முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தைரியமான ஆளாக இருந்தால்.... விஜயகாந்த் சவால்!

ஊருக்குள் ஒரு கோவணாண்டி இருந்தானாம். அவனது கோவணமும் கிழிந்து தொங்கும் நிலை வந்துவிட்டதாம். வேறென்ன செய்வது என்ற குழப்பத்தில் தானே அந்த கோவணத்தைக் கிழித்துக் கொண்டு அலைந்துவிடுவோமோ என்று வேறு பயம் வந்துவிட்டது. இத்தனை நாள் விட்டுக் கொண்டிருந்த சவடால்களுக்கெல்லாம் சமாதி கட்டும் நிலை வந்துவிட்டதைக் கண்டு தவித்தவனுக்கு திடீரென்று உதித்தது ஒரு யோசனை.
விட்டான் அடுத்த சவடால்!!!
"என்னைப்போல அம்மணமாகத் திரிய யார் இருக்கிறார்?...! தைரியமான ஆளாக இருந்தால் வாருங்கள் போட்டிக்கு!" என்று சவால் விட்டாராம்...

அந்தக் கதை தான் இப்போது விஜய்காந்துக்கு!
அடித்த போதை தெளிந்து இப்போது தான் வந்தார் போலிருக்கிறது. இத்தனை நாள் ஈழத் தமிழர் பிரச்சினையில் மூடிக்கொண்டிருந்துவிட்டு, இப்போது கிளம்பியிருக்கிறது அவருக்கு வேகம்..
திருமங்கலத்தில் சூடு கண்ட பூனை, தன் சூட்டை மறைத்துக் கொள்ள விட்டிருக்கிறது ஒரு ஸ்டேட்மெண்ட்.

"ஈழத் தமிழருக்காக நாடாளுமன்றத்தை புறக்கணிக்க அரசியல் தலைவர்கள் தயாரா? நான் தயார். அவ்வாறு வந்தால் நான் முதலில் நிற்பேன்" என்று!
அடடே! வரவேற்கத் தக்கதுதான்.. இதிலென்ன குறை கண்டீர் என்கிறீர்களா?

இந்திய அரசைப் புறக்கணிக்கும் வகையில், நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கும் யோசனை தருவதெல்லாம் இருக்கட்டும்! யோசனை கொடுப்பது யாரென்பதில் தானே அடங்கியிருக்கிறது அதன் தரம்!
வெற்றியின் உச்சியில் நின்று கொண்டு விடுதலைப் புலிகள் அறிவித்தபோதுதான் அந்த போர் நிறுத்தத்திற்கு ஒரு மரியாதை வந்தது!

ஆனால் கூட்டணிக்கு யாரும் அழைக்காத்தால் குழப்பம்! திருமங்கலத்துக்குப் பிறகு தனியாக நிற்பதற்கு பீதி!
மானம் போகும் விசயத்தை வைத்தே சவடால் விட்டால்........ பலே விஜய்காந்த்! கால் நூற்றாண்டு கால சினிமா வாழ்க்கையில் இதைக்கூட கற்றுக் கொள்ளாவிட்டால் எப்படி?

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
விஜய்காந்த் இன்னொரு மெண்டல்
Uma இவ்வாறு கூறியுள்ளார்…
//அடித்த போதை தெளிந்து இப்போது தான் வந்தார் போலிருக்கிறது. இத்தனை நாள் ஈழத் தமிழர் பிரச்சினையில் மூடிக்கொண்டிருந்துவிட்டு, இப்போது கிளம்பியிருக்கிறது அவருக்கு வேகம்.//

நல்லா சொன்னீங்க நச்சுனு!
தமிழ் குரல் இவ்வாறு கூறியுள்ளார்…
விஸ்கிகாந்தெல்லாம் ஒரு ஆள் என்று அவன் சொல்வதை எல்லாம் போடுவதை வன்மையாக கண்டிக்கிறேன்... மக்களால் மறக்கப்பட்ட அந்த குடிகாரன் பெயரை உங்கள் பதிவு மூலம் சிலரை படிக்க வைத்து விட்டீர்களே?
யோகன் பாரிஸ்(Johan-Paris) இவ்வாறு கூறியுள்ளார்…
வாய்விட்டுச் சிரிக்கவேண்டும் போல் இருந்தது. ஏதாவது பதிவு உள்ளதா? எனத் தேடியபோது, இது பட்டது.
படித்தேன் சிரித்தேன். ஆனாலும் வி.காவுக்கு இவ்வளவு குசும்பு அதிகம்.
யூர்கன் க்ருகியர் இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல தமாசு.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
நல்லா சொன்னீங்க நச்சுனு!//
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
நான் நினச்சேன் ... நீ சொல்லிட்டப்பா!!!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owne...

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்...

வீரவணக்கம்! வீரவணக்கம்!!

மாநாட்டுத் தீர்மானங்களின் தொடக்கத்தில் களத்தில் நின்று போராடி மடிந்த கொள்கை மறவர்களுக்கு வீரவணக்கம் தெரிவிக்கும் இரங்கல் தீர்மானம் தெரிவிக்கும் வழக்கம் உண்டு. முற்றிலும் எதிர்பார்க்காத வண்ணம், நம் அனைவரையும் துயரக் கடலில் ஆழ்த்தியதோடு நாம் இன்னும் முனைப்பாக செயலாற்றி, நம் உரிமையை வென்றெடுக்க நம்மைத் தூண்டியுள்ள வீரத் தளபதிகளின் மறைவுக்கு வீர வணக்கம் செலுத்த வேண்டிய நிலையில் நாம் உள்ளோம். வீரவணக்கம் செலுத்துவதோடு, தமிழீழத் தாயகத்தில் எழுச்சி ஏற்கும் நாளாக அமைந்துவிட்ட மாவீரர்களின் இறுதி நிகழ்ச்சியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம். (நன்றி: த.அருள்எழிலன்) வீரவணக்கம்; வீரவணக்கம்! வென்றெடுக்கப் போகும் எங்கள் நாட்டின் வீரவித்துக்கள் நீவீரே! மண்கொள்வதில்லை உங்கள் உடல்கள்...எங்கள் மனங்கொண்டு சினம் வளர்த்து ஈழம் படைக்க உரமாகின்றன! வீரவணக்கம்; வீரவணக்கம்! உம்மைக் கொன்றதும் எங்கள் அமைதி முகத்தைச் சிதைத்ததும் ஒன்றே! பேச்சு தேவையில்லை இனியென சிங்களம் சொல்கிறது! இனி அவர்கள் பேசவேகூடாது என்கின்றன உம்முடல்கள்... செய்து முடிப்போம்! பகையைக் கொய்து முடிப்போம்! வீரவணக்கம்; வீரவணக்கம்!