முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மணிகண்டன் ஜாதித் திமிரும் சுப.வீ. மீசை மயிரும்

ஜாதியை ஒழிக்க விடமாட்டோம். கட்டிப்பிடித்துக் காப்பாற்றுவோம். அது எங்கள் பண்பாடு, ஆச்சா... போச்சா என்று கத்தியிருக்கிறார் பொங்கலூர் மணிகண்டன்! எப்போ பார்த்தாலும் தப்புத் தப்பா செய்தியை எழுதுறதே பொழப்பு மணிகண்டன் அவர்களுக்கு! கலப்புத் திருமணச் சட்டத்தைத் தடை செய்ய வேண்டுமாம். கலப்புத் திருமணச் சட்டம்னு ஒண்ணு இருக்கா என்ன?  ”தமிழன் - கன்னடன், தமிழன் - சிங்களன், தமிழன் - மலையாளி என்றெல்லாம் பேசுகிறீர்களே! நாங்கள் ஜாதி பேசக் கூடாதா?” என்கிறார். காவிரி நீர் உரிமையைத் தர மறுக்கும்போதுதான் தமிழன் - கன்னடன் பிரச்சினை எழுகிறது. முல்லைப் பெரியாறுக்கு பிரச்சினை வரும்போது தான் தமிழன் - மலையாளி பிரச்சினை வருகிறது. மனித உரிமை மறுக்கப்படும்போது தான் தமிழன் - சிங்களன் பிரிவினை வந்தது. உலகில் எங்கும் பாதிக்கப்படும்போது, அடையாளங்களுடன் திரள்வதை பிரிவினையாக யாரும் பார்க்கவில்லை. ஆனால், என் ஜாதித் திமிர் பாதிக்கப்படுகிறது என்று கொழுப்பு வாதம் பேசுவதை உரிமைப் பிரச்சினைகளோடு இணைத்துப் பார்க்க முடியுமா? ”சிங்களன் தமிழச்சியைக் கட்டிக் கொண்டால் சும்மா இருப்பீர்களா? நீங்கள் மட்டும் தமிழன் - சிங்கள...

’பிராமணாள் கபே’யும் நாயுடுஹால், கோனார் நோட்சும்!

திருச்சி திருவரங்கத்தில் இருந்த ‘ஹோட்டல் ஸ்ரீ கிருஷ்ணய்யர் என்பதில், கடந்த சில மாதங்களுக்கு முன் திடீரென ‘பிராமணாள்’ என்ற பெயர் நுழைக்கப்பட்டது. தகவலறிந்த திராவிடர் கழகத் தோழர்கள் நேரில் சென்று ‘பிராமணாள்’ பெயர்ப்பலகையை நீக்குங்கள் என்று கோரிக்கை விடுத்தனர். பல முறை வேண்டுகோள் விடுத்தும், அவர் மறுக்கவே பிரச்சினை காவல்துறையிடம் சென்றது. அங்கு பல முறை பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. காவல்துறையும், அரசு வழக்கறிஞரும் கூட ‘பிராமணா’ளுக்கு ஆதரவாக இருக்கவே, அடுத்தகட்ட நடவடிக்கையாக விளக்கக் கூட்டத்தினை நடத்த திராவிடர் கழகம் அனுமதி கோரியது. தமிழக முதல்வருக்கு (அவருடைய தொகுதி என்பதாலும்) வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டார் திராவிடர் கழக்த் தலைவர் கி.வீரமணி. இதற்கிடையில் இன்னும் சில பெரியாரிய அமைப்புகளும் எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கின.  (தந்தை பெரியார் திராவிடர் கழகம், பெரியார் பாசறை போன்ற அமைப்புகள் போராட்டத்தில் இறங்கின. கைது, சிறை வரை சென்றது. ஒட்டுமொத்த பெரியாரியக் கருத்தாளர்களும் இந்த இழிவு துடைக்கும் பணியில் திரண்டனர். விளக்கக் கூட்டம் நடத்துவதற்கு, மூன்று முறை த...

