முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நான் உன் விலா எலும்பில் இருந்து வரவில்லை...

நான் உன் விலா எலும்பில் இருந்து வரவில்லை... நீ(யே/யோ) என் பெண்ணுறுப்பிலிருந்து வந்தாய்! I didn't come from your Rib! You came from my vagina! இளங்கோவன் பாலகிருஷ்ணன் அவர்கள் பகிர்ந்திருந்த இந்தப் படமும் வாசகமும் வெகுவாகக் கவர்ந்தது.  பைபிளின் புரட்டுக்கு மறுப்பு சொல்லும் பகுத்தறிவு வாதமாகவும், பெண்ணின் முதன்மையைக் காட்டுவதாகவும் இருந்த இந்த ஆங்கில வாசகத்தை தமிழில் எழுதலாமே என்று தொடங்கினேன். Vagina என்ற சொல்லுக்கு சரியான வார்த்தையைத் தேட விக்சனரி சென்றேன். வசைச் சொற்களாக பயன்படுத்தப்படும் சொற்களும் பட்டியலில் இடப்பட்டிருந்தது. அதற்கு என்ன விளக்கம் சொல்லியிருக்கிறார்கள் என்று படிக்க அதையும் சொடுக்கினேன். ஒலிப்பு பகுதியும் இருந்தது. இயக்கினேன்.  ஹுப்ப்ப்.. பலமுறை வசையாகக் கேட்ட வார்த்தை தான். ஆறாம் வகுப்பில் முதன்முதலாகக் கேட்டது தொடங்கி பலமுறை செவியில் விழுந்த கெட்ட வார்த்தை தான். எப்போதும் யாரையும் திட்டுவதென்றால் முதலில் பெண்ணை இழிவுபடுத்தும் சொற்கள் தானே சமூகத்தில் புழங்குகிறது; பால்வேற்பாடற்ற ஒரு திட்டுச் சொல் வேண்டும் என்று கூட முன்பு நிலைத் தக...

சிறுத்தைகளுக்கு ஒரு இடம் மட்டுமா?’

உ ணர்ச்சி வசப்படுவதற்கான நேரம் இதுவன்று! நாம் நம்பி ஒப்படைத்துக் கொண்ட தலைவர்களை இக்கட்டான சூழலுக்குத் தள்ளிவிடக் கூடாது. சராசரியான நேரத்தில், உடனிருப்பதும், உயர்த்திப் பேசுவதும் அனைவரும் செய்யக் கூடிய ஒன்று. கடுமையான நேரத்தில் நம்மை முழுமனதோடு ஒப்படைத்துக் கொள்ளுதலே சரியான போராளியின் முதல் கடமையாக இருக்கமுடியும். இவர் சரியில்லை; நம்பி ஏமாந்தோம்; அ்னைவரையும் போல் இவரும் விலைபோய்விட்டார் என்று பேசுவதற்கு பலர் வருவார்கள். அதில் அக்கறையாக நடிப்பவர்களும் இருப்பார்கள்; உண்மையில் அங்கலாய்ப்பவர்களும் இருப்பார்கள். அவர்கள் எல்லாம் இப்போது முக்கியமல்ல. அவர்களின் கருத்தும் முக்கியமல்ல. நேரடியாக கரம்கோர்த்து களத்தில் நிற்கிறவர்கள் உறுதியுடன் - கவனமாக இருக்க வேண்டிய தருணம் இது! தவறான முன்னுதாரணத்தைப் பரப்ப ஊடகங்களும், பற்றவைக்க உளவுத் துறையும் துடித்துக் கொண்டிருக்கின்றன. கொஞ்சமும் உணர்ச்சிவசப்படாத வண்ணம் நிலைமையை அணுக வேண்டியது அவசியம் தோழர்களே! இன்று எடுக்கப்பட்டிருக்கும் முடிவுக்குப் பின்னால் எவ்வளவோ இருக்கிறது. இனி அடைய வேண்டியதும் எவ்வளவோ இருக்கிறது. ஆனால், நாம் அடைவதற்கான இலக்கும...

