முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கடவுள் நம்பிக்கையாளர்களுக்கு சத்யராஜ் சவால்!

சென்னை பெரியார் திடலில் நடைபெற்று வரும் முப்பெரும் மாநாடுகளில் ஒன்றான மாநில பகுத்தறிவாளர் கழக மாநாட்டில் இன்று (செப்டம்பர் 7-ஆம் தேதி), கலந்துகொண்டு உரையாற்றும் இனமுரசு சத்யராஜ், ஆத்திகர்களுக்கு ஒரு சவால் விடுத்திருக்கிறார்.
"எனக்கோ, அமைச்சர் வேலு போன்ற தலையில் முடி கொட்டிவிட்ட எங்களைப் போன்றவர்களுக்கோ, எந்தக்கடவுளை கும்பிட்டாவது முடி வளருமேயானால், நாங்கள் எங்கள் பகுத்தறிவு வாதங்களையும், கருப்புச் சட்டையயும் கழற்றிவிட்டு உங்களோடு வரத் தயார்...!
ஆத்திகர்கள் தயாரா?" என்று சவால் விடுத்தார்...
என்ன? எப்படி சவுகரியம்.... ஆத்திகர்கள் தயாரா?

_____________________________________________________________
இன்று மாலை தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்களுக்கு "சமூகநீதிக்கான வீரமணி விருது" வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வாய்ப்புள்ள தோழர்கள் பெரியார் திடலுக்கு வாருங்கள்! மற்றவர்களுக்காக இணையத்தில் நேரடியாக ஒளிபரப்பாகிறது.. அவசியம் பாருங்கள்!
http://periyar.org.in

கருத்துகள்

Bleachingpowder இவ்வாறு கூறியுள்ளார்…
முடவர்கள் நடக்கிறார்கள், குருடர்கள் பார்கிறார்கள், கர்தர் பூமியில் காலூன்றி விட்டார்னு சென்னை பீச்சில் ஜெபக் கூட்டம் நடத்துவார்களே,அங்கே வேண்டுமானால் சத்தியராஜ் முயற்சி செய்து பார்க்கட்டும் :)

இல்லை என்றால் பீர் சாமியார்,வாயில் இருந்து லிங்கம் எடுக்கும் சாமியார் யாரிடமாவது குறி கேட்க சொல்லுங்கள்
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
இன்று காலை நடைபெற்ற மாநாட்டில், மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியில், திரு. நரேந்திர நாயக், வாயிலிருந்து லிங்கம் எடுத்துக்காட்டி, சாமியார் மோசடியை விளக்கினார்.
மாயவரத்தான் இவ்வாறு கூறியுள்ளார்…
மஞ்சள் துண்டை எடுத்து அணிந்து கொள்ளச் சொல்லுங்கள். கைவசம் இல்லையென்றால் வீரமணி வாங்கி அணிவிப்பார். (சில தினங்களுக்கு முன் கருணாநிதிக்கு அணிவித்தாரே?!). கறுப்பு துண்டு அணிவது பகுத்தறிவு அல்ல, இப்போதெல்லாம் மஞ்சள் துண்டு தான் பகுத்தறிவுச் சின்னம். அப்படியே தொடர்ந்து பல நாட்கள் அணிந்தால் தலையில் முளைத்து விடும் முடி.
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
மஞ்சள் துண்டும் மயிறு வளர்க்கவில்லை...
சரி... வேறு எதாவது யோயசனை சொல்லுங்கள்.. மாஆயவரத்தான்
SurveySan இவ்வாறு கூறியுள்ளார்…
தல,

முடி வளர வைக்க கடவுள் என்ன, மதுரை எஸ்.காளிமுத்துவா? :)

:) இது சாதா மேட்டரு, $10,000 செலவு செஞ்சு, ஒரு வாரம் அமேரிக்கா போயிட்டு வந்தா போதும். அழகா முடிய நட்டு கொடுத்திடுவாரு வெள்ளக்கார டாக்டரு.

நட்டுக்கிட்டு டாக்டரை கடவுள்னு நெனச்சு கும்பிடச் சொல்லுங்க சத்யராஜு சார.

கேள்வி கேக்க சொல்லியாத் தரணும் நம்மாளுங்களுக்கு ;)

கடவுள் இல்லைன்னு லபோ திபோன்னு கத்தி வீரமணி&கோ சாதிச்சது என்ன?

