முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

இந்து மதமும் இந்துத்துவ அரசியலும் ஒன்றா?

"இந்து மதத்த பின்பற்றுவதும்.. இந்துத்வ அரசியல பின்பற்றுவதும் ஒன்னா...?????!!! அப்புடினு ஒரு கேள்விய எழுப்புராங்களே.... ப்ளீஸ் கொஞ்சம் விளக்குங்க.." என்று நண்பர் ஒருவருக்காக தோழர் ரத்ன. செந்தில் குமார் கேட்டிருந்தார். அந்த பதிவில் என் உடனடி இடுகைகள் (குறிப்புகள்) இவை. //1. இந்து மதத்தைப் பின்பற்றுவோரை எளிதாக இந்துத்துவத்திற்குள் கொண்டுவந்துவிடலாம் என்பது தான் ஆர்.எஸ்.எஸ். வகையறாக்களின் கருத்து. மெதுவாக அப்படித்தான் இதுவரை அவர்களது வெற்றியும் வந்திருக்கிறது. ஆனால், தாங்கள் இந்துக்கள் என்று கருதிக் கொண்டிருக்கிற மக்களிடம் இரண்டும் வேறு வேறானவை என்று நாம் எடுத்துச் சொல்ல வேண்டும். அப்படிச் சொல்வதனால், இந்துமதம் என்பது சரியானது என்பது நம் கருத்தல்ல என்பதையும் விளங்க வைக்க வேண்டும். 2. பொதுவாக தங்களை இந்துக்கள் என்று கருதிக் கொள்பவர்களிடம், இந்துமதத்தின் கூறுகளைப் பார்க்க முடியாது. அவர்களிடம் இருப்பது பழக்க வழியின் அடிப்படையிலான வழிபாட்டு முறை. இந்துமதத்தின் வழிகாட்டு நூல்கள் அல்லது அதன் விதிமுறைகளை பெரும்பாலும் இவர்கள் பின்பற்றுவதில்லை. தங்கள் குல வழக்கங்களையே இவர்கள் பின்ப...

பிறகு பேசிக் கொள்ளலாம் #திக - திமுக கருத்து வேறுபாடு

சொல்வதற்கு ஏராளம் பதில்கள் இருக்கின்றன; கேட்பதற்கு ஏராளம் கேள்விகள் இருக்கின்றன. தீர்க்கப்படவேண்டிய சந்தேகங்கள் இருக்கின்றன... இரு தரப்பிலும்! அவையெல்லாம் சாவகாசமாக சந்தோசமாக இருக்கும்போது பேசிக் கொள்ள வேண்டியவை. அப்போது அவை விட்டுக் கொடுத்தல்களாகவும், புரிதல்களாகவும் மாறிப் போகும். ஒரு பிரச்சினையின் மீதான வெவ்வேறு நிலைப்பாட்டை வைத்துக்கொண்டு, மீண்டும் மீண்டும் அதையே கிளறிக் கொண்டிருந்தால், வார்த்தை வளர்ப்பு காரணமாக புரிதல்கள் கூட மாறிப் போகும் அபாயம் இருக்கிறது. தமிழகத்தில் ஏராளமான அவசரமான பிரச்சினைகள் சூழ்ந்திருக்கின்றன. அதைவிட்டுவிட்டு, ஒன்றுமில்லாத பிரச்சினையை சொறிந்துகொண்டு நமக்குள் நாமே முரண்பட்டுக் கொண்டிருத்தல் நலமன்று. திமுக தோழர்களுக்கு புரிதலுக்காக மீண்டும் ஒன்றைச் சொல்லுகிறேன். அதிமுக அணிகளுக்குள் எந்த அணி இருக்க வேண்டும் என்ற எங்கள் பார்வை வேறு. திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரிப்பதென்பது வேறு. இதில் நமக்குள் இருக்கும் கருத்து வேறுபாடு தவிர, பிற பிரச்சினைகளில் ஒரே திசையில் தான் நாம் பயணிக்கிறோம். அது தொடர வேண்டும் என்றும் விரும்புகிறோம். வாரிசு அரசியல், 2ஜி...

