முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

"எனக்குப் பரிசு வேண்டும்" - கலைஞர் வேண்டுகோள்

நேற்று நான் விரும்பியபடி, கலைஞரின் சட்டமன்றப் பொன்விழா என்னும் எழில்வாய்ந்த விழாவுக்குப் போயிருந்தேன். தமிழ்நாட்டுக்கு இந்தியாவைக் கொண்டுவந்ததுபோல், வடபுலத்துத் தலைவர்களெல்லாம், தந்தை பெரியாரின், அறிஞர் அண்ணாவின் வழித்தோறலாக வந்திருக்கும் கலைஞரின் அரிய பணிகளையும் சாதனைகளையும் பாராட்டி மகிழ்ந்தார்கள். "நாங்கள் வழக்காமாக பாராட்டுபவர்கள, ஆதலால், எங்கள் தங்கத் தலைவரை இன்று மற்ற வடபுலத்துத் தலலவர்கள் பாராட்டுவதை பெரு மகிழ்வோடு கேட்கத்தான் இங்கே வந்திருக்கிறோம்" என்றார் தமிழர் தலைவர் அய்யா வீரமணி அவர்கள்.


விழாத் துளிகள்:
* மேடையில் முதல் தலைவராக தாய் வீட்டிலிருந்து வந்திருந்தார் அய்யா வீரமணி அவர்கள். பின்னர் ஒவ்வொரு தலைவர்களாக வந்தார்கள்.
* சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கல் உடல் நலக் கோளாறு காரணமாக வர இயலாமல் வாழ்த்துக் கடிதம் அனுப்பி இருந்தார்கள்.

* ராம் விலாஸ் பாஸ்வான் கூறும்போது, "முதல் முறை திரு.வீரமணி அவர்களுடன் சென்றுதான் நான் கலைஞரைப் பார்த்தேன்" என்று பழைய நிகழ்வை நினனவு கூர்ந்தார்.
* மத்திய அமைச்சர் லாலு பிரசாத் எழுந்து பேச வரும்போது அரங்கம் அதிர கைதட்டல், வரவேற்பு! * வழக்கமாக வரும் வடபுலத்துத் தலைவர்கள் 'நன்ரி', 'வன்கம்' என்று தமிழில் பேசி கைதட்டு பெறுவார்கள். ஆனால் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ் கரத், "எனக்குத் தமிழ் பேசத் தெரியும். ஆனால் கலைஞர் முன்னிலையில் தமிழ் பேச பயமாக இருக்கிறது, அதனால் நான் இங்கிலீஷில் பேசுகிறேன்" என்று சொல்லிவிட்டு, பேசத் தொடங்கினார். (தமிழ் பேசக்காரணம், அவரின் பள்ளி, கல்லூரிப் படிப்பு 1957-1967 சென்னையில் அமைந்தது.)

* விழாவில், தயாநிதிமாறன் கலந்துகொள்லவில்லை என்பது பழைய செய்தி. அதேநேரம் மு.க.அழகிரி, அரங்கத்துக்குள் நுழைந்து வி.வி.அய்.பி. இடத்தில் அமர்ந்தபோது அத்தனை பத்திரிகைக் கண்களும் அதைநோக்கித் திரும்பி சிமிட்டின.

*விழாவையொட்டி சென்னையெங்கும் தோரணங்களும், கொடிகளும், பேச்சு, பாடல் ஒளிபரப்புகளும் என்று கொண்டாடிவிட்டார்கள். அதேசமயம் தமிழகமெங்கும் இருந்து திரண்டிருந்த தொண்டர்களில் தீவுத்திடலில் இருந்ததைப் போல மூன்றூ பங்குப்பேர் வெளியில் திரண்டிருந்தார்கள். இன்னும் அந்தப் பகுதிக்குள் நுழைய முடியாமலும்கூட பல ஊரிலிருந்து வந்த தொண்டர்கல் திண்டாடினார்கள்.
"எனக்குப் பரிசு வேண்டும்" - கலைஞர்
"நான் மறுத்தும் கூட எனக்கு விழா ஏற்பாடு செய்தார்கள். என்னை வாழ்த்துவதற்கு பல்வேறு பணிகளுக்கிடையிலும், உ.பி. தோல்விக்கிடையிலும் கூட வந்திருக்கிறீர்கள்! (சோனியாவும், மன்மோகன் சிங்-கும்)

ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி, எனக்காக நான் கேட்கும் பரிசுகள் சில உண்டு" என்று பட்டியலிட்டார்.

1. காவிரிப் பிரச்சினை

2. மகளிர் இட ஒதுக்கீடு

3. சிறுபான்மையோர் இடஒதுக்கீடு

4. 27% இடஒதுக்கீடு

கலைஞருக்கு அந்தப் பரிசுகள் கிடைக்க வாழ்த்தும் நெஞ்சங்களோடு நாமும் இணைகிறோம்.
வாழ்க கலைஞர்!
வாழ்க கலைஞர்!!
தொடர்க அவர் பணி!!!
(வலைப்பூக்களை நுகர்ந்து நாட்களாகிப் போனது. பெரியார் படத்தின் வெளியீடு மற்றும் விளம்பரப் பணிகளில் நானும் பங்கேற்ற காரணத்தால் கடந்த 10 தினக்களுக்கும் மேலாக வேறு பணிகளில் ஈடுபடமுடியாத அளவுக்கு என் சூழல் இருந்தது. விட்டுப்போன பதிவுகள் தொடர்ந்து வரும். )

கருத்துகள்

அருண்மொழி இவ்வாறு கூறியுள்ளார்…
சிங்கையில் இன்றுதான் பெரியார் பற்றிய தொலைக்காட்சி தொகுப்பு sun tvயில் ஒளிபரப்பானது. நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்...

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owne...