அந்தோ! கொடுமை! கொடுமை! ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைப் போராட்டத் தளபதி பிரிகேடியர் தமிழ்ச்செல்வமும் - முக்கியத் தளபதிகளும் மாண்டனரே! ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டம் விடுதலைப் போராட்டமாகி முகிழ்த்துக் கிளம்பி மும்முரமாய் நடந்துவரும் இக்காலகட்டத்தில், நேற்று ஈழத்திலிருந்து வந்த செய்தி, உலகத் தமிழர்களின் உள்ளங்களை வெந்தணலில் தள்ளி வாட்டி வதைக்கும் துன்பச் செய்தியாகும். வான் வழித் தாக்குதல் காரணமாக, பிரிகேடியர் தமிழ்ச்செல்வமும், லெப்டினன்ட் கர்னல் அன்புமணி (எ) அலெக்ஸ், மேஜர் முகுந்தன், கேப்டன் நேதாஜி, லெப்டினன்ட் ஆட்சிவேல், வாகைக்குமரன் ஆகிய தளபதிகளும் கொல்லப்பட்டனர் என்ற செய்தி தமிழர்களை மட்டுமல்ல, மனிதாபிமானம் கொண்ட அனைவருக்கும் நெஞ்சுருக்கும் செய்தியாகும்! அரசியல் மேதை ஆன்டன் பாலசிங்கம் மறைந்த நிலையில், அவ்விடத்தைப் பெரும் அளவில் நிரப்பி, விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைசிறந்த பேச்சாளராகவும், சிந்தனையாளராகவும், அமைதிக்குழுவிடம் அடக்கத்தோடும், உறுதியோடும் தமது உரிமைகளை எடுத்து வைத்து பேச்சுவார்த்தைகளைத் திறம்பட நடத்திய நாயகருமான மானமிகு தமிழ்ச்செல்வன் மறைவு ஒரு பேரிடி போன்ற செய்தி! முன்...