’இராம’ராஜ்யம்

நீண்டுபோய்க் கிடந்த கரடு முரடான குறுகிய பாதை! இரு பக்கமும் பார்த்தேன். ஒரு புறம்... ‘மவுத்’ஆக்கப்பட்ட முகமதியர் கபர்ஸ்தானம்! மறுபுறம்... மரிக்கும்படி செய்யப்பட்ட ’மாதா’ புதல்வர்களின் கல்லறை! ’ராமராஜ்யம்’ எனும் நாமத்தை உச்சரித்தபடி ஒரு கூட்டம் எதையோ தூக்கிச் சென்றது. என்னவென்று பார்த்தேன்! என்னென்று சொல்வேன்? பெயர் மட்டும் சொல்லிக் கொண்டிருந்த இந்திய ‘மதச் சார்பின்மைக்கு’ காவி சுற்றப்பட்ட வசதியான அருமையான பாடை! கண் திறந்தது. கனவு தான்... ஆயினும் நனவாவதற்கு சாத்தியக் கூறுள்ள கனவு! ஒரு வேளை... கனவு நனவாகி இராம இராஜ்யம் வந்தால்...? மாளப்போவது மதச்சார்பின்மை மட்டுமல்ல மிச்சமீதியிருந்த மனிதநேயமும் தான். சாகப்போவது சிறுபான்மையோரல்ல... பெரும்பான்மையோர் ஆம்.. தப்பித் தவறி இப்போது தான் படிக்கும் நம் காதுகளில் தேனாய்பாய காய்ச்சப்பட்ட ஈயம் அணியமாய் இருக்கும்! நம்மை சம்புகவதம் செய்ய கொடுவாள் தயாராகி ராமனார் கையில் கொடுத்தனுப்பப்படும்! கல்லூரிகளெல்லாம் கல்லுடைப்புத் தளங்களாகும்! ’சதி’யை நம்பாத ‘பதி’யின் ஆட்சியில் அக்கினி குண்டங்கள் கட்...

’ஆம் ஆத்மி’ - இப்போது தமிழில்!

உயிரைக் கையில் பிடித்தபடி இருக்கும் ஒரு லட்சம் மக்களின் போராட்டம் காமெடியாக்கப்பட்ட கதை! ’ஆம் ஆத்மி’ - இப்போது தமிழில் ”எளிய மக்கள் கட்சி!” விரைவில்... உங்கள் அபிமான திரையரங்குகளில்! (ஒரு ஃபீல் கிடைப்பதற்காக டப்பிங்  பட விளம்பர ஸ்டைல்ல வாசிச்சுப் பாருங்களேன்.) தமிழ்நாட்டிலேயே.... ஏன் இந்த வேர்ல்டுலேயே.... .... ... .. . டிரான்ஸ்லேட் பண்ணி கட்சியில சேர்த்திருக்கிற முதல் கட்சி - அது நம்ம கட்சி தானே! அதெப்படி தமிழ்நாட்டில மட்டும் தான் எ.ம.க-வா? இல்லை இந்தியா முழுக்க எ.ம.க-வா? ஒரு வேளை நம்ம உதயகுமார் எம்.பி-யாகி (ஸ்ஸ்ஸ் விடுங்க) நா.ம.உ ஆகி நாடாளுமன்றத்துக்குப் போனா, அங்க மத்த ’ஆம் ஆத்மி’ எம்.பிக்கள்லாம் (மறுபடியும் ஸ்ஸ்ஸ்சா?) ஆம் ஆத்மி-ன்னு இருக்கிறப்போ, இவர் மட்டும் எ.ம.க-ன்னு இருப்பாரா? இல்லை எல்லா ஆம் ஆத்மிக்களும், எ.ம.க.ன்னு இருப்பாங்களா? ஒரே கன்பீசா இருக்குபா!

மண்ணில் வீசுங்கள் எங்கள் மணவிழா அழைப்பிதழை! - புதுமையான மணமக்கள்

திருமணம் அல்லது மகிழ்வான நிகழ்வு என்ற தகவலைச் சொல்வதற்கானதாக மட்டுமின்றி, தங்களின் பணக்காரத்தன்மையை, ஆடம்பத்தை, படாடோபத்தைக் காட்டுவதற்காகவும் சர்வ சாதாரணமாக ஓர் அழைப்பிதழ் ரூ.50 முதல் 500, 1000 வரைக்கும் செலவு செய்கிறார்கள். சிலர் திறந்தால் பேசும் அழைப்பிதழ் தருகிறார்கள். அதன் மூலமே குரலால் அழைக்கிறார்கள். இன்னும் சிலர் சிடி தந்து பார்க்கச் சொல்கிறார்கள். ஆனால், அழைப்பிதழ் வாங்கும்போதே எங்கு,என்று, யாருக்கு என்ற விவரத்தைத் தெரிந்துகொண்ட பிறகு அதை போட்டுப் பார்க்கப் போவதில்லை. (அவனவன் கல்யாண வீடியோவையே திரும்பப் பார்க்கிறதில்லை.) அதையும் தாண்டி, யாரும் அந்த அழைப்பிதழை எடுத்து கண்ணாடிக்குள் அடைத்து வைத்துப் பாதுகாக்கப் போவதில்லை. திருமணம் முடிந்த பின்னோ, முடியும் முன்னோ குப்பைக் கூடைக்குப் போகப் போகிறது. ஆனாலும் அப்படி செலவு செய்வதற்கும் அழகு படுத்துவதற்கும் பின்னால், இதை யாராவது வைத்திருக்க மாட்டார்களா என்ற நப்பாசையும் சிலருக்கு இருக்கும். ஆனால் அதனால் ஏற்படக்கூடிய பலன்கள் ஏதாவது இருக்குமா? ’இதெல்லாம் நடக்கிற காரியமாடா மண்டையா?’ என்று குப்பைக் கூடையில் போடுவதற்குச் சிரமமாக இருக்க...

