முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரே தேர்தல்?

ஒரே நாடு... ஒரே மொழி... ஒரே தேர்வு... ஒரே கல்வி முறை... இப்போ ஒரே தேர்தல்?

அதிக செலவு, ஏராளமான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஆசிரியர்களைப் பயன்படுத்துவது, அடுத்தடுத்து தேர்தல் போன்ற காரணங்களால் ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடத்த முன்புபேச்சு எழுந்தது. நிதி ஆயோக் அதன் அடுத்த கட்டத்திற்கு நடந்திருக்கிறது.

2019-க்குப் பதில் 2018-லேயே தேர்தல் நடத்தலாமா என்று யோசிக்கிறதாம் மோடி அரசு.

என்ன செய்ய? மேலே சொல்லப்பட்ட காரணங்களுக்காக தேர்தலையே தியாகம் செய்துவிடலாம் என்று கூட நிதி ஆயோக் பரிந்துரைத்திருக்கும்... 2018-இல் தேர்தல் நடந்து மீண்டும் ஆர்.எஸ்.எஸ். வந்தால் நிலைமை அது தான்.

”ஆமாங்க... எதுக்கு இவ்வளவு தேர்தல்? எப்படியும் இவய்ங்க கொள்ளை அடிக்கத் தான் போறாய்ங்க... எதுக்கு நாட்டுக்கு செலவு? எவனோ ஒருத்தன் இருந்துட்டுப் போறான்” என்பதாக தாங்களின் மக்களின் பிரதிநிதிகள் என்று கருதிக் கொண்டு மாமாக்கள், மாமிகள், அவர்களின் பாதந்தாங்கிகள் உள்ளிட்ட ”மட சாம்பிராணிகள்” கருத்து பரப்ப ஆரம்பிப்பார்கள்.
ஆயிரம் கெட்ட வார்த்தைகள் மனதில் தோன்றினாலும், அவற்றை அடக்கிக் கொண்டுதான் அடுத்து எழுத வேண்டியிருக்கிறது.

அப்படி என்ன இழவுக்கு நாங்கள் தேர்ந்தெடுக்கும் மாநில அரசைக் கலைத்துவிட்டு தேர்தல் நடத்த வேண்டும். ஒரே தேர்தல் நடத்துவதற்காக இரண்டாண்டுகள், மூன்றாண்டுகளில் மாநில ஆட்சிகள் முடித்துவைக்கப்படுமா?

இப்போது தமிழ்நாட்டில் நடப்பது போல தொங்கு சட்டமன்றம் உருவாகி, ஆட்சி தன் நம்பிக்கையை சட்டமன்றத்தில் இழக்க நேரிட்டால், எதற்கு உடனே தேர்தல் என்று மிச்ச காலத்தை ஆளுநரைக் கொண்டோ, குடியரசுத் தலைவரைக் கொண்டோ, அதிகாரிகளைக் கொண்டோ மத்திய அரசு நடத்துவதற்கான மிக மோசமான நிலையை நாம் எதிர்கொள்ளவேண்டியிருக்காதா?

சரி, 13 நாட்களிலும் 13 மாதத்திலும் கவிழ்ந்த வாஜ்பேயியின் பாஜக ஆட்சிபோலவோ, அல்லது 11 மாதத்தில் பா.ஜ.க.வால் கவிழ்க்கப்பட்ட வி.பி.சிங் ஆட்சி போலவோ, ஜனதா, ஜனதாதளம், தேசிய முன்னணி, அய்க்கிய முன்னணி போலவோ ஆட்சிகள் அமைந்து குறுகிய காலத்தில் நாடாளுமன்றம் செயலிழந்தால், அப்போது நாட்டின் எல்லா மாநிலங்களுக்கும் மீண்டும் தேர்தல் நடக்குமா? அல்லது 5 ஆண்டுகள் நிறையும் வரை, மக்களின் ஆதரவு இல்லாத, அரசியல் சட்டப்படி வலு இல்லாத ஓர் ஆட்சி காபந்து அரசாக தொடருமா?

அதிகாரிகளின் கொட்டம் நடக்குமா? என்பது உள்ளிட்ட இந்திய அரசியல் சட்டத்தையும், மாநில அதிகாரங்களையும், கூட்டாட்சித் தத்துவத்தையும் கேலிக்குள்ளாக்கும் இந்த யோசனை முற்றுமுழுதாக சர்வாதிகாரத்திற்கான மூஸ்தீபு!
எச்சரிக்கை... எச்சரிக்கை... எச்சரிக்கை!

முகநூலில்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owne...

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்...

சரத்குமாருக்கு மட்டுமல்ல... மானமற்ற மடையர்கள் அனைவருக்கும்!

"தமிழ் வளர வேண்டும். தமிழர்கள் வழிபடும் ஆலயங்களில் தமிழில் மந்திரங்கள் ஒலிக்க வேண்டும். தமிழில் அர்ச்சனைகள் நடக்க வேண்டும் என்ற ஆர்வம் தவறில்லை. ஆனாலும், காலகாலமாய் கடைப்பிடிக்கப்பட்டு வந்த மரபுகளையும் மனதில் கொண்டே மாற்றங்களை நிகழ்த்த அமைதி வழியில் முயற்சிக்க வேண்டும். அதற்கு இறை நம்பிக்கை கொண்டோரை, ஆன்மீகப் பெரியோர்களை, அறிஞர் பெருமக்களை கொண்ட ஒரு குழு அமைத்து அதன் வழியில் தீர்க்கமான சுமூக முடிவை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும் என்று ***** கூறியுள்ளார்." (தினமணி 4.3.2008 ) இது தினமணியில் வந்த செய்தி. அதே பேட்டியை சன் டி.வி-யும் ஒளிபரப்பியது. அதில் சொன்னார், "கடவுளுக்கு எந்த மொழியில் அர்ச்சனை செய்வது என்று ஆகமத்தில் இருக்கிறது அதன்படி தான் செய்ய வேண்டும். கடவுள் நம்பிக்கையற்றவர்கள் இப்பிரச்சினையில் உள்நுழைந்து குழப்பக்கூடாது." என்று. இப்பேட்டி யார் கொடுத்தது என்று நினைக்கிறீர்கள்? பா.ஜ.க. 'இலக்கடை' கணேசன் கொடுத்தது என்றுதானே! அதுதான் கிடையாது; இல்லை 'சோ'...ம்ஹூம்... அதுவும் கிடையாது இந்த அரிய பெரிய கருத்தினை தெரிவித்தவர் 2011-ன் தமிழக முதல்வர்களில் ஒர...