முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மருத்துவர் வாழ்க! மருத்துவம் ஒழிக!

இந்நேரம் செத்துச் சுண்ணாம்பு ஆகியிருக்க வேண்டிய நான் இன்று எல்லா சுகங்களுடன் சென்னையில் கணினியின் முன் உட்கார்ந்து உங்களோடு மருத்துவத்தை விமர்சிக்கக் கூட காரணமான அந்த மருத்துவரின் பிறந்தநாளில் அவரை நன்றி விசுவாசத்துடன் நினைவு கூர்ந்து தான் கூறுகிறேன், நாம் மருத்துவத்தால் அழிந்தோம். 
உயிரைக் கொல்வோரை காவு கொடுப்போரை 
மண்ணோடு பெயர்த்த கடப்பாரை! 
வானம் உள்ளவரை வையம் உள்ளவரை 
யார் இங்கு மறப்பார் மருத்துவரை!
----------------------------------------------------------------

இப்படி திடீரென்று சம்மந்தமே இல்லாமல் எனது Status Message-அய் பார்த்த நண்பர்கள் கொஞ்சம் பதறித்தான் போனார்கள்.. என்னாச்சு என்று!
காரணம் முதல் வரியைப் படித்ததோடு பேசியவர்கள், Chat-இல் கேட்டவர்கள் அனைவரும் என் உடல் நிலையைப் பற்றியும், முழுவதும் பொறுமையாக படித்தவர்கள் என் குழப்பம் குறித்தும் கேட்டார்கள். அனைவரின் அக்கறைக்கும் நன்றியுடையேன்.

இப்படி திடீரென்று சம்மந்தமே இல்லாமல் நான்  Status Message போடக் காரணமும் இல்லாமல் இல்லை. எனது நண்பர் சேனா.பானா-வின்  Status Message-க்கு நான் போட்ட  Status Message எவ்வளவோ தேவலாம் என்று தோன்றுகிறது, அது என்ன என்று கேட்கிறீர்களா? நீங்களே படியுங்கள்!

மதுரையை அடுத்த கிராமத்தில் விவசாயியாக இருந்திருக்கவேண்டிய நான் இன்று எல்லா சுகங்களுடன் அமெரிக்காவில் கணினியின் முன் உட்கார்ந்து உங்களோடு திராவிடத்தை விமர்சிக்க கூட காரணமான அந்த ஈரோட்டு மாமனிதனில் பிறந்தநாளில் அவரை நன்றி விசுவாசத்துடன் நினைவு கூர்ந்து தான் கூறுகிறேன், நாம் திராவிடத்தால் வீழ்ந்தோம். 
மானம் கெடுப்பாரை அறிவைத் தடுப்பாரை 
மண்ணோடு பெயர்த்த கடப்பாரை! 
வானம் உள்ளவரை வையம் உள்ளவரை 
யார் இங்கு மறப்பார் பெரியாரை! 
---------------------------------------------------
வேறென்ன சொல்லட்டும்?



கருத்துகள்

பழ .பிரபு இவ்வாறு கூறியுள்ளார்…
முதலில் உங்கள் MESSAGE பார்த்துகுழம்பி போனேன் அருமையான பதிலடி ''எங்க அப்பன் நல்லவன் ஆனா அவன் வளர்ப்பு சரியில்லங்கற மாதிரியில்ல இருக்கு.....''

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owne...

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்...

சரத்குமாருக்கு மட்டுமல்ல... மானமற்ற மடையர்கள் அனைவருக்கும்!

"தமிழ் வளர வேண்டும். தமிழர்கள் வழிபடும் ஆலயங்களில் தமிழில் மந்திரங்கள் ஒலிக்க வேண்டும். தமிழில் அர்ச்சனைகள் நடக்க வேண்டும் என்ற ஆர்வம் தவறில்லை. ஆனாலும், காலகாலமாய் கடைப்பிடிக்கப்பட்டு வந்த மரபுகளையும் மனதில் கொண்டே மாற்றங்களை நிகழ்த்த அமைதி வழியில் முயற்சிக்க வேண்டும். அதற்கு இறை நம்பிக்கை கொண்டோரை, ஆன்மீகப் பெரியோர்களை, அறிஞர் பெருமக்களை கொண்ட ஒரு குழு அமைத்து அதன் வழியில் தீர்க்கமான சுமூக முடிவை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும் என்று ***** கூறியுள்ளார்." (தினமணி 4.3.2008 ) இது தினமணியில் வந்த செய்தி. அதே பேட்டியை சன் டி.வி-யும் ஒளிபரப்பியது. அதில் சொன்னார், "கடவுளுக்கு எந்த மொழியில் அர்ச்சனை செய்வது என்று ஆகமத்தில் இருக்கிறது அதன்படி தான் செய்ய வேண்டும். கடவுள் நம்பிக்கையற்றவர்கள் இப்பிரச்சினையில் உள்நுழைந்து குழப்பக்கூடாது." என்று. இப்பேட்டி யார் கொடுத்தது என்று நினைக்கிறீர்கள்? பா.ஜ.க. 'இலக்கடை' கணேசன் கொடுத்தது என்றுதானே! அதுதான் கிடையாது; இல்லை 'சோ'...ம்ஹூம்... அதுவும் கிடையாது இந்த அரிய பெரிய கருத்தினை தெரிவித்தவர் 2011-ன் தமிழக முதல்வர்களில் ஒர...