முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

வென்றது அய்க்கிய முற்போக்குக் கூட்டணி!

மக்களவையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றிபெற்றது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 253 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. எதிர்த்து 232 வாக்குகள் பதிவாயின. கடந்த சில நாட்களாக நீடித்து வந்த மர்மம் நீங்கியது. கம்யூனிஸ்டுகளின் பணியால் நாக்கைத் தொங்கப்போட்டுக் கொண்டு நின்ற மதவாதத்தின் முயற்சி தோல்வியடைந்தது.

வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ்

பரபரப்பான ஆட்டத்தின் முடிவில் IPL T20 இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் கடைசி பந்து வரை போராடி தோல்வியடைந்தது! ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றியடைந்தது!

தமிழர்கள் தூக்கிச் சுமந்த மூத்திரச் சட்டி!

ராமன், அனுமன் வேடங்களில் இருப்போர் ஒன்னுக்கு அடிப்பதைப் போன்ற திரைப்பட சுவரொட்டி பற்றிய எமது பதிவுக்கு பின்னூட்டமிட வந்த அனானி ஒருவர் பெரியார் மூத்திரம் இருப்பதைப் போன்ற படத்தை சுவரொட்டியாக அடித்து ஒட்ட விரும்பியிருக்கிறார். அவருக்கு உதவியாக இருக்கட்டுமே என்று... ___________________________________________________________________ பெரியார் ஒன்னுக்கு அடிப்பதைப் போன்ற படத்துக்காக அவ்வளவு சிரமப்படவெல்லாம் வேண்டாம். மூத்திரம் வெளியேறும் போதெல்லாம் 'அம்மா அம்மா' என்று அலறித் துடித்தபிறகும், தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு தன் மக்களுக்காக பிரச்சாரம், பயணம் என்று சுற்றிய பெரியாரையும் அவரது மூத்திரச் சட்டியையும் தூக்கிச் சுமந்தவர்கள் தமிழர்கள்!அதனால் அந்தப் படத்தை தாராளமாக தமிழகமெங்கும் போஸ்டர் அடித்து ஒட்டுங்கள்.. அப்போதுதான் இன்றைய தமிழனுக்கு பெரியாரின் பெருங்குணமும் அவரது கடும் உழைப்பும் விளங்கும்! அனானியின் இந்த முயற்சிக்கு நாம் துணை நிற்போம்! அதற்காக அந்த புகைப்படங்களை பதிவாக இடுவதில் நாம் பெருமை கொள்கிறோம். ஒவ்வொரு சொட்டாக மூத்திரம் இறங்கும் போதெல்லாம் வலியால் துடித்து முகம் சிவந்...

ராமனுக்கு வராதா ஒன்னுக்கு?

தென்னவன் கலைக்கூடம் சார்பில் தயாரிக்கப்படும் 'வணக்கம்மா' என்ற திரைப்படத்தின் தொடக்க விழா நேற்று சென்னை ஏ.வி.எம். அரங்கில் நடைபெறவிருந்தது. தொடக்க விழாவுக்கான சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டன. இந்நிலையில் சுவரொட்டி ஒட்டியவர்களைக் கைது செய்தது காவல் துறை. காரணம் இந்துமுன்னணி உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதாக காரணம் கூறப்பட்டது. பிறகு தொடக்கவிழாவின் போதும் இந்து முன்னணி உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் தங்கள் காலித் தனத்தை அரங்கேற்றி உள்ளன. என்னடா காரணம்ன்னா...."ராமனை இழிவுபடுத்திவிட்டார்கள்! எங்கள் மனம் புண்பட்டுவிட்டது" என்று தேய்ந்து போன நொந்து போன பழைய ரெக்கார்டை ஓட்டி இருக்கிறார்கள். சரி.. அப்படியென்ன இழிவுபடுத்திவிட்டார் கள்ள்ள்ள் -னு கூப்பாடு போடுறீங்கன்னு கேட்டா... "ராமனும் அனுமானும் ஒன்னுக்கு போவது போல சுவரொட்டி ஒட்டப்பட்டிருக்கிறது. அது எங்கள் மனதைப் புண்படுத்திவிட்டது." அப்படின்னு நம்ம ராம கோமாளி சொல்றாரு. புண்பட்டதெல்லாம் அப்புறம் இருக்கட்டும்... இப்படியே புண்பட்டுப் போச்சு... புண்பட்டுப் போச்சுன்னு இவங்க சொன்ன கணக்குப் படி பார்த்த...

