியிலடிக்க ஓடிப்போனது.
இப்போது கர்நாடகாவில் பி.ஜெ.பி-யுடம் கூட்டு சேரக்கூடாது என்பதற்காக தனிக் கட்சி கண்ட மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் பதவிப் பித்தின் வெட்கங்கெட்ட அரசியலை மூலதனமாகக் கொண்டு ஆட்சிக் கட்டிலைப் பிடிக்கிறது காவிக்கூட்டம். காலொடிந்த கட்டிட்லுக்கு முட்டு எத்தனை நாள் நீடிக்கும் என்பது தெரியாது. மராட்டியத்துடன் ஒட்டியிருப்பதனாலோ என்னவோ கொஞ்சம் எப்போதும் திராவிடத்தின் சாயலிலிருந்து விலகியே இருக்கும் கர்நாடகா. அதனால் இது பெரிய விசயம் இல்லை என்று நினைத்துக் கொண்டு கொஞ்சம் மோப்பம் பிடிக்க விட்டாலும், சொட்டு ரத்தத்தின் ருசி கண்டாலும் காவிரத்தக் காட்டேரிகளை கட்டுக்குள் கொண்டுவருவது கடினம். அதிலும், ஏற்கனவே அடிப்படைவாதிகள் நிறைந்த அம்மாநிலத்தில் மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைய வேண்டியது அவசர அவசியமாகும்.

* கலைஞர் தொலைக்காட்சி பெரும்பாலும் பிற தொலைக்காட்சிகளின் சாயலைக் கொண்டே நிகழ்ச்சிகளை வழங்கிக் கொண்டிருந்தாலும், நேற்று தொடங்கப்பட்ட "கானா குயில் பாட்டு" நிகழ்ச்சியைக் காணும் போது, கிடைத்த மகிழ்ச்சிக்கும் அளவில்லை. அக்கிரஹாரத்துக் கூட்டத்தையே தூக்கிப் பிடித்துக் கொண்டும், கர்நாடக இசையையே பெரிதெனக் காட்டிக் கொண்டுமிருந்த நிகழ்ச்சிகளுக்கு மத்தியில், விளிம்புநிலை மக்களின் கலையை அரங்கேற்றி ஊக்குவித்த இந்நிகழ்ச்சிக்கு அனைத்துத் தமிழர்களின் சார்பில் நன்றிகள். இன்னும் இதுபோன்ற எம்மக்களின் கலைகள் அரங்கேற கலைஞர் தொலைக்காட்சி களம் அமைக்க வேண்டும்.

* முதல் கம்யூனிசப் புரட்சி நிகழ்ந்து, சோசலிச அரசு அமைந்த வரலாற்று நிகழ்வின் 90-ஆம் ஆண்டு வெற்றிவிழா நவம்பர் 7-இல் கொண்டாடப்பட்டது. வெற்றிகரமாக இன்னும் இருந்திருக்க வேண்டிய சோவியத் குலைந்ததற்கான காரணங்களைக் கண்டுகொண்டு, கியூபாவின் வெற்றிக்கான காரணத்தையும் புரிந்துகொண்டு ஆங்காங்கே சோசலிசப் புரட்சிகள் வெடிக்க வேண்டும் என்ற நம் பேரவாவை நாம் வெளிப்படுத்துகிறோம்.

கிசுகிசு: பின்னிரவின் சொந்தக்காரரும், பிரபல செல்பேசி நிறுவன அதிபருமான வலையுலக சஞ்சய் ராமசாமிக்கு, சாலையில் ஏற்பட்ட விபத்தில் தலையில் அடிபட்டு காயம் அடைந்திருப்பதால் தான் கஜினிக்கு நிகர் என்று சொல்லிக் கொண்டு திரிகிறாராம். பின்னிரவில் மதுக் கோப்பையோடே எந்நேரமும் காட்சியளித்தால் விவகாரம் இப்படித்தான்ப்பூ!