யாரிடமும் நல்ல பெயரெடுக்க அவசியமில்லை

சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் நேற்று நடந்து கொண்ட விதம் பற்றி நமக்கு மாற்றுக் கருத்தும், விமர்சனமும் உண்டு. அதை சொல்ல வேண்டிய முறையில் சொல்ல வேண்டிய கடமை கொண்ட திராவிடர் கழகத் தலைவர் நேற்று தன் கருத்தை வெளியிட்டிருக்கிறார். இது யாருக்கு உவப்பானது, யாருக்கு வெறுப்பானது என்பதையெல்லாம் யோசித்து கருத்தை வெளியிட வேண்டிய அவசியம் திராவிடர் கழகத்துக்கு ஒரு போதும் இல்லை. அதற்கு மறுப்பு தெரிவிக்க விரும்புவோர், மாற்றுக் கருத்து கொண்டோர் தாராளமாக தெரிவிப்பதை யாரும் எதிர்க்க முடியாது. தரம்தாழ்ந்த விமர்சனங்களும் வரும் என்பது நமக்குப் புதிதல்ல. அரசியல் தளத்தில் இயங்கும் இயங்கங்களுள் திராவிட இயக்கத்தின் கொள்கைகளை பெரிதும் செயல்படுத்தக் கூடிய இயக்கமாக திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பார்ப்பதன் காரணமாகத் தான், அது வலுவோடிருக்க வேண்டும் என்றும், ஆட்சியில் அமர்ந்து திராவிட இயக்கக் கொள்கைகளை சட்டங்களாகவும், திட்டங்களாகவும் வடித்தெடுக்க வேண்டும் என்றும் நாம் விரும்புகிறோம். அதனால் ஆதரிக்கிறோம். பா.ஜ.க - தி.மு.க கூட்டணி ஏற்பட்ட 1999, 2001 தேர்தல்களைத் தவிர மிகப் பெரும்பாலான தேர்தல்களில் திமுக...

ஜெயா தொலைக்காட்சிக்கு என் இரங்கல்!

ஜெயா தொலைக்காட்சியில் மூடிக் கிடக்கும் போயஸ் தோட்டத்தின் கதவுகளைக் காட்டியபடி, முதலமைச்சரின் மறைவுச் செய்தி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. ஆம்... ஜெயா தொலைக்காட்சிக்கு இப்போது மட்டுமல்ல, எப்போதும் அவர் தான் முதலமைச்சர். அது காலம் முழுக்க ஜெயலலிதா அம்மையாரின் சிறப்புகளைச் சொல்வதற்காகவே உருவாக்கப்பட்டு செயல்பட்டு வரும் தொலைக்காட்சி. தேர்தல் தோல்வி என்றால் கூட அடுத்த சில நிமிடங்களில் தேர்தல் செய்திகள் கூட அதில் வராது. முதலமைச்சர் பதவி இல்லையென்றாலும் அதற்கு ஜெயலலிதா தான் முதல்வர். "மக்கள் முதல்வர்" என்ற பெயரை உருவாக்கிக் கொடுத்ததும் அதுதான். ஜெயலலிதா மீண்டும் ஜெயித்த போது இரட்டிப்பு போனசெல்லாம் வழங்கி மகிழ்ந்திருக்கிறார். பணியாற்றிய அனைவருக்கும், பதவி வேறுபாடற்று ஒரு லட்சம் ரூபாய் போனஸ் வழங்கியெல்லாம் கூட கொண்டாடியிருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதிமுக என்ற கட்சியினுடையது என்றெல்லாம் அந்தத் தொலைக்காட்சியைச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. பிற கட்சி ஊடகங்களைப் போல, அதன் இரண்டாம் கட்ட, வருங்காலத் தலைவர்களுக்கெல்லாம் முக்கியத்துவம் தராதது. அது முற்றும் முழுதாக ஜெயலலிதா ...

ஜெயலலிதா மறைவையொட்டி...