’நறுக்கு’த் தீனி (அக்டோபர் 2012)

மினி ப்ளாக்குகள் எனப்படும் ட்விட்டரும், பேஸ்புக்கும் வந்த பிறகு, விரிவாக எழுதுவதற்கான அவசியமோ, பெரிய தயாரிப்போ இல்லாமல் கூட, உடனுக்குடன் தோன்றும் கருத்தை எழுதிவிட முடிகிறது. அதனால் வலைப்பூவில் எழுத நினைக்கும் செய்திகள் கூட அங்கேயே முடிந்துவிடுகின்றன. அல்லது சோம்பலால் முழுமையாகப் பதிவு செய்யப்படாமல் விடுபட்டுப் போகின்றன.  எனவே அவற்றை அப்படியே இங்கு பதிவு செய்யவோ, அல்லது கொஞ்சம் விரிவாக்கி எழுதவோ வேண்டும் என்று பல காலமாக நினைத்துள்ளேன். அதற்கான பகுதிக்கு நல்ல பெயர் வைக்க வேண்டும் என்று யோசித்து, யோசித்தே தாமதித்துவிட்டேன். நல்ல பெயரோ என்னவோ- இப்ப வச்சாச்சு... தொடங்கியாச்சு... ’ நறுக்கு ’ த் தீனி விஜயகாந்த் கோபம்? விஜயகாந்த் வீடியோவைப் பார்த்தேன். ‘நீ யார்’ என்று அந்த பத்திரிகையாளரைப் பார்த்துக் கேட்கிறார். அவர் எந்த பத்திரிகையிலிருந்து வருகிறார் என்று கடைசி வரை சொன்னதாகத் தெரியவில்லை. அதன் பிறகு பத்திரிகையின் / தொலைக்காட்சியின் பெயரோடு வந்து கேட்டவர்களுக்கு அவரின் பதில் ஓரளவு மரியாதையாகத் தான் இருக்கிறது. அதற்கும் பிறகு மீண்டும் அந்த நபர் வந்து வம்பிழுக்க இழுக்க வேகம் கூடுகி...

தமிழன் பேர் சொல்லி மிகு தமிழரிடைத் தமிழ்நாட்டில் வாழ்ந்திட்டாலும்...

பார்ப்பனர்கள் குறித்த எச்சரிக்கையை விடுக்கும் போதெல்லாம் ’அவர்களும் தமிழர்கள் தானே! அவர்களுக்கும் மொழிப் பற்றெல்லாம் உண்டு’ என்று நம்மவர்களே திரண்டு வருவார்கள். அதிலும் அந்தப் பார்ப்பனரால் பலனோ, விளம்பரமோ கிடைக்கும் என்றால் இந்தக் குரல் இன்னும் வேகமாக எழும்புவதோடு, ”இன்னும் ஆரியர், திராவிடர், பார்ப்பனர் என்றெல்லாம் திட்டிக் கொண்டு...” என்று நம்மை ஏதோ பிற்போக்குவாதிகள் போலப் பார்ப்பார்கள். பார்ப்பதோடு மட்டுமல்லாமல், அதைப் பகரவும் செய்வார்கள். ஏனெனில் அத்தகையோருக்குத் தான் விபீஷணப் பட்டமும், பார்ப்பனர்களின் விளம்பர சடகோபமும் கிடைக்கும். அண்மைக் காலமாக, பனியாவின் பத்திரிகை ஒன்றில் ஆசிரியராக நுழைந்திருக்கும் பார்ப்பனர் ஒருவர் எங்கெங்கு தமிழ்ச்சங்கங்கள் இருந்தாலும், அங்கெல்லாம் விஜயம் செய்து வருகிறார். அந்த அச்சு அசல் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனரான வைத்தியநாத அய்யர்வாளுக்கு, திடீரென தமிழ்ப் பற்று பீறிட்டு அடித்துக் கொண்டிருக்கிறது. இந்தியத் தேயமெங்கும் அதைப் பாய்ச்சுவதைக் கடமையாகக் கொண்டு செயலாற்றிவருகிறார். (அழைத்தால் வெளிநாடுகளுக்கும் அவாள் வரத் தயார். ’கடல் தாண்டக் கூடாது என்பதெல்லாம் பழ...

இன்னும் நீக்கப்படவில்லை அம்பேத்கர் கார்ட்டூன்!

பாடப்புத்தகத்தில் அம்பேத்கர் மீதான காழ்ப்புணர்வைக் கொட்டி, எப்போதோ பத்திரிகையில் வெளியிடப்பட்ட கார்ட்டூனை மீண்டும் வெளியிட்டிருந்த போக்கு அனைவராலும் கடுமையாகக் கண்டிக்கப்பட்டது.    இதனை அடுத்து, அந்த படம் - பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால், இணையத்தில் இன்னும் அந்தப் படத்துடனே பாடம் வைக்கப்பட்டுள்ளது. http://ncert.nic.in/NCERTS/textbook/textbook.htm?keps2=1-10 பார்க்க: பக்கம் 18 இந்த நேரத்தில் சமச்சீர் கல்வி விசயத்தில் நடந்த ஒன்று நினைவுக்கு வருகிறது. 2011-ஆம் ஆண்டு மே 22-ஆம் நாள் அதிமுக அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில் சமச்சீர் கல்விப் பாடத்திட்டங்கள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அன்று ஞாயிற்றுக் கிழமை - நான் சென்னையில் இல்லை. இணைய வாய்ப்பு இல்லாத காரணத்தால் உடனடியாக அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு, தமிழக அரசின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும் சமச்சீர் கல்விப் பாடங்களைப் பதிவிறக்கம் செய்து வைக்கச் சொன்னேன். பதிவிறக்கம் செய்யப்பட்டவற்றை ஒரு தனியார் இலவச இடம் ஒன்றில் பதிவேற்றம்ச் செய்தும் வைத்துவிட்டோம். அ...

