முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச், 2008 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அண்ணா பரிமளம் மறைவு

பேரறிஞர் அண்ணா அவர்களின் வளர்ப்புப் புதல்வரும், பேரறிஞர் அண்ணா இலக்கியப் பேரவைத் தலைவருமான மானமிகு சுயமரியாதைக்காரர் டாக்டர் அண்ணா பரிமளம் அவர்கள் மறைந்துவிட்டார்கள் என்ற துயருறும் செய்தியை அறிவிக்க வருந்துகிறோம். இறுதி வரை கொள்கையுடன் வாழ்ந்த அந்த கொள்கைக் கோமானுக்கு வீரவணக்கம்! அவர் தொகுத்தளித்த அறிஞர் அண்ணா பகுத்தறிவுக் களஞ்சியம் நூல் வெளிவரப்போகும் இத்தருணத்திலும், அவர் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருந்த அறிஞர் அண்ணா அவர்களின் நூற்றாண்டு தொடங்க இருக்கும் இத்தருணத்திலும் அவரது மறைவு என்பது ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவருக்கு நமது வீரவணக்கம்! அறிஞர் அண்ணாவின் எழுத்துகளை இன்றைய தமிழ் இளைஞர் உலகம் அறிந்துகொள்ள வேண்டும் என்பதில் பெரும் ஆர்வம் செலுத்தி அண்ணாவின் படைப்புகளை இணையத்தில் கொண்டுவருவதில் முனைப்பாக இருந்து செயல்பட்டார். அவரது உழைப்பின் பலனாய் http://www.arignaranna.info/ என்ற தளம் உருவாகி செயல்பட்டு வருகிறது.

சரத்குமாருக்கு மட்டுமல்ல... மானமற்ற மடையர்கள் அனைவருக்கும்!

"தமிழ் வளர வேண்டும். தமிழர்கள் வழிபடும் ஆலயங்களில் தமிழில் மந்திரங்கள் ஒலிக்க வேண்டும். தமிழில் அர்ச்சனைகள் நடக்க வேண்டும் என்ற ஆர்வம் தவறில்லை. ஆனாலும், காலகாலமாய் கடைப்பிடிக்கப்பட்டு வந்த மரபுகளையும் மனதில் கொண்டே மாற்றங்களை நிகழ்த்த அமைதி வழியில் முயற்சிக்க வேண்டும். அதற்கு இறை நம்பிக்கை கொண்டோரை, ஆன்மீகப் பெரியோர்களை, அறிஞர் பெருமக்களை கொண்ட ஒரு குழு அமைத்து அதன் வழியில் தீர்க்கமான சுமூக முடிவை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும் என்று ***** கூறியுள்ளார்." (தினமணி 4.3.2008 ) இது தினமணியில் வந்த செய்தி. அதே பேட்டியை சன் டி.வி-யும் ஒளிபரப்பியது. அதில் சொன்னார், "கடவுளுக்கு எந்த மொழியில் அர்ச்சனை செய்வது என்று ஆகமத்தில் இருக்கிறது அதன்படி தான் செய்ய வேண்டும். கடவுள் நம்பிக்கையற்றவர்கள் இப்பிரச்சினையில் உள்நுழைந்து குழப்பக்கூடாது." என்று. இப்பேட்டி யார் கொடுத்தது என்று நினைக்கிறீர்கள்? பா.ஜ.க. 'இலக்கடை' கணேசன் கொடுத்தது என்றுதானே! அதுதான் கிடையாது; இல்லை 'சோ'...ம்ஹூம்... அதுவும் கிடையாது இந்த அரிய பெரிய கருத்தினை தெரிவித்தவர் 2011-ன் தமிழக முதல்வர்களில் ஒர...