நட்சத்திரப் புகைப்படக் குறிப்பு:
காரைக்குடி பயணிகள் விடுதியில் தங்கியிருந்த தந்தை பெரியாரை சந்திக்க வந்த தோழர்கள் புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பினர்.
வழக்கம் போல் ஒவ்வொரு புகைப்படத்துக்கும் இவ்வளவு என்று பெரியாருக்கு பனம் கொடுத்துவிட்டு படம் எடுத்துக் கொண்டார்கள் தோழர்கள். இயக்கப் பணியில் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்த என்.ஆர்.சாமியின் முத்த மகன் சாமி.சமதர்மம், பெரியாருக்குச் சேரவேண்டிய தொகைகளை உரியமுறையில் வாங்கிக் கொடுத்துக் கொண்டிருந்தார். எல்லோரும் படம் எடுத்து முடித்துவிட, சமதர்மத்தை நோக்கிய பெரியார் "என்ன எல்லாரும் எடுத்துக்கிட்டாங்க, நீ எடுத்துக்கலையா? வா!' என்றழைத்து தோளில் கைவைத்து எடுத்த புகைப்படம் தான் அது!
"பணம் வாங்காமல் பெரியார் போஸ் கொடுத்த ப்டம் என்பதோடு, பிறர் தோளில் கைபோட்டபடி பெரியார் இருக்கும் படம் மிகக் குறைவே. அய்யா வீரமணி, எம்.ஜி.ஆர்., ஆகியோர் வரிசையில் தன் தோளில் பெரியார் கைபோட்ட படம் இது" என்கிறார் என் தந்தை சாமி.சமதர்மம்.

"அப்பாவுக்குப் பெருமை தாங்கலை!"

கருத்துகள்

கோவி.கண்ணன் இவ்வாறு கூறியுள்ளார்…
//எம்.ஜி.ஆர்., ஆகியோர் வரிசையில் தன் தோளில் பெரியார் கைபோட்ட படம் இது" என்கிறார் என் தந்தை சாமி.சமதர்மம்.


"அப்பாவுக்குப் பெருமை தாங்கலை!".//

புகைப்பட புதிரை விடுவித்துவிட்டீர்களா ?
:)

மகன் தந்தைக்காற்றும் உதவி...!
:)
kiddy ppl இவ்வாறு கூறியுள்ளார்…
அப்பாடா ! நீங்க இல்ல

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owne...

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்...

சரத்குமாருக்கு மட்டுமல்ல... மானமற்ற மடையர்கள் அனைவருக்கும்!

"தமிழ் வளர வேண்டும். தமிழர்கள் வழிபடும் ஆலயங்களில் தமிழில் மந்திரங்கள் ஒலிக்க வேண்டும். தமிழில் அர்ச்சனைகள் நடக்க வேண்டும் என்ற ஆர்வம் தவறில்லை. ஆனாலும், காலகாலமாய் கடைப்பிடிக்கப்பட்டு வந்த மரபுகளையும் மனதில் கொண்டே மாற்றங்களை நிகழ்த்த அமைதி வழியில் முயற்சிக்க வேண்டும். அதற்கு இறை நம்பிக்கை கொண்டோரை, ஆன்மீகப் பெரியோர்களை, அறிஞர் பெருமக்களை கொண்ட ஒரு குழு அமைத்து அதன் வழியில் தீர்க்கமான சுமூக முடிவை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும் என்று ***** கூறியுள்ளார்." (தினமணி 4.3.2008 ) இது தினமணியில் வந்த செய்தி. அதே பேட்டியை சன் டி.வி-யும் ஒளிபரப்பியது. அதில் சொன்னார், "கடவுளுக்கு எந்த மொழியில் அர்ச்சனை செய்வது என்று ஆகமத்தில் இருக்கிறது அதன்படி தான் செய்ய வேண்டும். கடவுள் நம்பிக்கையற்றவர்கள் இப்பிரச்சினையில் உள்நுழைந்து குழப்பக்கூடாது." என்று. இப்பேட்டி யார் கொடுத்தது என்று நினைக்கிறீர்கள்? பா.ஜ.க. 'இலக்கடை' கணேசன் கொடுத்தது என்றுதானே! அதுதான் கிடையாது; இல்லை 'சோ'...ம்ஹூம்... அதுவும் கிடையாது இந்த அரிய பெரிய கருத்தினை தெரிவித்தவர் 2011-ன் தமிழக முதல்வர்களில் ஒர...