விளையாட்டிலும் ஜாதி என்று பேசாதீங்க..

”விளையாட்டிலும் ஜாதி என்று பேசாதீங்க..” ”விட்டால் விளையாட்டிலும் இட ஒதுக்கீடெல்லாம் கேட்பீங்க போல...” என்றெல்லாம் பேசும் அரைகுறைகளுக்கு, அதாவது ‘ஹிந்தியர்’களுக்கு இப்படம் சமர்ப்பணம்! “விளையாட்டில் ஜாதி பார்க்காதே” என்று ஜாதி பார்ப்பவனிடம் போய்ச் சொல்! ஜாதிப் பாகுபாடு இருக்கிறது என்று எடுத்துச் சொல்பவனிடம் வாய்ஜம்பம் காட்டாதே! திறமை உள்ளவன் எல்லாம் தெருவில் கிடக்கையில் தகுதி திறமை எல்லாம் பூணூல் கயிற்றில் ஆடுகிறது என்று சொல்லும் கூட்டத்தில் போய்ச் சொல்... “ஜாதி பார்க்காதே” என்று! ஏர் பிடிக்காத எம்.எஸ்.சுவாமிநாதனை வேளாண் விஞ்ஞானி என்று சொல்லி நிலத்தைப் பாழ்படுத்திய பார்ப்பனக் கூட்டத்திடம் போய்ச் சொல்... “ஜாதி பார்க்காதே” என்று! கிரிக்கெட்டில் இத்தனை சதவிகிதம் எஸ்.சி/ எஸ்.டி... இத்தனை சதவிகிதம் ஓ.பி.சி... இத்தனை சதவிகிதம் சிறுபான்மையினர் என்று இல்லாத இடஒதுக்கீட்டை இருப்பதாய்க் காட்டி கிண்டல் செய்யும் வட இந்திய மின்னஞ்சலைப் நண்பர்களுக்குப் பரப்பும் முன் நிரம்பி இருக்கும் பார்ப்பன கிரிக்கெட்டர்களைக் கணக்கெடுத்துவிட்டுச் சொல் “ஜாதி பார்க்காதே” என்...

கார்களில் கருப்பு பிலிம் அகற்றுதல் தேவையா?

கார்களில் கருப்பு பிலிம்களை எடுக்கச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறது நீதிமன்றம். எனக்கு இந்த உத்தரவில் இன்னும் உடன்பாடு ஏற்படவில்லை.  தீவிரவாதிகள், கொலை, கொள்ளையர்களைப் பிடிக்க வாகன சோதனைகள் இருக்கின்றன. கருப்பு பிலிம்களை அகற்றுவதன் ஊடாக எதைப் பார்த்து கண்டுபிடித்துவிட முடியும் - உள்ளிருப்போரின் தனிமையைக் கெடுப்பதைத் தவிர? மற்ற வாகனங்கள் அனைத்தையும் விட உயரம் குறைவானவை மகிழுந்துகள். அவை மகிழுந்துகளாக இருப்பதற்கு முக்கியமான காரணம் அதில் உள்ள privacy என்பது என் கருத்து. அதுவும் குடும்பத்தோடு செல்லும்போது, சிரிப்பு, மகிழ்ச்சி, கிண்டல் என செல்லும் தருணங்களை ரசித்தவர்களுக்கு அத்தனை பேரும் சுற்றி பார்த்துக் கொண்டிருக்கும் காரணத்தால் மூஞ்சியைத் தூக்கி வைத்துக் கொண்டு வரும் கொடுமையை சகித்துக் கொள்ள முடியாது.  போக்குவரத்து சிக்னல்கள், நெருக்கடிகள் உள்ள இடங்களில், வண்டி ஓட்டுபவரைத் தவிர மற்ற அனைவரும் மகிழ்வுடன் இருக்கும் தருணங்களுக்கு இந்த நடவடிக்கை கடுப்பைத் தரக்கூடியது. இந்த நடவடிக்கைக்குப் பிறகு குடும்பத்துடன் மகிழுந்தில் செல்லவில்லை என்றாலும், சாலையில் செல்லும் போது கார்கள...