அண்ணா பரிமளம் மறைவு

பேரறிஞர் அண்ணா அவர்களின் வளர்ப்புப் புதல்வரும், பேரறிஞர் அண்ணா இலக்கியப் பேரவைத் தலைவருமான மானமிகு சுயமரியாதைக்காரர் டாக்டர் அண்ணா பரிமளம் அவர்கள் மறைந்துவிட்டார்கள் என்ற துயருறும் செய்தியை அறிவிக்க வருந்துகிறோம். இறுதி வரை கொள்கையுடன் வாழ்ந்த அந்த கொள்கைக் கோமானுக்கு வீரவணக்கம்! அவர் தொகுத்தளித்த அறிஞர் அண்ணா பகுத்தறிவுக் களஞ்சியம் நூல் வெளிவரப்போகும் இத்தருணத்திலும், அவர் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருந்த அறிஞர் அண்ணா அவர்களின் நூற்றாண்டு தொடங்க இருக்கும் இத்தருணத்திலும் அவரது மறைவு என்பது ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவருக்கு நமது வீரவணக்கம்! அறிஞர் அண்ணாவின் எழுத்துகளை இன்றைய தமிழ் இளைஞர் உலகம் அறிந்துகொள்ள வேண்டும் என்பதில் பெரும் ஆர்வம் செலுத்தி அண்ணாவின் படைப்புகளை இணையத்தில் கொண்டுவருவதில் முனைப்பாக இருந்து செயல்பட்டார். அவரது உழைப்பின் பலனாய் http://www.arignaranna.info/ என்ற தளம் உருவாகி செயல்பட்டு வருகிறது.

சரத்குமாருக்கு மட்டுமல்ல... மானமற்ற மடையர்கள் அனைவருக்கும்!

"தமிழ் வளர வேண்டும். தமிழர்கள் வழிபடும் ஆலயங்களில் தமிழில் மந்திரங்கள் ஒலிக்க வேண்டும். தமிழில் அர்ச்சனைகள் நடக்க வேண்டும் என்ற ஆர்வம் தவறில்லை. ஆனாலும், காலகாலமாய் கடைப்பிடிக்கப்பட்டு வந்த மரபுகளையும் மனதில் கொண்டே மாற்றங்களை நிகழ்த்த அமைதி வழியில் முயற்சிக்க வேண்டும். அதற்கு இறை நம்பிக்கை கொண்டோரை, ஆன்மீகப் பெரியோர்களை, அறிஞர் பெருமக்களை கொண்ட ஒரு குழு அமைத்து அதன் வழியில் தீர்க்கமான சுமூக முடிவை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும் என்று ***** கூறியுள்ளார்." (தினமணி 4.3.2008 ) இது தினமணியில் வந்த செய்தி. அதே பேட்டியை சன் டி.வி-யும் ஒளிபரப்பியது. அதில் சொன்னார், "கடவுளுக்கு எந்த மொழியில் அர்ச்சனை செய்வது என்று ஆகமத்தில் இருக்கிறது அதன்படி தான் செய்ய வேண்டும். கடவுள் நம்பிக்கையற்றவர்கள் இப்பிரச்சினையில் உள்நுழைந்து குழப்பக்கூடாது." என்று. இப்பேட்டி யார் கொடுத்தது என்று நினைக்கிறீர்கள்? பா.ஜ.க. 'இலக்கடை' கணேசன் கொடுத்தது என்றுதானே! அதுதான் கிடையாது; இல்லை 'சோ'...ம்ஹூம்... அதுவும் கிடையாது இந்த அரிய பெரிய கருத்தினை தெரிவித்தவர் 2011-ன் தமிழக முதல்வர்களில் ஒர...

தாழ்த்தப்பட்ட மாணவர்களின் உதவித் தொகைக்கு நிபந்தனை ரத்து

மத்திய அரசு சார்பில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் பெற குறைந்தபட்சம் 60 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்று நிபந்தனை வித்ஹிக்க இருப்பதாக தகவல் வந்ததை அடுத்து தமிழகம் மற்றும் இந்தியாவின் பல பகுதிகளிலும் மாணவர்களும் சமூக நீதியில் அக்கறை கொண்டவர்களும் குரலெழுப்பினார்கள். மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். தமிழ்க முதல்வர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் மத்திய அரசின் இந்த நிபந்தனையாஅல் தமிழக மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாவண்ணம் தமிழக அரசே அந்த நிதிஉதவியினை செய்யும் என்று அறிவித்தார். அத்தோடு மட்டுமல்லாமல் மற்ற மாநில மாணவர்களும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். திராவிடர் கழகம் கடந்த 16-ஆம் தேதி தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் நடத்தியது. முதல் தலைமுறையாக, மிகவும் பிந்தங்கிய பகுதிகளில் இருந்தும், தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து படிக்க வருவோரின் வாய்ப்பை இந்த நிபந்தனை மூலம் கெடுத்துவிடக்கூடாது என்று குரலெழுப்பினார் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள். இந்நிலையில் இன்று கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் கலைஞரின் கடிதம்...