முதலாவதாக, 2005-இல் இளவஞ்சி எழுதிய பதிவுக்கு இன்று நான் எழுதியுள்ள பின்னூட்டம்:
மீண்டும் தினமலர்! - ஒரு நெருடல்
'வாசகர் பகுதி' என்பது தினமலரைப் பொறுத்த அளவில் அதன் அரிப்புகளைத் தீர்த்துக் கொள்ளும் பகுதியாகும். ஆகையால் இதை எதோ வாசகர் கருத்து என்று எடுத்துக் கொள்ள வேண்டாம். 'தினமலத்தின்' கருத்து தான் அது.! இன்றைகு அடித்துக் கொண்டும், ஊத்திக் கொடுத்து ஆள் பிடித்துக் கொண்டும்இருக்கும் காலைக்கதிரிலும், தினமலரிலும், ஒரே கடிதங்கள் வெவ்வேறு பெயர்களில், வெவ்வேறு பதிப்புகளில் பயன்படுத்தப்பட்டிருப்பது வெளிப்பட்டதே நினைவிருக்கிறதா?
சரி, அது கிடக்கட்டும்...
அடப் பாவிகளா? இப்பத்தான் பார்க்கிறேன்... இது 2005-ல எழுதின பதிவா? சரி...சரி... விசயத்துக்கு வருவோம்.
//சலூன் கடை என்பதை சவரக்கடை என்று மாற்றினாலும், உள்ளே முடிவெட்டுதலும் முகமழித்தலும்தான் நடைபெறும்.//
சரிங்க வெண்ணைகளா... சவரக்கடைங்கிறதை சலூன்-னு சொன்னாலும், அங்க முடிவெட்டுதலும், முகமழித்தலும் தானடா நடக்கப்போகிறது. விளங்காதவங்களா?
எடுத்துக்காட்டுக்கு அவர்கள் காட்டிய தொழில், முடிதிருத்தும் தொழில் என்று நல்ல எண்ணத்தோடு எடுத்துக் கொள்வோம்.ஆனாலும் ஏற்கனவே ஒருமுறை 'தினத்தந்தி' பேப்பரைக் காட்டி, இது சவரம் செய்த நுரையைத் தேய்க்கத்தான் லாயக்கு என்ற பொருளில் விளம்பரம் எடுத்து, வாங்கிக் கட்டிக்கொண்டதும், இன்னுமொருமுறை முடிதிருத்துவோர் குறித்து எழுதி, வாங்கிக்கட்டிக்கொண்டதும் நினைவுக்கு வந்துவிடுகிறது.

பின்னூட்டப் பின்குறிப்பு:
பிற பதிவர்களின் பதிவுகளுக்கு இடும் பின்னூட்டங்களில் சில, நீண்டும், தனிக் கவனத்திற்கு உரியதுமாக அமைந்துவிடுகின்றன. மொக்கை, வாழ்த்து, கடமைக்காக போடுபவை போக எஞ்சிய கருத்தான பின்னூட்டங்கள் உரிய கவனம் பெறாமல் போகக்கூடும். அல்லது அவை பிரசுரிக்கப்படாமல் விடப்படவும் கூடும். எனவே, எமது அத்தகைய பின்னுட்டங்களை மட்டும் புதிய பதிவாகவே எம் வலைப்பூவில் சேமிக்கலாம் என்றிருக்கிறேன். இதற்கென 'feedback' வாய்ப்பு ஒன்றிருப்பதாக படித்த நினைவு. அது பற்றித் தெரிந்தவர்கள் எனக்குப் பின்னூட்டமிட்டு அறிமுகப்படுத்துங்களேன்.
கருத்துகள்
விளக்கமான "ஆதாரப்பூர்வமான" உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி! :)
பஉபொகூகொ முடிந்த உடன், தீக்குளித்தல் எனும் சடங்கும் நடக்கும்.
அவசரமாக தெரியவேன்டுமென்றால் போலியாரை கேளுங்கள்.
செல்லடியான்
ஆமா! அது எந்த இனத்தவரிடையே இருக்கும் பழக்கம்? சத்தியமா எனக்குத் தெரியாது சொல்லுங்களேன்.
ஒரு பத்திரிகையின் வாசகர் என்பவர் தனது கருத்தை மற்றவர்களுக்குத் தெரிவிக்க பத்திரிகையின் உதவியை நாடுகிறார். அதை வெளியிடுவது அந்த பத்திரிகையின் தர்மம். ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட பத்திரிகையின் வாசகராக இருக்கலாம். ஒரே கருத்தை ஒன்றுக்கும் மேற்பட்ட பத்திரிகைகளுக்கு அவர் அனுப்பி இருக்கலாம். உடனே அதை பத்திரிகையின் இட்டுக்கட்டிய கடிதம் என்று முத்திரை குத்துவது சரியாகுமா? உங்களுக்கு குறிப்பிட்ட பத்திரிகை பிடிக்கவில்øயென்றால் அதன் வாசகர்களை இப்படியா கொச்சைப்படுத்துவது
சிலக் கூலிகள் பொய்மலரை ஆதரித்து மற்றவர்கள் மேல் பழி போட்டு எழுதுவது கூலிக்காக இருக்குமோ என்றுதான் தோன்றுகிறது.
எப்போதுமே ஒரு குலத்துக் கொரு நீதி தானா?