24 மணி நேரம் மின்சாரம் கட்டாகாம இருந்தா, தலைவன்னு ஒத்துக்கரேன்னு, டயலாக்கை, மேடையில் பேசியிருந்தா, சத்யராஜின் தெகிரியத்தை பாராட்டியிருக்கலாம் ;)

யார் கண்ணையும் குத்தாத கடவுளை வம்புக்கிழுத்து என்னாகப்போவுதோ.
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
கடவுளுக்காக என்று கத்தி மதவெறியர்கள் பல்லாயிரம் உயிர்களைக் கொன்றுகுவித்தது போல கடவுள் இல்லை என்று சொல்லி நாங்கள் எதுவும் சாதிக்கவில்லைதான்.

மருத்துவம் மயிர் வளர்க்கும் பணியைச் செய்யும் என்பது தான் அறிவியல் தரும் செய்தியாயிற்றே...

மந்திரத்தாலோ, பிரார்த்தனையாலோ மட்டும் மயிரையாவது வளர்க்க முடியுமா என்பதுதான் கேள்வி!

உங்க சர்வேசனுக்காவது முடியுமான்னு கேட்டு சொல்லுங்க பாஸ்!
SurveySan இவ்வாறு கூறியுள்ளார்…
சர்வேசனுக்கு மயிரை வளர்க்க வைக்க முடியாது.

ஆனா, மயிர் இல்லாத ஆளைக் கூட, சினிமால ஜெயிக்க வைச்சு, அவருக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சுத் தர முடிஞ்சிருக்கு ;)

மயிர் போனா என்ன, சவுரி முடி வச்சு நடிக்கலாம்னு, அவருக்குள்ள இரூக்கர தன்னம்பிக்கை இருக்கு பாருங்க்க, அதான் சர்வேசன்.

அவங்க வீட்டம்மா, செய்ர பூஜையெல்லாம் கணக்குல வராது.
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
டோப்பா வைப்பது அறிவியல்! தன்னம்பிக்கையால் வென்றவர்களையெல்லாம் தங்கள் கணக்கில் சேர்த்துக் கொள்வது சவாலுக்கு அழகல்ல தோழர் சர்வேசன்!
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
மந்திரத்தால் மாங்காயும் வரவைக்க முடியாது! மயிரையும் வளர வைக்க முடியாது!
கிரி இவ்வாறு கூறியுள்ளார்…
சத்யாராஜும் எப்படியாவது பேசி மண்டையில முடி வரவைக்க முயற்சி செய்யறாரு போல :-)))
Bleachingpowder இவ்வாறு கூறியுள்ளார்…
//சத்யாராஜும் எப்படியாவது பேசி மண்டையில முடி வரவைக்க முயற்சி செய்யறாரு போல :-))) //

மயிரெல்லாம் வளராது, நாலு விதைய மண்டைல தூவினா பயிறு வேணா முளைக்கும்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owne...

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்...

வீரவணக்கம்! வீரவணக்கம்!!

மாநாட்டுத் தீர்மானங்களின் தொடக்கத்தில் களத்தில் நின்று போராடி மடிந்த கொள்கை மறவர்களுக்கு வீரவணக்கம் தெரிவிக்கும் இரங்கல் தீர்மானம் தெரிவிக்கும் வழக்கம் உண்டு. முற்றிலும் எதிர்பார்க்காத வண்ணம், நம் அனைவரையும் துயரக் கடலில் ஆழ்த்தியதோடு நாம் இன்னும் முனைப்பாக செயலாற்றி, நம் உரிமையை வென்றெடுக்க நம்மைத் தூண்டியுள்ள வீரத் தளபதிகளின் மறைவுக்கு வீர வணக்கம் செலுத்த வேண்டிய நிலையில் நாம் உள்ளோம். வீரவணக்கம் செலுத்துவதோடு, தமிழீழத் தாயகத்தில் எழுச்சி ஏற்கும் நாளாக அமைந்துவிட்ட மாவீரர்களின் இறுதி நிகழ்ச்சியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம். (நன்றி: த.அருள்எழிலன்) வீரவணக்கம்; வீரவணக்கம்! வென்றெடுக்கப் போகும் எங்கள் நாட்டின் வீரவித்துக்கள் நீவீரே! மண்கொள்வதில்லை உங்கள் உடல்கள்...எங்கள் மனங்கொண்டு சினம் வளர்த்து ஈழம் படைக்க உரமாகின்றன! வீரவணக்கம்; வீரவணக்கம்! உம்மைக் கொன்றதும் எங்கள் அமைதி முகத்தைச் சிதைத்ததும் ஒன்றே! பேச்சு தேவையில்லை இனியென சிங்களம் சொல்கிறது! இனி அவர்கள் பேசவேகூடாது என்கின்றன உம்முடல்கள்... செய்து முடிப்போம்! பகையைக் கொய்து முடிப்போம்! வீரவணக்கம்; வீரவணக்கம்!