நீங்கள் காத்த சமூகநீதியின் விளைச்சலில் என்றும் வாழ்வீர்கள்! #சமூகநீதி_காத்த_வீராங்கனை! :( சோகமாக உணர்கிறார். 5 டிசம்பர், 05:37 PM மிகப்பெரிய சிக்கலை நாடு சந்தித்துக் கொண்டிருக்கும் சூழலில் அம்மையாரின் இழப்பு - துணிச்சலான எதிர்க்குரலின் இழப்பாக இருக்கும்! :( கவலையாக‌ உணர்கிறார். 5 டிசம்பர், 05:41 PM அம்மையார் ஜெயலலிதாவின் இறப்பில் காவி கொண்டிருக்கும் ஆர்வம் தான் பாண்டேயின் அவசர அறிவிப்பு! 5 டிசம்பர், 06:06 PM அம்மையார் ஜெயலலிதாவின் சூழலைப் பயன்படுத்திக் கொண்டும், அதிமுக அமைச்சர்கள் மீதான புகார்களைப் பயன்படுத்திக் கொண்டும், மிரட்டி, தங்கள் அடியாளை ஆட்சியில் அமர்த்த மத்திய ஆர்.எஸ்.எஸ் பாஜக அரசு செய்து கொண்டிருக்கிறது. ஏற்கெனவே கூடாரத்தில் ஒரு சில ஒட்டகங்கள் நுழைந்திருக்கின்றன. அவற்றை சரியாகக் கையாளுவது அவசியம்... இல்லையேல் கட்சியே கையாடப்படும்! 5 டிசம்பர், 08:27 PM இந்தியா முழுக்க ஜெயலலிதா உடல்நிலை குறித்து பேசுகின்றன ஊடகங்கள். இதில் செல்லாக்காசு நடவடிக்கைக்கான எதிர்ப்பிலிருந்து சற்று ஓய்வு கொண்டிருக்கிறது மத்திய அரசு! யாகுப் மேமனுக்கு அப்துல் கலாம்... செல்லாக்காசு...

சுருட்டப்படுகிறது சேலம் உருட்டாலை!

நட்டத்தில் இயங்குகிறதென்று சேலம் உருட்டாலை தனியாருக்குத் தாரை வார்க்கப்படுகிறது மோடி அரசால்! இந்தியப் பணத்தையே ஏகபோகமாக தனியார்க் கும்பலுக்குத் தாரைவார்த்துவிட்டவரிடம் இதை எல்லாம் எதிர்பார்க்காமலா இருக்க முடியும்? படம்- நன்றி: தி இந்து பா.ஜ.க. அரசு தான் அரசுப் பங்குகளை விலக்குவதெற்கென்றே தனி அமைச்சகம் போட்டு வேலை பார்த்த அரசாயிற்றே! எங்க ஊருல மேங்கோப்பு பிரிப்பது என்பதே தனித் தொழில்! பழைய வீடுகளை இடித்து, அதில் தேறக்கூடியதை விற்பது. அப்படித் தான் அரசின் நிறுவனங்களையெல்லாம் கூறுகட்டி விற்கத் தொடங்கினார்கள். மேங்கோப்பு பிரிக்கப்படும் வீடுகள் என்பவை, இனி பயன்படுத்த முடியாத நிலையிலிருப்பவை. வீட்டு உரிமையாளருக்கு அதன் இறுதி நிலையும் பயன்படும். ஆனால், இவர்கள் பேய் புகுந்த வீடு என்று பிராடு கிளப்பி, மொத்தமாக சல்லிசாக ஆட்டையைப் போடும் அயோக்கியக் கும்பலைச் சேர்ந்தவர்கள். பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்தி, நாட்டை நெட்டுக் குத்தலாக்கப்போகும் இந்த பொருளாதாரப் புலிகளும், தனியாருக்கு எல்லாவற்றையும் விற்பதற்கு போட்டிபோடும் இந்த அரசுகளும், அடிப்படையான நம் கேள்விக்கு ப...

கர்நாடகக் கலவரம்: மத்திய உளவுத் துறையின் கைங்கர்யம்

மிக நுணுக்கமாக, ஆழமாக மத்திய அரசின் உளவுத்துறை கர்நாடகத்தில் செயல்பட்டிருக்கிறது. காங்கிரஸ் சித்தராமய்யாவின் ஆட்சியை குலைக்கவும், அடுத்து வரும் தேர்தலைக் கருத்தில் கொண்டு மட்டுமல்ல... நீண்ட கால நோக்கில், தமிழக கர்நாடக மக்களின் பகை நெருப்பை ஊதி தக்க வைக்கவும், பல்வேறு மொழிவழி தேசிய இனங்களின் பகைமையை கூர்மைப்படுத்துவதன் மூலம் இந்திய தேசியத்திற்கெதிரான குரலை ஒடுக்கவும், மத்திய அரசின் இந்துத்துவ நடவடிக்கைகளுக்கு எதிராக களமிறங்கும் தமிழகத்திற்கு நெருக்கடி கொடுக்கவும் இத்தகைய பணிகளில் மத்திய உளவுத்துறை ஈடுபட்டு, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறது. நோய் நாடி நோய் முதல் நாட வேண்டும்;  பொய் மோடி கும்பலின் முகத்திரை கிழித்துப் போட வேண்டும்.