முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

துப்பட்டா போட்டால் தான் ஆதார் அட்டையா?

ஆதார் அடையாள அட்டைக்குப் புகைப்படம் எடுக்கப்போனால் துப்பட்டா போட்டுக் கொண்டு வந்தால் தான் படம் எடுப்போம் என்று திருப்பி அனுப்புகிறார்களாம். துப்பட்டாவிலும் லேசாக இருப்பதைப் போட்டாலும் திருப்பியனுப்புகிறார்களாம். நான் என்ன உடை போட்டால் உனக்கென்ன? பாஸ்போர்ட் சைஸ் போட்டோ தானேன்னு நான் பேண்ட் கூடத் தான் போடாமப் போய்ருந்தேன்னு விவேக் சொல்ற மாதிரி, நான் எப்படி இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய இவர்கள் யார்?  http://indiatoday.intoday.in/story/aadhaar-card-photo-dupatta-uidai/1/273873.html அதிகாரம் கையில் இருக்கு என்ற துணிச்சலில் இவனுங்க கொடுக்கும் கொடைச்சல் தாங்க முடியாததாக இருக்கிறது. தாடியை சரச்சிட்டு வா, மீசைக்குப் பெயிண்ட் அடிச்சுட்டு வா-ன்னு எல்லாம் கேட்பானுங்க போல! துப்பட்டா போடாதது தான் ஒரு பெண்ணின் அடையாளமாக இருக்கும் பட்சத்தில், துப்பட்டா போட்டு நீ எடுக்கச் சொல்லும் படம், அவளது அடையாளத்தையே அழிப்பதல்லவா?  நான் கடவுச் சீட்டுக்காக விண்ணப்பித்தபோது, ‘டி-சர்ட் போட்ட போட்டோ வேண்டாம்,’ ‘கருப்பு போடாதீங்க’ என்று அறிவுரை சொன்னார்கள். எனக்கு ஏகக் கடுப்பாகிவிட்டத...

அம்முவோ தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறாள்

Kavin Malar கவின் மலர் ஒரு கவிமனது தற்கொலையை நோக்கி அவ்வபோது பயணித்துச் சென்று பின் மீண்டும் இயல்புக்குத் திரும்புவது வாடிக்கையானது. வாழ்நாளில் ஒருமுறையேனும் தற்கொலை எண்ணம் வராத அளவுக்கு மனிதர்கள் அத்தனை இன்பமான வாழ்க்கை வாழ நம் சமூகத்தில் பணிக்கப்பட்டிருக்கவில்லை. அவரவர் தற்கொலை எண்ணத் தருணங்களை மீண்டும் எண்ணிப்பார்க்க வைக்கிறது கவிதை. பாபுவின் கவிதையில் 1.40 என்றால் எனக்கு 2.40 ஆக இருக்கலாம். உங்களுக்கு 3.40 ஆக இருக்கலாம். ஆனால் ஒரு நாளின் எல்லா நொடியிலும் உலகின் எந்த மூலையிலாவது யாராவது ஒருவர் தற்கொலை எண்ணத்துடன் மடிந்துகொண்டிருக்கலாம் அல்லது முயன்று கொண்டிருக்கலாம். அந்த நொடியை நினைத்துப் பார்த்து அச்சங்கொள்ளவோ அல்லது அப்பாடா என்று ஆசுவாசப்படுத்திக் கொள்ளவோ வைக்கிறது இந்தக்கவிதை. கவிதையில் ‘அம்முவோ தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறாள்’ என்கிற வரிகளே முக்கியமானவை. இந்த வரிகள் இல்லையெனில் இந்தக் கவிதை இல்லை. ஒருவேளை அம்மு தொடர்பு எல்லைக்குள்ளேயே இருந்திருந்தால் இந்தக் கவிதை நமக்குக் கிடைத்திருக்காதோ என்னவோ? ஒவ்வொரு மனமும் துயரங்கள் அழுத்துகையில் ஓர் அம்முவின் ஆறுதல் வார்த்தைகளுக்க...

அட சின்னச் சின்ன அன்பில் தானே...

தொப்பிகளின் ரசிகன் நான்!  காரைக்குடியில் இருந்தவரை காலை அணியும் தொப்பியை இரவு வீட்டுக்குத் திரும்பும் வரை கழற்றும் வழக்கம் இல்லை. விதம்விதமான தொப்பிகளின் மேல் எப்போதும் ஈர்ப்பு உண்டு. வழக்கமான முன் பக்கம் மட்டும் நிழல் தரும் தொப்பி, கிரிக்கெட் அம்பயர்கள் & சில வீரர்கள் பயன்படுத்தும் வட்ட வடிவ திடமாக நிற்கும் பட்டியுடைய நிழல் தரும் தொப்பி, இன்றைக்கு சேரன் உள்ளிட்ட சில இயக்குநர்கள் பயன்படுத்துவதைப்போல வட்ட வடிவமாக, ஆனால் மடங்கியிருக்கும் தொப்பி (எம்ஜிஆர் தொப்பியின் நவீன வடிவம்) என்று எல்லா வகையிலும் பல வண்ணங்களில் குறைந்தது 10 தொப்பிகளாவது வீட்டில் இருக்கும்.  குஷி படம் வந்த பின் வழக்கத்தை விட நீளமான வளைந்த முன்பகுதியுடனான தொப்பிகள் வரத் தொடங்கின. கார்த்திக் ஸ்டைல் தொப்பி அய்யாவுக்குப் பெரிதும் பிடிக்காவிட்டாலும், அதன் மேல் ஓர் ஆசை எப்போதும் உண்டு எனக்கு! இவை தவிர முன் பக்கம் கொஞ்சம் காற்றோட்டம் வரும் வசதியுள்ள சிங்கப்பூர் தொப்பி (அது என்ன அப்படி பெயர் என்றெல்லாம் கேட்கக் கூடாது; அப்போது அப்படி ஒரு தொப்பி சிங்கப்பூரிலிருந்து வந்தது.  அதனால் அந்தப்...