மார்க்கமும் மனிதமும்!

முகநூலில் தோழர் அபுராயன் எழுதிய பதிவு //சிந்திக்க மட்டும்...!!! நேற்று விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இரண்டாவதாக வந்த சையத் சுபஹானிடம் நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என விஜய் டிவி தொகுப்பாளர் கேட்டதற்கு அவர் " எல்லா புகழும் இறைவனுக்கே" என்றார். அவரின் தாயாரிடம் அதே கேள்வி கேட்கப்பட்டது அதற்கு அவர் " என் மகனுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் தலைவணங்குகிறேன்" என்று கூறி தலையை சற்று தாழ்த்தினார்... பிள்ளைகளைவிட பெற்றோர்களுக்கே இஸ்லாமிய மார்க்கம் குறித்த விழிப்புணர்வு அதிகம் தேவைபடுகிறது... என்பதனை இந்த நிகழ்வு நமக்கு உணர்த்தியது... # இறைவனை தவிர எதற்கும் எவனுக்கும் தலைவனங்குவது மாபெரும் குற்றமாகும்...!!! - @ அபு ரயான் // அபுராயன் அவர்களின் பதிவில் தோழர் மதி மதி அவர்களின் கருத்து: //மகன் ஒரு பாடகராகத் தம் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்; வெற்றி பெறும் அளவுக்கு தம் திறமையை வளர்த்து, தம் உழைப்பால் வெற்றிக்கனியைப் பறித்து விட்டார்; ஆனால், இதில் எந்த தொடர்புமில்லாத 'இறைவனுக்கு' நன்றி கூறுகிறார்! அறிவின் மீது நம்பிக்கையின்றி! ஆனால், அவரின் ...

இயேசு சிலையில் ரத்தம் வடிகிறதாம்! ஓ பாசிட்டிவா? நெகட்டிவா?

சென்னை சேத்துப்பட்டு புனித அன்னாள் மேல் நிலைப்பள்ளியில் சிலுவையில் அறைந்த நிலையில் இயேசு சிலை உள்ளது. இந்த சிலையின் கால், கை மற்றும் கழுத்து பகுதியில் இருந்து புதன்கிழமை மாலை 3 மணியளவில் ரத்தம் வடிந்ததாக கூறப்படுகிறது. அதை பார்த்த கன்னியாஸ்திரிகள் ஆச்சரியமடைந்தனர். பின்னர் இந்த தகவல் காட்டுதீ போல பரவியது. உடனே பொதுமக்கள் கூட்டம் கூடத் தொடங்கியதை அடுத்து ஆயிரக்கணக்காண பொதுமக்கள் திரண்டனர். அப்போது (5 காயங்கள்) மற்றும் சிலை பகுதியில் ரத்தம் வடிந்து காய்ந்த நிலையில் இருந்ததாக தெரிகிறது. இதனையடுத்து அங்கு கூடிய பொதுமக்கள் பரவசமடைந்தனர். அங்கு சிறப்பு பிரார்த்தனை செய்து சென்றனர். சிலையில் ரத்தம் வடிந்த தகவல் வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் பரவியுள்ளது. வெளியூர்களில் இருந்து கிறிஸ்தவர்கள் வேன், பஸ் மூலமாக சேத்துப்பட்டுக்கு வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் ரத்தம் வடிந்ததாக கூறப்படும் ஏசு சிலை முன்பு கூட்டம் கூட்டமாக நின்று சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டு செல்கின்றனர். செல்போன்கள், வீடியோ காமிராக்களிலும் ஏசு சிலையை படம் எடுத்து சென்றனர். இதனால் சேத்துபட்டு சிறிஸ்தவ ஆ...